அறிந்து கொள்ளுங்கள் ;
1. நாம் யார்?
நாம் முஸ்லிம்கள்.
2. நம் மார்க்கம் எது?
நம் மார்க்கம் இஸ்லாம்.
3. இஸ்லாம் என்றால் என்ன?
அல்லாஹ்வின்
கட்டளைக்கு அடிபணிவது.
4. இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகள்
எத்தனை? அவை யாவை?
இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகள்
ஐந்து.
அவை கலிமா, தொழுகை, நோன்பு,
ஜகாத், ஹஜ்.
5. கலிமாவை கூறு
லாஇலாஹ
இல்லல்லாஹு முஹம்மதுர்
ரஸூலுல்லாஹ்
6. கலிமாவின் அர்த்தத்தை கூறு.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத்
தவிர வேறு யாருமில்லை,
முஹம்மது நபி (ஸல்) அவர்கள்
அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள்.
7. ஒரு நாளைக்கு கடமையான
தொழுகை எத்தனை? அவை யாவை?
ஒரு நாளைக்கு கடமையான
தொழுகை ஐந்து. அவை
சுப்ஹு, லுஹர், அஸர், மக்ரிப், இஷா
8.
நோன்பு நோற்பது எப்போது கடமை?
ரமலான் மாதத்தின் 30 நாளும்
நோன்பு நோற்பது கடமையாகும்.
9. ஜகாத் என்றால் என்ன?
பணக்காரர்கள், ஏழைகளுக்கு தம்
செல்வத்திலிருந்து 40ல்
ஒரு பகுதியை கொடுப்பது ஜகாத்
ஆகும்.
10. ஹஜ் என்றால் என்ன?
துல்ஹஜ்ஜி மாதத்தில் மக்காவில்
புனித 'காபா'வை வலம் வந்து,
முக்கிய இடங்களில் தங்கி, வணக்கம்
புரிவது ஹஜ் ஆகும்.
11. ஹஜ் செய்வது யார் மீது கடமை?
உடல் வசதியும், பண வசதியும்
உடையவர்கள் மீது ஆயுளில்
ஒரு முறை
ஹஜ் செய்வது கடமையாகும்.
12. ஈமான் என்றால் என்ன?
ஈமான் என்பது உறுதியான
நம்பிக்கை ஆகும்.
13. முதன் முதலில் படைக்கப்பட்ட
மனிதர் யார்?
முதல் மனிதர் நபி ஆதம் (அலை)
அவர்கள்.
14. முதன் முதலில் படைக்கப்பட்ட
பெண்மணி யார்?
ஆதம் (அலை) அவர்களின் மனைவியான
ஹவ்வா (அலை)
15. தாயும், தந்தையும் இல்லாதவர்
யார்?;
நபி ஆதம் (அலை), ஹவ்வா (அலை)
ஆகிய இருவர்.
16. தந்தை இல்லாமல் பிறந்தவர் யார்?
நபி ஈஸா (அலை) அவர்கள்.
17. நாம் யாருடைய பிள்ளைகள்?
நபி ஆதம் (அலை) அவர்களின்
பிள்ளைகள்.
18. நாம் யாருடைய உம்மத்தினர்?
நாம் முஹம்மது நபி (ஸல்) அவர்களின்
உம்மத்தினர்.
19. அல்லாஹ்
மனிதனை எதிலிருந்து படைத்தான்?
அல்லாஹ்
மனிதனை களி மண்ணிலிருந்து படைத்தான்.
20. மலக்குகளை அல்லாஹ்
எதிலிருந்து படைத்தான்?
அல்லாஹ்
மலக்குகளை ஒளியிலிருந்து படைத்தான்.
21. அல்லாஹ்
ஷைத்தானை எதிலிருந்து படைத்தான்?
அல்லாஹ்
ஷைத்தானை நெருப்பிலிருந்த
ு படைத்தான்.
22. ஷைத்தான்களின் தலைவன் யார்?
இப்லீஸ்.
23. மனிதர்களின் எதிரி யார்?
இப்லீஸ. ஷைத்தான்.
24. குர்ஆனில் எத்தனை நபிமார்களின்
பெயர்கள் கூறப்பட்டுள்ளன?
25 பேர்
25. அல்லாஹ் மனிதர்களை எதற்காக
படைத்தான்?
அல்லாஹ்வை வணங்குவதற்காக.
26. அல்லாஹ் மனிதனை என்ன
தன்மையில் படைத்தான்?
எல்லா படைப்பினங்களிலும்
சிறந்தவனாக
27. ஷைத்தான் என்பதின் பொருள் என்ன?
அல்லாஹ்வின் அருளை விட்டும்
தூரமானவன் என்பதாகும்.
28. இப்லீஸ் என்பதன் பொருள்?
குழப்பவாதி என்பது பொருள்.
29. ஷைத்தான்கள் எந்த இனத்தைச்
சார்ந்தவர்கள்?
ஜின் இனத்தைச் சார்ந்தவர்கள்.
30. நம் வேதத்தின் பெயர் என்ன?
