இரண்டாம் கலீஃபா உமர் பின்
கத்தாப் (ரலி) வாழ்க்கை
வரலாறு :
பாகம் : 09
இன்றிலிருந்து முன்னோக்கிச் சரியாக 1433 ஆண்டுகள் ஏறத்தாழ இன்று...
பத்ருடைய நாள் :
———————————
அல்லாஹூ அக்பர்.... அல்லாஹூ அக்பர்.... அல்லாஹூ அக்பர்....
உலகவரலாற்றின் ஓர் உன்னதமான நாள்!....
இஸ்லாமிய தற்காப்பிற்கு, தார்மீக உரிமை கொண்டாடும் நாள்!.....
வல்ல நாயனே நேரிடையாக உதவி புரிய, வானவர்களை வாள்களுடன் இறக்கிய நாள்.....
இஸ்லாமிய வரலாற்றின் அடித்தளம் வல்லோன் அல்லாஹ்வால் செம்மையும் செழுமையும் படுத்தப்பட்ட நாள்.....
அசத்தியத்திற்கு அழிவை ஏற்படுத்திய பொன் நாள்....
இஸ்லாமிய வரலாற்றின்
முதல் போர்….
பத்ருல்குப்ரா என வரலாற்றின் வைர வரிகளில் பொன் எழுத்துக்களால் பொறிக்கபட்ட
பத்ருப் போர்….! பத்ருப் போர்….!! பத்ருப் போர்….!!!
இதோ இறையருளால் உங்கள் முன்னால் களமாக விரிகிறது....
பத்ரு பள்ளத்தாக்கில் இரண்டு அணிகளும் தயார் நிலையில்….....
ஹிஜ்ரி2, புனித ரமலான் மாதம், பிறை 17, வெள்ளிக்கிழமை (கி.பி. 624, மார்ச் 17) பதுரு போர்களம். – அதிகாலை!
இஸ்லாமிய படையினர் ஏற்படுத்தி இருந்த நீர் நிலையில், மக்கா படையில் உள்ள சிலர் நீர் அருந்த வந்தனர். நபித்தோழர்கள் அவர்களை தடுக்க முற்பட்டனர். அப்போது நபி(ஸல்) அவர்கள், “அவர்களை விட்டுவிடுங்கள்” என்று கூறினார்கள். (அந்த நீர்தடாகத்தில் யாரெல்லாம் நீர் அருந்தினார்களோ அனைவரும் போரில் கொல்லப்பட்டனர், ஒருவரை தவிர அவர் ஹக்கீம் இப்னு ஸாம். (இவர் பின்னாளில் இஸ்லாத்தை ஏற்று சிறந்த முஸ்லிமாக திகழ்ந்தார். அவர் சத்தியம் செய்ய நினைத்தால் ‘பத்ருப் போரில் என்னை காப்பாற்றியவன் மீது சத்தியமாக!” என்று கூறுவார்)
இப்போது, பத்ரு பள்ளத்தாக்கில் இரண்டு படைகளும் நேர் எதிரே திரண்டு நின்றார்கள்.
இச்சமயம் நபி(ஸல்) அவர்கள்,
“யா அல்லாஹ்! எங்கள் இறைவா! ... என அழுதவர்களாக...
இதோ குரைஷிகள் கர்வத்துடனும், மமதையுடனும் உன்னிடம் போர் செய்பவர்களாக, உன்னுடைய தூதரைப் பொய்ப்பிப்பவர்களாக வந்திருக்கின்றனர். அல்லாஹ்வே! நீ எனக்கு வாக்களித்த உதவியை தருவாயாக! இக் காலைப்பொழுதில் அவர்களை அழிப்பாயாக!” என்று பிரார்த்தனை செய்தார்கள்.
