Wednesday, July 9, 2014

"மூஞ்சி புக்கு பிரபலம்"

"மூஞ்சி புக்கு பிரபலம்" இந்த பேர் இங்க உள்ள பலபேர எப்படி மாத்துது பாருங்களேன்...

ஆரம்பத்துல தன்னோட போட்டோவ போடத்தான் வராய்ங்க.. போட்டோவ போட்டதோட மட்டும் இல்லாம எதையாவது ஷேர் செய்து  தொலைய வேண்டியது.

நல்லாயிருக்குனு நாலு லைக் விழ ஆரம்பிச்சவுடனே நான் நான் நான் நினைச்சுகிட்டு தனக்குனு ஒரு பாணினு கெளம்பிருரது.

அமெரிக்க அதிபர்லேந்து ஆண்டிபட்டி  அருணாயிரம் வரையும் எல்லாத்தையும் ஓட்டுறேங்குற பேர்ல வம்பிழுக்க வேன்டியது..டெய்லி நாலு தத்துவம் சொல்றது..

இந்த நேரத்துலத்தான் வாழ்க சொல்றதுக்கு ஒரு அடிமை கும்பல் பார்ம் ஆகியிருக்கும்..

பின்னாடி காலைல எழுந்து கழிவறை போறதுலேந்து நைட் பாத்ரூம் போற வரை எல்லாத்தையும் லைவ் அப்டேட் பன்ன வேண்டியது..

யாராவது எதாவது கேட்டா ஸ்டேடஸ்லத்தான் பதில் குடுக்க வேண்டியது...

என்னப்பா இப்டி எழுதுறனு கேட்டா " என் சுவர்!! என் உரிமை !! னு கல்யான் ஜூவல்லர்ஸ் பிரபுகணக்கா டயலாக் பேசுறது..பின்னால அடிமை கும்பல அனுப்பி திட்டுறது..

இன்னும் நிறைய செய்ய  வைக்குது இந்த " முகநூல் பிரபலம் " ங்குற வார்த்தை..

இப்படியெல்லாம் பண்ணி என்னத்த அள்ளிக்கட்ட போறீங்களோ தெரியல !!

#சில_பிரபல_புலிகேசிகளுக்கும்_அவர்களுடைய_மங்குனிகளுக்கும்_சமரப்பனம்.

( பி.கு:- நிறைய விதிவிலக்கானவர்கள் உண்டு )
 

 

 

 பேஸ்புக் பிரபலங்கள் பாமரனின் பார்வையில் 

 

 

Muhammad Imthiyaz

No comments:

Post a Comment

சகோதரர்களே உங்கள் கருத்துகளை பகிரலாமே