அல்குர்ஆன்
31. நபி (ஸல்) அவர்களுக்கு அல்குர்ஆன்
எந்த இரவில் வழங்கப்பட்டது?
ரமலான் மாதம் லைலதுல் கத்ர் இரவில்
வழங்கப்பட்டது.
32. நபி (ஸல்) அவர்கள் எந்த வயதில்
நபி ஆனார்கள்?
40 வயதில்
33. மக்கீ சூரா என்றால் என்ன?
மக்காவில் இறங்கிய சூரா.
34. மதனீ சூரா என்றால் என்ன?
மதீனாவில் இறங்கிய சூரா.
35. குர்ஆனில் பிஸ்மி இல்லாத
சூரா எது?
குர்ஆனில் பிஸ்மி இல்லாத
சூரா அத்தவ்பா ஆகும்.
36. (ஸல்) என்ற
சுருக்கத்தை எப்படி வாசிக்க
வேண்டும்?
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
என்று வாசிக்க வேண்டும்.
37. நபிமார்கள் பெயரைக் கேட்டால்
என்ன சொல்ல வேண்டும்?
அலைஹிஸ்ஸலாம் என்று சொல்ல
வேண்டும்.
38. நம் நபியின் பெயரைக் கேட்டால்
என்ன சொல்ல வேண்டும்?
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
என்று சொல்ல வேண்டும்.
39. திருக்குர்ஆனில் உள்ள சூராக்கள்
எத்தனை?
114 சூராக்கள் ஆகும்.
40. நோன்பாளிகள் சொர்க்கத்தின் எந்த வாசல் வழியாக
செல்வார்கள் ?
ரைஹான் எனும் வாசல்
41. திருக்குர்ஆனில் உள்ள
சஜ்தா ஆயத்துக்கள் எத்தனை?
14
42. குர்ஆனில் முதன் முதலில்
இறங்கிய வசனம் எது? இக்ரஃ
பிஸ்மி ரப்பிகல்லதீ
43. இஸ்லாமிய வருடத்தின் முதல்
மாதம் எது?
முஹர்ரம்
44. நபி (ஸல்) எந்த மாதத்தில்
பிறந்தார்கள்?
ரபீயுல் அவ்வல்
45. மிஃராஜ் என்றால் என்ன?
நபி (ஸல்) அவர்களின் விண்வெளிப்
பயணம்
46. பிறர் தும்மினால் நாம் என்ன
சொல்லவேண்டும்?
யர்ஹமுகல்லாஹ்.
47. திருக்குர்ஆனிலேயே மிகச்
சிறிய அத்தியாயம்-சூரா எது?
சூரா கவ்ஸர்.
48. நபிப் பட்டம் கொடுக்கப்பட்ட போது,
நபி (ஸல்) அவர்களின் வயது எத்தனை?
40 வயது
49. துன்பம் ஏற்பட்டால் என்ன சொல்ல
வேண்டும்?
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
50. உயிரை வாங்கும் வானவர் யார்?
மலக்குல் மௌத்
51. திருக்குர்ஆனின் மொத்த வசனங்கள்
(ஆயத்துக்கள்) - எத்தனை?
6666
52. தும்மினால் என்ன சொல்ல
வேண்டும்?
அல்ஹம்து லில்லாஹ்
53. வஹீ என்றால் என்ன?
அல்லாஹ்வின் செய்தி.
54. வஹீ கொண்டு வரும் வானவர் யார்?
ஜிப்ரயீல் (அலை)
55. இஸ்திக்பார் என்றால் என்ன?
பாவமன்னிப்பு தேடுவது.
56. முதன் முதலில் பாங்கு சொன்னவர்
யார்?
பிலால் (ரளி)
57. முதல் கலீபா யார்?
அபூ பக்கர் சித்தீக் (ரளி)
58. மன்னிக்கப்படாத பாவம் எது?
குப்ர் - இறைமறுப்பு, ஷிர்க் -
அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்.
59. கொடுங்கோல மன்னன்
பிர்அவ்னை எதிர்த்துப் போராடிய
நபி யார்?
நபி மூஸா (அலை)
60. எவருடைய
பெற்றோருக்கு கியாமத்து நாளில்
கிரீடம் சூட்டப்படும்?
குர்ஆனை மனனம் செய்த ஹாபிழ்களின்
பெற்றோருக்கு
61. அல்லாஹ்வுக்கு பிரியமான இடம்
எது?
பள்ளிவாசல்
62. யாருடைய காலின் கீழ் சொர்க்கம்
உள்ளது?
தாயின் காலின் கீழ்.
63. பிள்ளைகளை தொழுகைக்கு ஏவ
வேண்டிய வயது. 7 வயது.
64. பிள்ளைகள் வெளியே போகும்
போது வீட்டிள்ளோர் என்ன சொல்ல
வேண்டும்?
ஃபீ அமானில்லாஹ்
65.
நமது செயல்களை பதிவு செய்யும்
மலக்குகளின் பெயர் என்ன?
கிராமன் காதிபீன்.
66. பிர்அவ்ன் ஆட்சி செய்த நாடு எது?
எகிப்து (மிஸ்ர்)
67. இறைத் தூதர்களை அரபியில்
எப்படி சொல்வது?
