Saturday, July 19, 2014

சுட்டு விழ்த்தப்பட்ட மலேசியா விமானம் தரையில் விழுந்து வெடிக்கும் காட்சி

சுட்டு விழ்த்தப்பட்ட மலேசியா  விமானம் தரையில் விழுந்து வெடிக்கும் காட்சி

video from facebook  sulu sha

அமைதி வேண்டும் இங்கு!! (கவிதை)



 குடிக்க நீரில்லை இங்கு மழையானாலும், 

வெயிலானாலும் குந்த வைக்க குடிசையில்லா 

குடிமக்களோ வீதிகளில் வாசம் எல்லோர்க்கும் உணவில்லை .


இங்கு எத்தனையோ பட்டினிச் சாவுகள் 

இங்கு எல்லார்க்கும் கல்வியில்லை

 இங்கு எத்தனையோ குழந்தைகள் உழைப்பவர்களாய் 

இந்த கவலை யார்க்குமில்லை 

மசூதிகளை தகர்த்து கோயிலாக்கும் பிரிவினைவாத 

அரசியல்வாதிகள் நாட்டை பிரித்துவிடும் 

மதவாத சூழ்ச்சிகளில் பந்நூறு ஆண்டின்.

 பாபர் மசூதியை பட்டாளத்துடன் தரைமட்டமாக்கிய 

தண்டனையின் குற்றவாளிகள் இன்று அரியனையில் - 

ஆட்சி பீடத்தில் கோடிக் கோடியாய் கோயில்கள் இருக்க

மசூதியை இடித்து விட்டு - தனக்காக கோயில் ஒன்று கேட்டது ராமரா 

மதிகெட்ட அரசியல் பண்ணும் மானிடன் செய்யும் பிரிவுச் சதியிது

 மதத்தை அரசியலாக்கி ஆட்சிபீடத்தில் அமர்ந்து கொண்டு 

சுயலாபம் காணத் தேடும் ஆட்சி மோகத்திற்கு மனிதத்தை பலி 

கொடுக்கும் அரசியல்வாதிகளின் சூழ்ச்சி இது 

மக்கள் புரிந்து கொள்ளுங்கள் மானிடம் காக்க குரல் கொடுங்கள் 

உன் வீட்டை நான் இடித்து என் வீடு கட்டிக் கொண்டால் 

நீ மௌனமாய் இருப்பாயா நாங்கள் இருக்கிறோம் 

நீதியின் தீர்ப்பு நோக்கி நீயும் இந்தியன்தான் என்றால் 

நீதியை ஒப்புக்கொள் அறிவியல் முன்னேற்றம் பெருக்கு 

அரசின் சாதனைகளாய் மக்களைப் பிரிக்கும் 

மதவாத அழிவுப்பாதையை விலக்கு சாலைகள் செம்மையாக்கு 

அது நாட்டின் முதுகெலும்பு 

சாதிச் சண்டைகள் அகற்று -அது நாட்டின் நலனுக்கு தெம்பு 

கல்விச் சாலைகள் மேம்படுத்து காலம் உன் பெயர் சொல்லும்

காட்டு மிராண்டிகளாய் - மக்களிடம் மத வெறியைத் தூண்டாதே - 

நாளை மனிதம் உன்னை மன்னிக்காது 

மதம் பிடித்த அரசியல் வாதியே மதவாதம் தூண்டாதே மக்கள் 

அமைதியாய் வாழட்டும் மத நல்லிணக்கம் வார்த்தையில் வேண்டாம் - 

நம் வாழ்க்கையில் ஆக்குவோம

 mohamed sha

இந்து_பத்திரிக்கையின்_இந்துத்வா_சிந்தனையை_பரப்புங்கள்‬ ....நடுநிலையாளர்களே



 இனிமேல் the hindu பத்திரிக்கையின் vote லிங்கை யாரும் share செய்யவேண்டாம்.....அவர்கள்  இணையதளத்தின் பார்வையாளர்கள் view ய் அதிகரித்து பணம் சம்பாரிக்க செய்கின்ற வழி இது.எவ்வளவு பெரிய அயோக்கிய தனம் .......


