Wednesday, July 16, 2014

இரத்தம் சிந்தாத மீடியாக்கள்

இரத்தம் சிந்தாத மீடியாக்கள் :-
**************************
**********
1.ஜனநாயகத்தின் நான்கு தூண்களாக அரசியலமைப்பு ,சட்ட துறை, நீதி துறை, ஊடகத்துறை இருகின்றது ...

2.சட்டம் மனோ இச்சையாக இருந்தாலும், நீதி மறுக்கப்பட்டாலும், அரசியலமைப்பு விற்கப்பட்டாலும் இந்தியாவில் அதிகார வரக்கத்தை கேள்வி கேட்கும் துணிச்சலான பணிகளில் ஊடகத்துறை இருக்கின்றது


3.இந்தியாவில் ஏழைகளுக்கும் பாதிக்கபட்டவர்களுக்கும் நீதி மறுக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கின்றது ..அவர்களுக்காக நீதி கேட்கும் துணிச்சல் தனி நபர்களிடமோ குழுக்கள் இடமோ இருப்பது இல்லை.அவ்வாறு இருந்தாலும் அவர்கள் அதிகார வர்க்கத்தால் அடக்கப்படுகின்றார்கள்.

4.ஊடகத்துறை மட்டுமே கேள்விகே
ட்கும் அதிகாரம் பெற்றுஉள்ளது.
ஆனால் அதன் இன்றைய நிலைப்பாடு நீதி மறுக்கப்பட்டவர்களுக்கு எதிர்

மறையாக மாறி இருக்கின்றது.

கார்ப்பரேட்டுகளின் பிடியில் மீடியாத்துறை.....
**************************
********************
1.மக்களின் கவனத்தை திருப்பி ரேட்டிங்கை உயர்த்துவதும் பணம் சம்பாதிப்பதும், அதிகாரவர்க்கத்திற்கு தரகு வேலை பார்ப்பதுமே இன்றைய ஊடகங்கள் முழுநேரப் பணிகளாக செய்து வருகின்றன.

2.இந்தியாவின் ஆட்சியாளர்களை தெரிவு செய்யும் மிக முக்கிய இடத்தில் கார்ப்பரேட் முதலாளிகளே இருக்கின்றனர்.அவர்களின் பிடியிலேயே தொலைகாட்சிசெய்தி
நிறுவனங்கள் இருக்கின்றன.
செய்திகள் ஒருதலை பட்சமாகவும்
ஆட்சியாளர்களை விமர்சிக்கும்
நிலை இல்லாமலும் இருக்கின்றன.

 


நீதிக்கு எதிராக நவீன ஊடகத்துறை ...........
**************************
**************************
1.நாட்டின் முதுகெலும்பான கிராமங்களில் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை 1997 முதல் 2007 வரையிலான பத்தாண்டுகளில் மட்டும் நம் நாட்டில் 1,82,936 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அதாவது, சராசரியாக ஆண்டுக்கு 18,300 பேர்.இவர்களை பற்றி ஊடகங்கள் வாய் திறக்காமல் மௌனித்து உள்ளது.

2.இந்தியாவில் இருக்கும் விபச்சார விடுதிகள் பெண்கள் வெளிவராத சிறைச்சாலைகளாக இருக்கின்றன.இந்தியாவில் தாதாக்களின் பிடியில் விபச்சாரத்தொழில் நடைபெறுகின்றன.இதற்க்கு அரசாங்கமும் வக்காலத்து வாங்குவதும் அந்த பெண்களின் அவலங்களை துணிச்சலோடு ஊடகங்கள் சொல்ல மறைப்பதும் ஊடக துறைகளின் இன்றைய அவல நிலை ஆகும்.

3.இந்தியாவில் குடிகாரர்களின் விழுக்காடு அதிகமாக இருப்பது தமிழ்நாடு ஆகும். அதிக சாலை விபத்திற்கு காரணம் மது குடிப்பது என்று புள்ளி விவரம் செய்திகள் தருகின்றது.இதனை முக்கியமாக ஊடகங்கள் கேள்வி கேட்பது இல்லை. கேள்வி கேட்கும் நந்தினி போன்ற தனிநபர்களையும் ஊடகங்கள் ஆதரவு தருவது இல்லை.

4.பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாலியல் வன்முறைகளில் இந்தியா
முன்னேறிக்கொண்டு இருக்கின்றன.காவல் துறைகளிலே அதிகமான
கற்பழிப்பு நடப்பதும் தவறுசெய்தவர்கள் தண்டனையைவிட்டு
தப்பிப்பதும்,அதிகாரவர்க்கம்
  அதற்க்கு துணைபுரிவதையும்
வேண்டும் என்றே மீடியாக்கள் மறைக்கின்றன.