இப்போது மக்காபடையினரின் தரப்பில், சிகப்பு நிற ஒட்டகையின் மீது உத்பா உலாவிக் கொண்டு இருந்தார். அவரைப் பார்த்த நபி(ஸல்) அவர்கள், “அந்த கூட்டத்திலேயே நலத்தை விரும்பும் ஒருவர் இவராகத்தான் இருக்க முடியும். இவருக்கு இந்த கூட்டம் கட்டுப்பட்டால், அவர்கள் சரியான வழியை அடையக் கூடும்” என்று கூறினார்கள்.
நபி(ஸல்) அவர்கள், முஸ்லிம்களின் அணிகளை சரிசெய்து கொண்டு இருந்தார்கள். கையில் ஒரு அம்பு ஒன்று வைத்துக்கொண்டு கட்டளைகளை கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். முஸ்லிம் படையினர் வரிசையினை சரிசெய்து கொண்டு இருக்கும் போது, அவர்கள் கையில் இருந்த அம்பினால் ஸவாது இப்னு கஸிய்யா(ரலி) அவர்கள் வயிற்றில் லேசாக தட்டி, வரிசையில் ஒழுங்காக நிற்கும்படி சொன்னார்கள், ஆனால் அவரோ, நீங்கள் என் வயிற்றில் அம்பால் குத்திவிட்டீர்கள், எனக்கு வலி ஏற்பட்டுவிட்டது” என்றார். நபி(ஸல்) தனது வயிற்றை திறந்து காட்டி, “இதோ, உன் பழியை தீர்த்துக் கொள்” என்றார்கள். ஆனால், அவரோ, நபி(ஸல்) அவர்களை கட்டியணைத்து, அவர்களின் வயிற்றில் முத்தமிட்டார்கள். ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டதற்கு. “ இதோ கண் எதிரே எதிரிகள்! எனக்கு என்ன வேண்டுமென்றாலும் நிகழலாம், அதற்குள் உங்கள் மேனியை தொட்டுவிட ஆசை பட்டேன்” என்று ஆனந்தத்துடன் கூறினார்.
இப்போது நபி(ஸல்) அவர்கள், தம் படையினருக்கு கட்டளைகளை பிறப்பித்தார்கள். “எனது இறுதி கட்டளை வரும் வரை போரை தொடங்காதீர்கள்! அவர்கள் உங்களை நோக்கி நெருங்கும் போது, அவர்களை நோக்கி அம்பை எறியுங்கள்! அதே சமயம் அம்புகளில் கொஞ்சம் மீதம் வைத்துக் கொள்ளுங்கள்., அவர்கள் உங்களை சூழ்ந்து கொள்ளும் வரை நீங்கள் வாட்களை உருவாதீர்கள்” என்று கூறினார்கள்.
(நூல்:அபுதாவூத்)
அதன் பிறகு நபி(ஸல்) அவர்களும், அபுபக்ர்(ரலி) அவர்களும் பரணி வீட்டிற்கு சென்றார்கள். ஸஅது இப்னு முஆது(ரலி) அவர்கள், தனது பாதுகாப்பு படையினருடன் அவ்வீட்டை சுற்றி அரணாக நின்றார்கள்.
இப்போது அபுஜஹில் தனது இறைவனிடம், “தங்களுக்கே வெற்றி வேண்டும், முஹம்மதும் அவரது கூட்டமும் தோற்றகடிக்கப் படவேண்டும்” என்று நீண்ட ஒரு பிரார்த்தனை செய்தான்.
இது குறித்தே அல்லாஹ் இந்த வசனத்தை இறக்கினான். .