#‎இந்து_பத்திரிக்கையின்_இந்துத்வா_சிந்தனையை_பரப்புங்கள்‬ ....
நேற்று பொது சிவில் சட்டம் இயற்ற மத்திய அரசு முனைப்பு காட்டுவது சரியா,தவறா என வாக்கெடுப்பு நடத்தியது...
அதில் பெரும்பாலான மக்கள் 82 % பேர் ‪#‎சரியல்ல‬ என்றே வாக்களித்தனர் ...
16 % பேர் மட்டுமே சரி என்றும் ,2% பேர் நோட்டோ வுக்கும் வாக்களித்தனர் ...
ஆனால் இப்பத்திரிகையோ இன்று தன்னுடைய செய்தியில் மத்திய அரசின் முடிவு சரியானது என்று 58% மக்களும் ,சரியல்ல என்று 38 % மக்களும் ,நோட்டோ வுக்கு 4% பேர் வாக்களித்துள்ளனர் என்றும் பொய்ச்செய்தி வெளியிட்டுள்ளது...
இந்து பத்திரிக்கையின் தலைமை அலுவலகத்துக்கு போன் செய்து கண்டனத்தை தெரிவியுங்கள் சகோஸ்...
இந்த மாதிரி கருத்துக்கணிப்பு நடத்திவிட்டு பின்னர் காவி சிந்தனை உள்ளவர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு முடிவு வெளியிடும் பத்திரிகை தான் நடுநிலை பத்திரிக்கையா ???


albee nizam

பணமில்லையா ஹார்ட் அட்டாக் வந்து சாகட்டும் !




இதய வால்வு கோளாறு உள்ளிட்ட இதயநோய் உள்ளவர்கள் நாள்தோறும் ஒரு வேளை சாப்பிட வேண்டிய உயிர்காக்கும் மாத்திரையின் பெயர் டிகாக்ஸின். இதன் விலை 60 காசு. ஆக மாதம் இருபது ரூபாய் செலவழித்தால் தீடிர் இதயத் தாக்குதலை பெருமளவு தடுக்கமுடியும்.

இவ்வளவு நாளும் வெளிச்சந்தையில் கிடைத்துவந்த இந்த மாத்திரை இப்போது தீடீரெனக் கிடைக்கவில்லை. இதனால் தமிழகத்தில் பல இடங்களில் மக்கள் கடை கடையாய் ஏறி இறங்கியும் இந்த மாத்திரைகள் கிடைத்தபாடில்லை. இந்த மாத்திரைக்கு சமமாக வேறு மாத்திரைகள் பரிந்துரைக்கப்பட்டாலும், அவை டிகாக்ஸின் மாத்திரைக்கு ஈடாகாது என இதயநோய் மருத்துவர்கள் சொல்கின்றனராம்.

மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கட்டாயமாக உற்பத்தி செய்ய வேண்டிய மருந்து பட்டியலில் இந்த மருந்தும் உள்ளதால் அரசு மருத்துவமனைகளுக்கு மட்டும் இந்த மாத்திரை கொடுக்கப்படுகிறதாம். ஆனால் தினசரி இந்த மாத்திரைக்காக அரசு மருத்துவமனை சென்று வரிசையில் நின்று வாங்கினால் அதுவே இதயத்தின் இயக்கத்தை நிறுத்திவிடும். 60 காசு மாத்திரைக்காக அரை நாள் முழுவதும் செலவழிக்கும் அளவுக்கு நம் மக்களுக்கு வசதியில்லையே.

ஏற்கனவே இந்த மருந்தை தயாரித்து வந்த கிளாக்ஸோ, மேக்லாய்ஸ் நிறுவனங்கள் இதன் இலாபம் குறைவு என்பதால் உற்பத்தியை நிறுத்தி விட்டன. அறுபது காசில் மொத்த விற்பனையாளர், சில்லறை விற்பனையளர் கழிவு போக சில நயா பைசாக்கள்தான் இலாபமென்பதால் தற்போது டிகாக்ஸின் வெளிச்சந்தைக்கு கொடுக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த மாத்திரையை இப்படி இதயநோயாளிகளைப் பற்றிய கவலையில்லாமல் கொன்றதற்கு காரணம் வேறு விலை கூடிய மாத்திரைகளை அறிமுகப்படுத்துவதற்குத்தான். இனி அறுபது காசு மாத்திரைகள் கிடைக்கவில்லை என்பதால் மருத்துவர்கள் புதிய விலைகூடிய மாத்திரைகளை எழுதுவார்கள்.