5.தலித்கள் உரிமை மறுப்பு ,சாதியக்கொலைகள், தலித்பெண்கள் கற்பழிப்பு,தலித்கள் சித்ரவதை இந்தியாவில் தொடர்ந்து நடைபெற்று வெளியே வராத செய்திகளாக இருக்கின்றன,

6.பசியால் மட்டும் இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் 23 லட்சம் பேர் பலிஆகின்றனர்.அவர்களின்பசிக
ளின்வலிகளைஎந்தஊடகத்துறையும் ஓங்கி உரைக்கவில்லை.

7.இந்தியாவில் அதிகமாக பாதிக்கப்படும் சமூகம் முஸ்லிம்கள் ஆவர்.இந்தியாவில் எங்கே குண்டு வெடித்தாலும் முஸ்லிம்களே குற்றங்களை சுமக்கின்றனர். இந்தியாவில் அதிகமாக வகுப்பு கலவரங்களில் முஸ்லிம்களே பாதிப்பு அடைகின்றனர்.தற்போது இந்தியாவில் முஸ்லிம்கள் குறிவைக்கப்பட்டு பலவந்தமாக பொய் வழக்குகளில் சிக்கவைத்து சிறைகளில் அடைக்க
ப்படுகின்றார்கள்..

8.போலி என்கௌன்ட்டர், வெடி(க்காத) குண்டுவழக்கு, தீவிரவாதம் இந்த வார்த்தைகள் முஸ்லிம்களுக்கு மட்டும் இந்தியாவில் சொந்தமாகி போனது ..இந்திய முஜாஹிதீன் என்று அடிக்கடி சொல்லும் மீடியாக்கள் அவர்கள் யார் என்பதை அறிய இந்திய முஸ்லிம்களே ஆர்வமாக உள்ளனர் ....

9.அந்த இந்திய முஜாஹிதீன்கள் அப்பாவி முஸ்லிம்களுக்கு எதிராக இருக்கும் சில காவல் துறை அதிகாரிகளும் ,காவி துறையுமே என்பது தான் உண்மை..அவர்களை பற்றி ஊடகங்கள் வாய் திறக்க மறுக்கின்றன.

10.குஜராத் இனப்படுகொலை,பாபரி மஸ்ஜித் வழக்கு, முசாபர் நகர் கலவரம் பற்றிய தெளிவான செய்திகள் பெரும்பான்மை ஊடகங்கள் மறைத்து விட்டன.

11.அப்சல் குரு போன்ற தனி நபராக ஆனாலும் , இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கமாக ஆனாலும் எந்த குற்றம் நிருபிக்க முடியாத நிலையில் இன்னும் இந்திய ஊடகங்கள் தீவிரவாதிகளாகவே சித்தரிக்கின்றன.

12.இந்தியாவில் வங்கிகளின் அட்டகாசங்கள் பற்றியும் கடன் பெறப்படும் ரௌடிசங்கள் பற்றியும் எந்த மீடியாக்களும் அக்கறை கொள்வதில்லை.

13.வறுமை ,வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு பற்றி மக்களின் உணர்வுகளை முக்கியத்துவப்படுத்தி ஊடகங்கள் பதிவு செய்வது இல்லை.

14.அரசாங்கத்தின் லஞ்சம், ஊழல்கள்,கருப்பு பண விவகார செய்திகள் எல்லாம் வைத்து மீடியாக்கள் மிரட்டிபேரம் பேசவேசெய்கின்றது.
அரசாங்கத்தை கேள்வி கேட்டு மக்கள் மன்றத்தில் நிறுத்துவது இல்லை..

15. காஷ்மீர் மக்களின் துயர்களை அருந்ததி ராய் அவர்களே தொடந்து தனிமனிதராக செய்திகளை முன்வைக்கின்றார்கள்... இந்திய ஊடகங்கள் இவர்களை பற்றி எந்த செய்திகளையும் முன் வைக்காமல் தொடர்ந்து ஊடக அராஜகம் செய்து வருகின்றன..


அபின்களாக மாறும் மீடியா நிகழ்ச்சிகள்.
**************************
*********************************
1.கிரிக்கெட்,சினிமா,கவர்ச்
சி, ரியாலிட்டி நிகழ்ச்சிகள்,நையாண்டி மற்றும் இசை நிகழ்ச்சிகளே அணைத்து மீடியாக்களையும் ஆக்கிரமித்து உள்ளது.

2.பாலியல் வக்கிரங்கள் மற்றும் கவர்ச்சி பெண்கள் மூலம் டிவி ரேட்டிங்கை உயர்த்தி பணம் சம்பாதிப்பதே முதலாளித்துவ ஊடகங்களின் சிந்தனை.