إِنْ تَسْتَفْتِحُوا فَقَدْ جَاءَكُمُ الْفَتْحُ ۖ وَإِنْ تَنْتَهُوا فَهُوَ خَيْرٌ لَكُمْ ۖ وَإِنْ تَعُودُوا نَعُدْ وَلَنْ تُغْنِيَ عَنْكُمْ فِئَتُكُمْ شَيْئًا وَلَوْ كَثُرَتْ وَأَنَّ اللَّهَ مَعَ الْمُؤْمِنِينَ
(நிராகரிப்பவர்களே!) நீங்கள் வெற்றி(யின் மூலம் தீர்ப்பைத்) தேடிக் கொண்டிருந்தால், நிச்சயமாக அவ்வெற்றி (முஃமின்களுக்கு) வந்து விட்டது இனியேனும் நீங்கள் (தவறை விட்டு) விலகிக் கொண்டால் அது உங்களுக்கு நலமாக இருக்கும்; நீங்கள் மீண்டும் (போருக்கு) வந்தால் நாங்களும் வருவோம்; உங்களுடைய படை எவ்வளவு அதிகமாக இருந்தாலும், அது உங்களுக்கு எத்தகைய பலனையும் அளிக்காது. மெய்யாகவே அல்லாஹ் முஃமின்களோடு தான் இருக்கின்றான் (என்று முஃமின்களே கூறி விடுங்கள்).
(குர்ஆன் 8:19)
போர் துவங்கியது :
—————————————
இப்போது முதலாவதாக மிகுந்த கெட்ட குணமுடைய அஸ்வத் இப்னு அப்துல் அஸது மக்ஜூமி என்பவன் போரின் தீயை மூட்டினான். சப்தமாக சபதமிட்டான் “ நான் முஸ்லிம்கலின் நீர்நிலையில் நீர் அருந்துவேன், அவர்களை கொன்றொழிப்பேன், அல்லது அங்கே செத்துமடிவேன்… இது இறைவன் மீது சத்தியம்” என்று கூறி கொண்டு குரைஷிகளின் படையிலிருந்து வெளியேறி முஸ்லிம்கள் பக்கம் உள்ள நீர் நிலையை நோக்கி, ஓங்கிய வாளுடன் வெறியுடன் வந்தான். அவன் நீர் தடாகத்தின் அருகே வந்ததும், காற்றினும் கடுகியவராக ஹம்ஜா(ரலி) அவர்கள் அவனை வாளுடன் எதிர் கொண்டார்கள். அவனின் பாதத்தை கெண்டைகால் வரை வெட்டினார்கள். அப்படியும் தான் செய்த சபத்தை நிறைவேற்ற, அந்த நீர் தடாகத்தை நோக்கி தவழ்ந்து கொண்டே சென்றான். இப்போது அவனின் கதையை ஹம்ஜா(ரலி) அவர்கள் முடித்தார்கள் – அல்லாஹூ அக்பர் போரின் முதல் கொலை, குரைஷிகளின் முதல் இழப்பு.
இதை கண்ட குரைஷிகளின் கோபம் தலைக்கேறியது. உள்ளம் கொதித்தவர்களாய் மிகவும் காட்டமாக குரைஷிகள் போரை துவக்கினார்கள்
முஸ்லிம்களின் முதல் வெற்றி:
———————————————————
அந்த கால போர்விதியின் படி முதலில், சில வீரர்கள் நேருக்கு நேர் மோத வேண்டும், அதன் பின்பே இருதரப்பில் உள்ள அத்தனை பேரும் மோதிக்கொள்வார்கள்
அதன்படி, குரைஷிகளில் மிகவும் தேர்ச்சி பெற்ற குதிரைவீரர்களில், ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர், இஸ்லாமிய படையினரை நோக்கி வந்து நின்று நேரிடையாக மோத வருமாறு அழைத்தார்கள். அவர்கள் உத்பா, ஷைபா, வலீது ஆகியோராவர்.
இவர்களை எதிர்கொள்ள, மூன்று அன்சாரி வாலிபர்களான அவ்ஃப் இப்னு ஹாரிஸ், முஅவ்வித் இப்னு ஹாரிஸ், அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரலி) ஆகியோர் அவர்களுடன் நேருக்கு நேர் மோத களத்தில் குதித்தனர்.