ஆக இதய வலி வந்தால் பணமிருக்க வேண்டும். இல்லையேல் சாக வேண்டும். இந்தியாவில் தாராளமயம் வந்து செல்போன் என்ன, பேரங்காடிகள் என்ன, என்று வாய் பிளப்பவர்கள் எவரும் இந்த தனியார்மயமும், தாராளமயமும் பணமிருப்பவன் மட்டுமே வாழ்க்கைய அனுபவிக்க வேண்டும், மற்றவர்கள் சாக வேண்டுமென்ற விதியை மறைமுகமாக இல்ல நேரடியாகவே பிரச்சாரம் செய்வதை புரிந்து கொள்வதில்லை. அப்பல்லோக்களும், 24 மணிநேர மருத்துவமனைகளும் பெருகிவரும் நாட்டில் மக்களின் பணம் வம்படியாக கொள்ளையடிப்பதற்கு ஒரு எடுத்துக்காட்டுதான் இந்த இதயவலி மாத்திரையின் மறைவு.

விசித்திர உலகில் மனிதம் தேடி…..

 

மாபெரும் கூட்டமொன்று
பூங்காவில் நுழைந்து
மலர்களைக் கொய்து

பாதங்களில் நசுக்கி
முட்களை அணிந்து போகிறது…

அடர்ந்த வனமொன்றில்
வானரங்கள் கூட்டம்
வெட்கம் கடந்தே
தாவியும் குதித்தும்
தன் இனமென பறைசாற்றுகிறது…

கனிகளை விடுத்து
காய்கள் பறித்தே
வெறுக்கத் தின்னும்
வேங்கைகள் கூட்டம்
மதங்கள் போர்த்திக் கொள்கிறது….

பாவங்கள் செய்பவன்
படைத்தவன் இல்லையென
கொடுத்தவனை மறந்து
கொடுமைகள் செய்து
நியாயம் கற்பிக்கும் நாத்திகர்கள்….

தேனைச் சொரியும்
மலர்கள் போலவே
வேடங்கள் புனைந்து
தேளாய் கொட்டிடும்
குள்ள நரி கூட்டங்கள்…..

பன்றியின் மாமிசம்
பரவசம் தருவதாய்
ருசித்தே உண்டு
ரசித்து சொல்லும்
ரகசியக் கூட்டங்கள்…..

யாதெனச் சொல்வேன்
கூர்முனை பிடித்தவன்
உதிர்த்திடும் வார்த்தைகள்
குதர்க்கம் கொண்டு
குற்றம் காணுகையில்…

மொழி பெயர்க்க
மறந்து போய்
விழி பிதுங்கி நிற்கிறேன்
விசித்திர உலகில்
மனிதம் தேடி…..

சின்னஞ்சிறிய வாழ்வுதனில்
சிலர் மனிதம் போர்த்திய
மிருகங்களாய் மாறியே
ஊறிய சாக்கடை நாற்றத்தின் ஒரு
சிறுதுளி இதுவென சொல்லிடத்
துணிந்தேன்….




Mohamed Sha

மனிதம் மரணித்தபோது....... படங்களுடன்

மனிதம் மரணித்தபோது....... படங்களுடன்

இஸ்ரேலிய பயங்கரவாதிகளால் கொல்லபட்ட பாலஸ்தீன
குழந்தைகள்



































Friday, July 18, 2014

இது வரை உலக நாடுகள் சுட்டு வீழ்த்திய விமானங்கள்..!!!

எல்லைக்குள் புகுந்ததாக / தவறுதலாக சுட்டதாக இது வரை உலக நாடுகள் சுட்டு வீழ்த்திய விமானங்கள்..!!!
1.Libyan Arab Airlines Flight 114 -- On February 21 1973 - இஸ்ரேல் வான்வெளியில் சுட்டு வீத்தபட்டது - உயிர் பலி 113

2. Korean Air Lines Flight 007 -- On September 1, 1983 - நியூயார்க் நகரிலிருந்து சென்ற விமானத்தை சோவியத் சுட்டு வீழ்த்தியது. உயிர் பலி - 239.

3.Iran Air Flight 655 -- On July 3, 1988 - அமிரகத்தில் வைத்து அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியது - நேவி பயிற்சியில் தவறுதலாக நடந்ததாக அமெரிக்க வருத்தம் தெரிவித்ததாம் - உயிர் பலி 290.