நபி, ரசூல்
68. இஸ்லாம் என்பதின் பொருள் என்ன?
அல்லாஹ்வின்
கட்டளைகளுக்கு அடிபணிவது.
69. உலகம் முழுவதையும்
படைத்தது யார்?
அல்லாஹ்.
70. அஸ்ஸலாத் என்றால் என்ன?
தொழுகை
71. திருக்குர்;ஆன் எந்த மொழியில்
உள்ளது?
அரபி மொழியில்.
72. அர் ரஹ்மான் என்பதின் பொருள்
என்ன?
அளவற்ற அருளாளன்.
73. திருக்குர்ஆனின் முதல்
சூரா எது?
சூரா அல் பாத்திஹா
74. முஸ்லிமின் முதல் கடமை என்ன?
தொழுகை.
75. மக்காவில் உள்ள அல்லாஹ்வின்
இல்லம் எது?
கஃபா.
76.
அல்லாஹ்வுக்கு மாறு செய்தவர்கள்
மறுமையில் தண்டனை பெறும் இடம்
எது?
நரகம்.
77. பத்ருப் போரில் கலந்துக் கொண்ட
ஸஹாபாக்கள் எத்தனை பேர்.?
313 நபர்கள்.
78. ஹஜ்ஜதுல் விதா என்றால் என்ன?
நபி (ஸல்) அவர்கள் மறைவதற்கு முன்
செய்த கடைசி ஹஜ் ஆகும்.
79. நபி (ஸல்) அவர்கள் செய்த ஹஜ்
எத்தனை?
ஒன்று
80. நபிமார்களில் மிகச்செல்வந்தரராக
வாழ்ந்த நபி யார்?
நபி சுலைமான் (அலை)
81. நபி (ஸல்)
அவர்களுக்கு எத்தனை பிள்ளைகள்?
ஏழுபேர். 3ஆண்கள் , 4 பெண்கள்
82. ஹதீஸ்களை அதிகம்
அறிவிப்பு செய்த ஸஹாபி யார்?
அபூ ஹுரைரா (ரளி)
83. அதிகமான
ஹதீஸ்களை அறிவிப்பு செய்த
நபி (ஸல்) அவர்களின் மனைவி யார்?
அன்னை ஆயிஷா (ரளி)
84. திருக்குர்ஆனில் பிஸ்மி இல்லாத
சூரா எது?
சூரா தவ்பா.
85. முதன் முதலில்
இஸ்லாத்தை ஏற்றவர் யார்?
கதீஜா (ரளி)
86. திக்ருகளில் சிறந்தது எது?
லாஇலாஹ இல்லல்லாஹ்
87. சிறுவர்களில் முதலில்
இஸ்லாத்தை ஏற்றவர் யார்?
அலி (ரளி)
88. நபித் தோழர்களில் அதிகம் செல்வம்
படைத்தவர் யார்?
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரளி)
89. ஜும்ஆ
தொழுகைக்கு எத்தனை ரக்அத்கள்?
2 ரக்அத்கள்.
90. நபி (ஸல்) அவர்களின் பெற்றோர்
யாவர்?
தாயார் ஆமினா, தந்தையார்
அப்துல்லாஹ்.
91. நபிமார்களின் பெயரைக் கேட்டால்
என்ன சொல்ல வேண்டும்?
அலைஹிஸ்ஸலாம் என்று சொல்ல
வேண்டும்.
92. நபித்தோழர்களின் பெயரைக்
கேட்டால் என்ன சொல்லவேண்டும்?
ரலியல்லாஹு அன்ஹூ என்று சொல்ல
வேண்டும்.
93. இறைநேசர்கள் நல்லடியார்களின்
பெயரைக் கேட்டால் என்ன
சொல்லவேண்டும்?
ரஹ்மத்துல்லாஹி அலைஹி என்று சொல்ல
வேண்டும்.
94. முதன் முதலில் ஏற்பட்ட
கொலை எது?
ஆதம் (அலை) அவர்களின் மகன் காபில்,
தன் சகோதரர்
ஹாபிலை கொலை செய்தது.
95. சொர்க்கங்களிலேயே உயர்ந்த
சொர்க்கம் எது?
ஜன்னதுல் பிர்தவ்ஸ்.
96. எந்த
முஸ்லிமுக்கு தொழுகை கடமையில்லை?
மனநிலை பாதிக்கப்பட்டவருக்கு
97. நபி (ஸல்) காலத்தில் தன்னை 'நபி'
என்று சொன்ன பொய்யன் யார்?
முஸைலமதுல் கத்தாப்.
98. ஹதீஸ் கிரந்தங்களில் முதலிடம்
பெற்ற நூல் எது?
ஸஹீஹுல் புகாரி.
99. உண்மையான வீரன் யார்?
கோபம்
வரும்போது தன்னை கட்டுப்படுத்தி
கொள்பவன்.
100. நபி (ஸல்) அவர்கள் வாழ்வு காலம்.
63 ஆண்டுகள
Haniffa Sulaim
No comments:
Post a Comment
சகோதரர்களே உங்கள் கருத்துகளை பகிரலாமே