அவர்களை நோக்கி, “நீங்கள் யார்?” என்று குரைஷிகளின் சார்பாக வந்த மூவரும் கேட்டார்கள், அதற்கு இவர்கள் “ நாங்கள் மதினாவாசிகள்” என்றார்கள். “நீங்கள் எங்களுக்கு நிகரானவர்கள்தான். ஆனால், நீங்கள் தேவை இல்லை எனக்கூறிவிட்டு நபியவர்களைப் பார்த்து முஹம்மதே! மக்காவாசியான எங்கள் குலத்தவரை எங்களுடன் போரிட அனுப்புங்கள்” என்று கத்தினார்கள்.
உடனே நபி(ஸல்) அவர்கள், உபைதா இப்னு ஹாஸே, ஹம்ஜாவே, அலியே எழுந்து செல்லுங்கள்” என்று உத்தரவிட்டார்கள்.
மீண்டும் இவர்களை நோக்கி நீங்கள் யார் என்று கேட்டு தெரிந்து கொண்டு, நேருக்கு நேர் மோத வந்தனர் குறைஷியர்.
இதில் வயதில் மூத்தவரான உபைதா(ரலி) அவர்கள் உத்பாவுடனும், ஹம்ஜா(ரலி) ஷைபாவுடனும், அலீ(ரலி) வலீதுடனும் மோதினார்கள்.
(நூல்: இப்னு ஹிஷாம்).
இதில் ஹம்ஜா(ரலி அவர்களும், அலீ(ரலி) அவர்களும் எதிரிகளுக்கு வாய்ப்பே கொடுக்காமல் அவர்களை வெட்டி வீசினார்கள். ஆனால், உபைதா(ரலி)யும், உத்பாவும் மோதிக்கொண்டதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது, உபைதா(ரலி) அவர்களின் கால் வெட்டுண்டு வீழ்ந்தது. இருந்தும் உத்பா கொல்லப்பட்டான். அலீ(ரலி)யும், ஹம்ஜா(ரலி)யும், உபைதா(ரலி) அவர்களை சுமந்து கொண்டு திரும்பினார்கள்.
(உபைதா(ரலி) அவர்கள் இதனால் நோய்வாய்ப்பட்டு, இப்போருக்கு பின் 5 நாட்கள் கழித்து, மதினா செல்லும் வழியில் “ஸஃப்ரா” என்ற இடத்தில் இறந்தார்கள்.)
போரின் உக்கிரம் :
————————————
போரின் ஆரம்பமே தங்களுக்கு கெட்டதாக அமைந்து விட்டதே! மூன்று குதிரை வீரர்களான தளபதிகளை இழந்து விட்டோமே! என்ற, ஆத்திரம் மேலோங்க, இஸ்லாமிய படையினரை நோக்கி மிகவும் ஆவேசத்துடன் பாய்ந்தார்கள் குரைஷிகள் அனைவரும்.
அதே சமயம் முஸ்லிம்களோ, தங்களது இறைவனிடம் உதவியும், பாதுகாப்பும் கோரி, தங்களது எண்ணங்களை தூய்மைபடுத்திக் கொண்டே எதிரிகளின் தொடர் தாக்குதல்களை சமாளித்தனர்.
முஸ்லிம் படை தங்களைவிட, மூன்று மடங்கு பெரிதாகவும், கணக்கற்ற கவச உடையுடனுடனும், குதிரை படையுடனும் மோதும் குரைஷி படையினரை மன வலிமையுடன் எதிர்கொண்டது.
அல்லாஹூ அஹது!. அல்லாஹூ அஹது!.
“அல்லாஹ் ஒருவனே! அல்லாஹ் ஒருவனே” என்றும் அல்லாஹூ அக்பர் !" அல்லாஹூ அக்பர் !" என்றும் கூறிக்கொண்டே முஸ்லிம்கள் பதிலடி கொடுத்தார்கள்.
போர் உச்சகட்டத்தை எட்டியது, இரத்தம் பீறிட்டு ஆறாய் ஓடத் தொடங்கியது.