.4.Transair Georgia -- On September 21, 1993, ஜார்ஜியாவில் இரு விமனங்களை ஒரே நேரத்தில் விழ்த்தியது 108+27 - 136 பயணிகள் பலியானார்கள்.

5.Siberian Airlines Flight 1812 -- On October 4, 2001 ரஷ்யாவில் சுட்டு வீழ்த்தப்பட்டது - உயிர் பலி 154.
இன்று:-

6.Malaysia Airlines Flight MH17 உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது - உயிர் பலி 295


mohamed yasin shajahan

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் விபத்து படங்களுடன்

உக்ரைனில் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை சுட்டுத் தள்ளிய ரஷ்ய ஆதரவுப் படை: 295 பேர் பலி
கோலாலம்பூர்: நெதர்லாந்தில் இருந்து 295 பேருடன் மலேசியா கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் உக்ரைனில் ரஷ்ய ராணுவத்தின் ஆதரவுப் படையால் சுட்டுத் தள்ளப்பட்டது. இதில் விமானத்தில் இருந்த 295 பேரும் பலியாகியுள்ளனர். 

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 295 பேருடன் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு இன்று மதியம் 12.10 மணிக்கு கிளம்பியது. எம்.ஹெச். 17 என்ற அந்த விமானம் உக்ரைனில் ரஷ்ய எல்லைக்கு அருகே செல்கையில் ரஷ்ய ராணுவத்தின் ஆதரவுப் படை தீவிரவாதிகள் பக் ஏவுகணை வீசித் தாக்கினர். இதையடுத்து விமானம் ஷக்தர்ஸ்க் என்ற இடத்தில் தரையில் விழுந்து நொறுங்கியது. விமானத்தின் எரிந்த பாகங்கள் அந்த பகுதியில் சிதறிக் கிடக்கின்றன. 

இது குறித்த புகைப்படங்கள் ட்விட்டரில் வெளியாகியுள்ளன. உக்ரைன் விமானங்களை ரஷ்யாவும், ரஷ்ய விமானங்களை உக்ரைனும் தாக்கிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தான் மலேசிய விமானத்தை உக்ரைன் அல்லது ரஷ்யா தவறுதலாக நினைத்து தாக்கியிருக்கும் என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில் விமானம் எரிந்துவிட்டதாகவும் அதில் பயணம் செய்த 280 பயணிகள் மற்றும் 15 சிப்பந்திகள் என 295 பேருமே உடல் கருகி இறந்துவிட்டதாகவும் உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுட்டுத் தள்ளப்பட்ட விமானம் போயிங் 777-200 ரகத்தைச் சேர்ந்தது. முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 71 என்ன ஆனது என்று தெரியாமல் உள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.









Iam Siraj

இப்படித்தான் இருக்கிறது பெரும்பாலான ஊடகங்களின் இஸ்லாமியர் குறித்த பார்வை

இப்படித்தான் இருக்கிறது பெரும்பாலான ஊடகங்களின் இஸ்லாமியர் குறித்த பார்வை

நாம் இதனை நியூயார்க் நகரில் இருந்தே ஆரம்பிக்கலாம்.