3.சாமியார்களின் அந்தரங்கங்கள், ஆருடம், பாலின மருத்துவம்,மனை நிலங்கள் விற்பனை போன்ற மக்களின் சிந்தனையை உயர்த்தாத நிகழ்ச்சிகளே தொடர்ந்து ஒளிபரப்பபடுகின்றன.

உரத்த சிந்தனை
*************************
1. உலக மக்கள் தொகையில் இருக்கும் 2% வாழும் யூதர்கள் உலகில் 95% அதிகமான ஊடகங்களை தன்னகத்தே வைத்து இருக்கின்றார்கள்.

2.ஊடகத்தில் சொல்லும் செய்திகளும் ஊடகவியலாளர்களும் இவர்கள் மனப்பதிவையும் கருத்தியலையும் அடிப்படையாகக் கொண்டவை

3.ஆதிக்க மனப்பான்மை கொண்ட இவர்கள் உலகம் மற்றும் இந்திய போன்ற நாடுகளிலும் உயர் சாதியினரிடமே மீடியாக்களை ஒப்படைத்து இருக்கின்றனர்.

4.அதிகாரவர்க்கத்திற்கு துணை நிற்கும் இது போன்ற மீடியாக்கள் பாதிக்கபட்ட மக்களின் உணர்வுகளை படம் பிடிப்பது இல்லை ..

5.உலகில் எந்த அசம்பாவிதங்கள் நடந்தாலும் மக்கள் அதை குறித்து சிந்தித்து கேள்விகேட்க விடமுடியாதபடி உலகம்முழுக்க
சிந்தனைகளை மாற்றி அடிமைப்படுத்தும் ஒரேமாதிரியான
தொலைக்காட்சிநிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.

6.இஸ்ரேல் அரபு நாடுகளின் மீடியாக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கின்றது. சிரியா,பாலஸ்தீன், எகிப்து புரட்சிகளை எல்லாம் திட்டமிட்டு மறைத்து விட்டது .

7.இந்தியாவில் அடக்கு முறைக்கு உட்பட்ட மக்களின் அழுகுரல்களை இந்திய மீடியாகளின் இசை நிகழ்ச்சிகள் கேட்க விடுவது இல்லை ...

8..அரசின் தவறான திட்டங்களால் குடிமகன் உணவின்றி செத்து கொண்டிருக்கும் நிலையில், தமிழக ஊடகங்கள், நடிகைகளின் உள்ளாடைகள் பின்னால் தமது செய்தியாளர்களை அனுப்பி தமது ஜனநாயகக்கடமையைச் செவ்வனே நிறைவேற்றிக்
கொண்டிருக்கின்றன.


நமக்கான மாற்றம்
**************************
**
1.துணிச்சலான தத்துவ அறிஞர்கள் மக்களின் உணர்வுகளை செய்திகளாக எடுதுரைத்ததால் பிரெஞ்சு புரட்சி ரஷ்ய புரட்சி எல்லாம் தோன்றி மக்களை அடிமை தனத்தில் விடுவித்தது.இன்று ஒடுக்கப்படும் சமூகம் அதிகார வர்க்கத்தில் இருந்து விடுதலை பெற இன்றைய காலத்தில் நீதிக்கு துணை புரியும் ஒருவன் ஊடகவியலாளனாக மாறுவதை தவிர வேற வழி இல்லை...

2.ஆனால், உண்மையிலேயே மக்களுக்காக... நீதிக்காக நிலைகொள்ளும் அல் ஜஸீரா போன்ற ஊடகங்களில் பணியாற்றும் செய்தியாளர்கள் அல்ல அவர்கள்  உண்மையான போராளிகள்... மக்களுக்கு எதிரான அக்கிரமக்காரர்களின் இடையே ஊடுருவி தம் இன்னுயிரை மாய்த்து கொண்டிருக்கின்றனர்..

3.எவ்வகையான ஊடகம் இந்தியாவுக்குத் தேவை என்பது இனி இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும் தீர்மானிக்க வேண்டும்

4.நீதிக்கான போரில் நீதியை நிலை நிறுத்த பாடு படும் போர் வீரன் ஊடகவியலாளன் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை ...

5.ஊடகம் ஒரு மாபெரும் இயக்கம்.அதனை நீதிக்கான சத்தியக் கொள்கை இயக்கம் பொழுதே மாபெரும் வெற்றிபெறுகின்றது .

6.பணமும் அதிகாரமும் முதலீடாக வைத்து உருவாக்கிய மீடியாக்களுக்கு மத்தியில் உயர்ந்த சிந்தனையையும் அறிவையும் முதலீடாக வைத்து ஊடகங்கள் உருவாகும் பொழுதே அநீதிக்கான கதவுகள் உடைத்து எறியப்படும் ....






ஊடகவியலாளர் அபூஷேக் முஹம்மது



 

No comments:

Post a Comment

சகோதரர்களே உங்கள் கருத்துகளை பகிரலாமே