Sunday, July 13, 2014

இரண்டாம் கலீஃபா உமர் பின் கத்தாப் (ரலி) வாழ்க்கைவரலாறு : ——— பாகம் : 06

இரண்டாம் கலீஃபா உமர் பின்
———————————————————
கத்தாப் (ரலி) வாழ்க்கை
————————————————
வரலாறு :
———————

பாகம் : 06
———————

பத்ரு களத்தை நோக்கி....
————————————————

இப்போது நபி(ஸல்) அவர்கள் மதினாவிலிருந்து வெளியேற ஆயத்தமானார்கள்.

அதற்கு முன்பாக அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூம்(ரலி) அவர்களை, மதினாவில் தொழுகை நடத்தவும், தனது பிரதிநிதியாகவும் நியமித்தார்கள்.

மதினாவில் அவர்களுடன் 313லிருந்து 317 நபிதோழர்கள் புறப்பட்டார்கள்

அதில், முஹாஜிர்கள் 82லிருந்து 84 வரை

அவ்ஸ் கிளையை சேர்ந்த அன்சாரிகள் 61மற்றும்

கஸ்ரஜ் கிளையை சேர்ந்த 170 அன்சாரிகள் – புறப்பட்டார்கள்.

வெளியேரும் போது எந்தவித ஆராவாரமும் இல்லை. முஸ்லிம்களிடம் இரண்டு குதிரைகள் மற்றும் 70 ஒட்டகங்கள் மட்டுமே இருந்தன.

குதிரைகளை பொருத்தவரை இப்னு அவ்வாம்(ரலி) அவர்களிடம் ஒரு குதிரையும், மிக்தாது இப்னு அஸ்வத்(ரலி) அவர்களிடம் ஒரு குதிரையும் மட்டுமே இருந்தன. மொத்ததில் இரண்டு குதிரைகள், 70 ஒட்டகங்கள் மட்டுமே இருந்தன. ஒரு ஒட்டகதிற்கு இருவர் அல்லது மூவர் மாறிமாறி பயணம் செய்தனர்.

இப்படியான நிலையில் நபி(ஸல்), அலி(ரலி), மர்ஸத் இப்னு அபூ மர்ஸத் கனவி(ரலி) ஆகிய மூவரும் ஒரு ஒட்டகத்தில் மாறி மாறி பயணம் செய்தனர்.

வியாபாரக் கூட்டத்தை தடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட படையின் பொதுவான தலைமைத்துவத்தின் வெள்ளைக்கொடியை முஸ் அப்இப்னு அல்குரைஷி அல்அப்த(ரலி) அவர்களிடம் நபியவர்கள் கொடுத்து
படையை இரண்டு பிரிவாக ஆக்கினார்கள்.

1) முஹாஜிர்களின் படை; இதற்குரிய கொடியை அலி(ரலி) அவர்களிடம்
கொடுத்தார்கள். இக்கொடிக்கு “உகாப்” என்று சொல்லப்பட்டது

(2) அன்ஸாரிகளின் படை: இதற்குரிய கொடியை ஸஅது இப்னு முஆத்(ரலி) அவர்களிடம் கொடுத்தார்கள். இந்த இரு படைபிரிவினரின் கொடிகள் கருப்பு நிறமுடையதாக இருந்தது.

படையின் வலப்பக்க பிரிவிற்கு ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி) அவர்களை தலைவராக்கினார்கள். இடப்பக்க பிரிவிற்கு மிக்தாது இப்னு அம்ரு(ரலி) அவர்களை தலைவராகினார்கள். முன்பு கூறியது போல் இந்த இருவரும்தான் குதிரை வீரர்களாக இருந்தார்கள். கடைசி பிரிவிற்கு கைஸ் இப்னு அபூ ஸஃஸஆ(ரலி) அவர்களை தலைவராக்கினார்கள். பொது தளபதியாகவும், படையை வழி நடத்துபவராகவும் நபி(ஸல்) அவர்களே விளங்கினார்கள்.

நபி(ஸல்) அவர்கள் சரியான தயாரிப்பு, போர் அனுபவம் இல்லாத இப்படையுடன் மதினாவின் மதினா வலப்பக்கத்திலிருந்து வெளியேறி மக்காவை நோக்கி செல்லும் பிரதான பாதையில் சென்று. “ரவ்ஹா” என்ற இடத்தில் தங்கினார்கள்.

பின்பு, மக்காவின் பாதையை தனது இடப்பக்கத்தில் விட்டுவிட்டு வலப்பக்கமாக “நாஸியா” என்ற இடம் வழியாக பயணித்து “ருஹ்கான்” என்ற பள்ளத்தாக்கை ஒரு குறுகலான வழியாக சென்று கடந்து ஸஃப்ரா என்ற இடத்தில் தங்கினார்கள். அப்போது பஸ்பஸ் இப்னு அம்ர் அல் ஜுஹனி(ரலி), அதி இப்னு அபூஸக்யா அல் ஜுஹ்னி(ரலி) ஆகிய இருவரையும், பத்ரு பள்ளத்தாக்கிற்கு சென்று குரைஷிகளின் வியாபாரக் கூட்டத்தின் செய்தியை துப்பறிந்து வருமாறு அனுப்பினார்கள்....