ஒரு காலைப் பொழுதொன்றில் நியூயார்க் நகர வீதியில் வந்து கொண்டிருந்த இளைஞன் அருகிலுள்ள பூங்காவில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்பதைக் காண்கிறான்.
அந்த நேரம் பார்த்து எதிர்பாரா விதமாக சிறுமி ஒருத்தியின் மீது நாய் ஒன்று பாய்கிறது. அதுவும் வெறி பிடித்த தெரு நாய். (விலங்குகள் நலச் சங்கத்தினர் மட்டும் இதைத் திரு.நாய் என்று மாற்றிப் படிக்கவும்). நாய் சிறுமியைக் குதறத் தொடங்க மற்ற சிறுவர்களும் பெற்றோர்களும் பயத்தில் தெறித்து ஓடுகிறார்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து கொண்டிருக்கிற அந்த அவலத்தைக் கண்டு பூங்காவினுள் பாய்கிறான் அந்த இளைஞன். வெறி பிடித்த நாயோடு கடுமையாகப் போராடி இறுதியில் அதைக் கொன்று சிறுமியின் உயிரைக் காப்பாற்றுகிறான்.
வழக்கம்போல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு போலீஸ் அந்த இளைஞனின் அருகில் வந்து... “நீதான் உண்மையான கதாநாயகன்... நாளை காலை பேப்பரில் பார். ‘வீரம் மிக்க ஒரு நியூயார்க்காரன் வெறிபிடித்த நாயோடு போராடி ஒரு சிறுமியின் உயிரைக் காப்பாற்றினான்’ என்று வரும்...” என்கிறான்.
அந்த இளைஞனோ “நான் நியூயார்க்காரன் இல்லையே அய்யா...” என்கிறான் அப்பாவியாக..
“சரி விடு அப்படியானால் ‘அமெரிக்க இளைஞன் ஒருவன் தீரமாக நாயோடு போராடி ஒரு சிறுமியின் உயிரைக் காப்பாற்றினான்’ என்று பேப்பரில் வரும்’ என்கிறான்.
அதற்கும் அந்த இளைஞன் அய்யா நான் அமெரிக்காவைச் சேர்ந்தவனும் இல்லையே என்கிறான் மீண்டும் அப்பாவியாக.
“அட அப்ப நீ அமெரிக்கனும் இல்லையா... அப்படியானால் நீ எந்த நாடு? அதையாவது சொல்” என்கிறான். “அய்யா நான் ஈராக்கில் இருந்து வருகிறேன் என்று சொல்ல...
அடுத்த நாள் அந்த போலீஸ்காரன் சொல்லிச் சென்றது மாதிரியே பேப்பரில் செய்தி வருகிறது இப்படி :
“வெறிபிடித்த முஸ்லிம் பயங்கரவாதி ஒருவன் அப்பாவி நாயை பூங்காவில் சுட்டுக் கொன்றான்” என்று.
இப்படித்தான் இருக்கிறது பெரும்பாலான ஊடகங்களின் இஸ்லாமியர் குறித்ததான சித்தரிப்பு.-- 


@Pamaran Tamil Nadu

Thursday, July 17, 2014

ஒரு ஜனாஸா தன் நிலையை பற்றி கூறும் உருக்கமான மறுமை சிந்தனை............


எனது பெயர் ஜனாஸா!
நான் படுக்கையில் கிடக்கிறேன். என்னுடைய பிள்ளைகள், சகோதரர்கள், சகோதரிகள் அனைவரும் என்னருகில் கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருக்கின்றனர்.


என்னுடைய நெருங்கிய நண்பர்களும் என்னைச் சூழ்ந்து நின்றுகொண்டு என் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
திடீரென்று எனது மூச்சு பெரிதாக இழுத்தது. பெரும் மூச்சாக இழுத்து இழுத்து விட்டேன். எனது நிலைமை மோசமாவதைக் கண்ட சிலர் யாசீன் சூராவை ஓத ஆரம்பித்தனர்.

மூச்சு இப்பொழுது கொஞ்சம் இலேசானது. எனது கண்களைத் திறக்கிறேன். ஏதோ ஒன்றை எனது கண்கள் காண்கின்றன. ஆம்! வந்துவிட்டார். மரணத்தின் வானவரான மலக்குல் மவ்த் வந்துவிட்டார்.
நிரந்தரப் பயணத்தை நான் ஆரம்பிக்கப் போகிறேன். எனது வாய் திறந்தது. என் சகோதரன் சில துளிகள் தண்ணீரை எனது வாயில் ஊற்றுகிறான். அது அநேகமாக “ஜம் ஜம்” தண்ணீராக இருக்கும். மரணத் தறுவாயில் எனது வாயில் ஊற்ற வேண்டும் என்பதற்காக நான் அதனைப் பாதுகாத்து வைத்திருந்தேன்.

அனைவரும் “லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்” என்று மொழிய ஆரம்பித்தனர். எனது பார்வை பறி போய் விட்டது. எனது நாடி நரம்புகளெல்லாம் அடங்கிப் போய் விட்டன. எனது உணர்வுகளும் மங்கி மரத்துப் போய் விட்டன.
ஆனால் என்னால் இப்பொழுதும் கேட்க மட்டும் முடிகிறது. என் அன்புக்குரியவர்கள் அழும் சப்தம் கேட்கிறது. நான் இன்னும் இறக்கவில்லை.

ஒரு சிறுமி உயிருக்கு பயந்து நிர்வாணமாய் ஓடி வருகிறாள்.

#வியட்நாம்
ஒரு சிறுமி உயிருக்கு பயந்து நிர்வாணமாய் ஓடி வருகிறாள்.

அதை ஒருவர் புகைப்படம் எடுத்து பத்திரிகைகளில் வெளியிடுகிறார்.

அந்த பரிதாபம் கண்டு உலகமே கொந்தளிக்கிறது.

வியட்நாம் யுத்தம் இதன் காரணமாகவே முடிவுக்கு வருகிறது.

#பாலஸ்தீன்
இன்றும் தான் எத்தனையோ புகைப்படங்கள் வருகிறது.

பார்த்ததும் குழை நடுங்கி கண்ணீர் பெருக்கெடுக்கும் அளவிற்கு எத்தனையோ பரிதாபமான புகைப்படங்கள்
..


 ஆனால் யாரும் கொந்தளித்ததாக தெரியவில்லை.

பாலஸ்தீன் மீதான அநியாயமான தாக்குதல் உக்கிரம் அடைந்து கொண்டுதான் இருக்கிறது.

என்ன காரணம்?

நிர்வாணமாக_ஓடவில்லை_என்பதாலா?
#இல்லை_முஸ்லிம்கள்_என்பதாலா ?



 கூத்தாநல்லூர் ஜின்னா

இன்று வரை எரிகின்றது.. இன்றும் எரிகின்றது...

இன்று வரை எரிகின்றது..
இன்றும்
எரிகின்றது...
மலர்ந்த
மொட்டுக்களை
சுட்டு பொசுக்கிய பெருந்தீ
என் மனதினில்,.

பசி தீராமல்
பற்றி எரிகிறது
பள்ளிகள் எங்கும்...

இன்னும் அடங்காத
கதறல் ஒலிகள்
காற்றுவெளியெங்கும்
கேள்விகளை விதைக்கின்றன...

மதுவிற்பனையையும்
கேபிள் டிவியையும்
அரசுடமையாக்கி கொண்டாடும்
எங்கள் அரசுகள்
கல்வியை
எப்போது கொண்டாடும்?

எங்கள் சமாதிக்கு
அஞ்சலி செலுத்திய
ஆட்சியாளர்கள்
நினைவில் கொள்ளட்டும்.
நாங்கள் இன்னும்
மரணிக்கவில்லை,,

வகுப்பறைகளின் அமைதிக்கிடையே
தலைகுனிந்து கேளுங்கள்
இன்றும்
துடித்துக்கொண்டிருக்கின்றன
எங்கள் இதயங்கள்
நாங்கள் மரணிக்கவில்லை...

11 வருடங்கள் ஆகியும் இந்த வழக்கிற்கு கூட
இன்னும் தீர்ப்பு கிடைக்கவில்லை... என்ன
ஒரு வெட்கக்கேடு...

கண்ணீருடன்
கும்பகோண பள்ளிகூட
தீயில் கருகிய குழந்தைகள் !!
...

Mohamed Sha

பாவிகள் செத்து மடிவதை பச்சிளம் நீ பார்த்து விட கூட தென்று பாசக்காரன் உன்னை அழைத்து விட்டான்

என் கண்ணான கண்மணியே

யூத கயவர்கள் பகை வெறி கொண்டு படைத்தவனிடம் உன்னை அனுப்பி விட்டார்கள்

இல்லை இல்லை அந்த பகை வெறி நாய்கள் நாசமாகுவதை உன் நற்கண் கொண்டு பார்த்து விட கூட தென்று படைத்தவன் உன்னை அழைத்து விட்டான்

பாவிகள் செத்து மடிவதை பச்சிளம் நீ பார்த்து விட கூட தென்று பாசக்காரன் உன்னை அழைத்து விட்டான்

நீ சென்று விட்டாய் மகளே

இன்னும் சில தினங்களில் யூத சொறி நாய்களும் உன்னின் பக்கமே வருவார்கள்

இன்ஷா அல்லாஹ் சுவர்கத்தில் நீ விளையாட

நரகத்தில் அவர்கள் கிடக்க அதை பார்த்து நீ சிரிக்க

மிக விரைவில் உன்னின் பக்கம் வருவார்கள்

யா அல்லாஹ் அவர்களுக்கு ஹிதாயத் கொடுப்பாயாக







 Abu Ajmal

தமிழ்நாட்டிலே அதிசய பள்ளிகூடம்

மிழ்நாட்டிலே அதிசய பள்ளிகூடம் -படித்து விட்டு பகிரவும் நண்பர்களே!!!!!!!