ஏறக்குறைய இதே சமயம் மக்கா குரைஷிகளும் தங்களை சுற்றியுள்ள அரேபியர்களை ஒன்று சேர்த்தார்கள்

(இதில் குறைஷிகளின் மிகப் பிரபலமான குலங்கள் அத்தனையும் கலந்து கொண்டிருந்த நிலையில் உமர் (ரலி) அவர்களின் குலமான பனூ அதீ மட்டும் கலந்து கொள்ளாமல் விலகி இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே இந்தப் போரில் பனூ அதீ குலத்தைச் சேர்ந்த எவரும் முஸ்லிம்களை எதிர்த்துப் போர் புரிய வரவில்லை. இதுவே உமர் (ரலி) அவர்களினால் முஸ்லிம்களுக்கு விளைந்த மிகப் பெரும் சாதகமாக இருந்த அதேவேளையில் பனூ அதீ குலத்தைச் சேர்ந்த பலர் இஸ்லாத்தைத் தழுவி இருந்த காரணத்தினால் நபிகளாரின் தலைமையில் அவர்கள் அனைவரும் பத்ருக் களத்திற்கு வந்ததோடல்லாது முஸ்லிம்களின் சார்பில் நின்று குறைஷிகளை எதிர்த்துப் போர் புரியவும் வந்திருந்தார்கள் என்பது குறிப்பிட தக்கது.)

இவ்வாறான மக்கா படை புறப்படும் போது அதில் 1300 வீரர்கள் இருந்தனர். இவர்களிடம் 100 குதிரைகளும், 600 கவச ஆடைகளும், இன்னும் குறிப்பிட்டு சொல்லமுடியாத அதிக அளவிலான ஒட்டகங்கலும் இருந்தன. இந்த படையின் பொதுத்தலைவராக அபூஜஹல் இருந்தான். இந்த படைக்கு செலவு செய்வதற்குரிய பொறுப்பை ஒன்பது குரைஷிகளின் முக்கியமானவர்கள் ஏற்றுக் கொண்டனர். மதினாவில் உள்ள முஸ்லிம்களை தாக்கி அவர்களை அழிக்க வேண்டும், அதன் மூலம் இஸ்லாம் பரவுவதை தடுத்துவிடலாம், மக்காவும் பாதுகாப்புடன் தங்களது கட்டுப்பாட்டில் இருக்கும் என்ற உத்வேகத்தில் மிகுந்த ஆத்திரத்துடன் மக்காவின் வலப்புறமாக புறப்பட்டு, “உஸ்வான்” பள்ளத்தாக்கு, பின்பு குகைத், பிறகு கஜுஹ்பாவை அடைந்தனர்.

இப்போது, அபுசுப்யான் ஒரு தந்திரம் செய்கிறார், வழியில் செல்வோரிடம் மதினாவின் படையை குறித்து கேட்டு, உறுதி செய்து கொள்கிறார். மக்கா நோக்கி செல்லும் தனது பாதையை மாற்றிவிடுகிறார், இதன் முலம் பாதுகாப்பாக மக்கா சென்று விடலாம் என்று எண்ணி செல்கிறார். அவரது எண்ணமும் ஈடேறுகிறது. உடன் இதன் செய்தியை பத்ருக்கு அருகாமையில் குறைஷியருக்கு தலைமை ஏற்று வந்து விட்ட அபுஜஹலுக்கு தெரிய படுத்தி படை எடுத்து வரவேண்டிய அவசியம் இல்லை எனவும் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளது எனவும் குறிப்பிட்டார்.

இந்த அபுசுப்யானின் செய்தியை அறிந்த மக்கா படையினரிடயே பிளவு ஏற்படுகிறது. சிலர் திரும்பி சென்று விடுவோம் என்கின்றனர். அதற்கு அபூஜஹல் சம்மதிக்கவில்லை. காரணம், அவன் முன்கூட்டியே திட்டமிட்ட செயல் அல்லவா இது. எப்படி பின் வாங்குவான். கர்வத்துடன் கூறினான். “பதுருக்கு செல்வோம், மூன்று நாட்கள் தங்குவோம், ஒட்டகங்களை அறுத்து சாப்பிடுவோம், மது அருந்துவோம், அடிமை பெண்கள் இசைபாடுவார்கள். இதனை மற்ற அரேபியர்களும் அறிந்து கொள்வார்கள், இனிமேல் அவர்களும் நமக்கு பயந்து வாழ்வார்கள்” என்று கூறுகின்றான்.

ஆனால், இவனுடைய கருத்துக்கு எதிராக அக்னஸ் இப்னு ஷரீக் திரும்பியே ஆகவேண்டும் என்று கூறினார். ஆனால் யாரும் காதில் வாங்கிகொள்ள வில்லை. ஆனால், ஜுஹ்ரா கிளையினர் மட்டும் இவரது பேச்சுக்கு கட்டுபட்டனர். இந்த போருக்கு அக்னஸ் தான் ஜுஹ்ரா கிளையினரின் தலைவராக இருந்தார். எனவே ஜுஹ்ரா கிளையினர் எவரும் போரில் கலந்து கொள்ளாமால் திரும்பினர். இவர்கள் ஏறக்குறைய 300 பேர் இருந்தார்கள்.

(போர் முடிந்து, குரைஷிகளுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை பார்த்து, அக்னஸ் எடுத்த முடிவை எலோரும் பாராட்டினர்)

இதே போன்று ஹாஷிம் கிளையினரும் திரும்பிவிடவே எண்ணினர், ஆனால், அபூஜஹல் அவர்களை பலவந்தமாக இழுத்து சென்றான். ஜுஹ்ரா கிளையினர் 300 பேர் நீங்களாக, மீதமுள்ள 1000 பேருடன் மக்கா படை பத்ருவை நோக்கி புறப்பட்டது. “அல் உத்வதுல் குஸ்பா என்ற மேட்டு பகுதிக்கு பின்னால் தங்கினார்கள்.
 
 
 
 
 

No comments:

Post a Comment

சகோதரர்களே உங்கள் கருத்துகளை பகிரலாமே