பள்ளி மாணவர்களுக்கு வேட்டி சட்டை .... சீருடை !

'' மதுரையில் .. டி.கல்லுப்பட்டி காந்தி நிகேதன் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்குச் சீருடை.... வேட்டி சட்டை தான் !

இந்தியா சுதந்திரம் பெறுவதற்குச் சரியாக நான்கு நாட்களுக்கு முன் தொடங்கப்பட்ட பள்ளி இது.

அந்தப் பள்ளியின் மாணவர்கள். சாலையில் அணி அணியாக நடந்து வந்தால், ஏதோ அரசியல் கட்சி ஊர்வலமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

அவர்கள் உடுத்தி இருப்பது சாரதி வேட்டியோ, பாலியெஸ்டர் வேட்டியோ கிடையாது.

கதர் வேட்டிதான்.

வேட்டிகளைத் துவைக்க கதர் சோப் தயாரிக்கும் முறையையும் பள்ளியிலேயே கற்றுக் கொடுக்கிறார்கள்.

பள்ளியில் ஆசிரியைகளை 'அக்கா’ என்றும்,
ஆசிரியர்களை 'ஐயா’ - என்றும் உறவு சொல்லி அழைக்கிறார்கள் மாணவ- மாணவிகள்.
தலைமை ஆசிரியருக்கும் விதிவிலக்கு கிடையாது.

வகுப்பு மாணவர்கள் வேட்டி அணிவதைப்போல, மாணவிகள் பாவாடை தாவணி அணிகிறார்கள்.

சிறு குழந்தைகளும்கூட வாரத்தில் மூன்று நாட்கள் கதர் ஆடை மட்டுமே அணிகிறார்கள்.

திங்கள் கிழமை தோறும் நடக்கும் கொடி வணக்கத்தின்போது, பல்வேறு தேச பக்திப் பாடல்களை மாணவர்கள் பாடுவார்கள்.

புதன்தோறும் நடைபெறும் சர்வ சமயப் பிரார்த்தனைக் கூட்டத்தில் பைபிள், பகவத் கீதை, குர்ஆன், திருக்குறளையும் சேர்த்து வாசிப்பார்கள்.

ஒழுக்கத்துக்குப் பேர் போன பள்ளி இது.

காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளின்போது மாணவர்களை கண்காணிக்கவே தேவை இல்லை.
காப்பி அடிக்காமல் சுய ஒழுங்கைக் கடைப்பிடிப்பார்கள்.




எஸ்அப்துல் காதர்'

என் ரத்தத்தை நானே கழுவுகிறேன்







இன்று உலகம் பார்க்கும் இந்தப்படம் ஒன்றை உணர்த்துகிறது. 

என் ரத்தத்தை நானே கழுவுகிறேன், 
நீங்கள் அதை கழுவி காசு பார்க்காதீர்கள் என்று. 
இந்தியாவில் எது நடந்தாலும் காட்டமாட்டர்கள்,
ஆனால் சென்டரல் டெல்லி எழவு விழுந்தால் மட்டும் தான் காட்டுவார்கள். பெண்கள் கற்பழித்தால் அது சென்டரல் டெல்லி நடந்தால் மட்டும் கற்பழிப்பு. காய்கறி விலையாகட்டும், கரண்ட் கட் ஆகட்டும், எந்த பிரச்சனையானாலும் அது சென்டரல் டெல்லியில் நடக்கும் போது மட்டுமே ஊதி பெருக்கப்படும். இன்று நடக்கும் இனப்படுகொலையை திட்டமிட்டு மறைப்பவர்கள் எதற்காக மறைக்கீர்றார்கள்? 
இஸ்ரேல் நாட்டிடம் வாங்கப்பட்ட பணம் அதற்காகதான் .

 எங்கள் குழந்தையின் ரத்தவாடை உங்கள் வீட்டிலும் வரும் அப்பொழுது உங்கள் டிவியில் காட்டுவீர்கள். அதை பார்க்க எங்களின் பிணம் வாடை மட்டுமே உங்களுக்கு வரும்.

நிமலன் குமார்