இப்போது நபி(ஸல்) அல்லாஹ்விடம் மன்றாடினார்கள். “அல்லாஹ்வே! நீ வாக்களித்த வாக்கை நீ நிறைவேற்றுவாயாக! அல்லாஹ்வே! நீ எனக்களித்த உனது வாக்கையும், ஒப்பந்தத்தையும் உன்னிடம் கேட்கிறேன்” என்று வேண்டினார்கள்.
போரின் உக்கிரம் உச்சகட்டத்தை அடைந்ததும், மீண்டும் வேண்டினார்கள். “அல்லாஹ்வே! இக்கூட்டத்தை நீ அழித்துவிட்டால், உன்னை வணங்குவதற்கு
இப்பூமியில் யாருமே இருக்க மாட்டார்கள்!” என அழுது அழுது துவா கேட்டார்கள். கரங்களை உயர்த்தியதால், அவர்களின் புஜத்திலிருந்து மேலே போர்த்தி இருந்த போர்வை நழுவி விழுந்தது. அவர்களின் போர்வையை அபூபக்ர்(ரலி) சரி செய்து, “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் உங்கள் இறைவனிடம் அதிகம் வேண்டிவிட்டீர்கள்” என்றார்கள்.
இப்படியான நேரம் அல்லாஹ் தனது பூரண அருளை மலக்குமார்களின் மூலம் இறக்கி உதவி செய்தான்,
இதனை அல்லாஹ் தனது அருள் மறையில் இவ்வாறு விவரிக்கின்றான் :
إِذْ تَسْتَغِيثُونَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَكُمْ أَنِّي مُمِدُّكُمْ بِأَلْفٍ مِنَ الْمَلَائِكَةِ مُرْدِفِينَ
(நினைவு கூறுங்கள்;) உங்களை இரட்சிக்குமாறு உங்கள் இறைவனின் உதவியை நாடியபோது "(அணி அணியாக உங்களைப்) பின்பற்றி வரக்கூடிய ஓராயிரம் மலக்குகளைக் கொண்டு நிச்சயமாக உங்களுக்கு உதவி புரிவேன்" என்று இறைவன் உங்களுக்கு பதிலளித்தான்.
(திருக்குரான் 8:9)
வல்ல அல்லாஹ், நபி(ஸல்) அவர்களின் பிராத்தனையை ஏற்றுக்கொண்டான், அவன் வாக்களித்தபடி வானவர்களை இறக்கினான்.
இப்போது நபி(ஸல்) அவர்கள் சற்று தலையை தாழ்த்தி, பின்பு உயர்த்தி “அபுபக்ரே! நற்செய்தி அடைந்து கொள்ளுங்கள். இதோ ஜிப்ரீல் குதிரையின் கடிவாளத்தை இழுத்துவருகிறார். அவர் உடம்பில் புழுதி படிந்து இருக்கிறது அவர் காட்சியளிக்கிறார்” என்றார்கள்
பின்னர் கவச ஆடை அணிந்து நபி(ஸல்) அவர்கள் தங்களது கூடாரத்திலிருந்து வெளியேறி
سَيُهْزَمُ الْجَمْعُ وَيُوَلُّونَ الدُّبُرَ
அதிசீக்கிரத்தில் இக்கூட்டத்தினர் சிதறடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஓடுவர்.
(அல்குர் ஆன் 54:45)
என்ற வசனத்தை கூறியவர்களாக, பொடிக்கற்கள் நிறைந்த மண்ணை அள்ளி, “முகங்கள் மாறட்டும்” என்று கூறி, எதிரிகளின் முகத்தை நோக்கி எறிந்தார்கள். அது எதிரிகளின் கண், தொண்டை, வாய் என்று அனைத்தையும் சென்றடைந்தது.
இது குறித்தே,
فَلَمْ تَقْتُلُوهُمْ وَلَٰكِنَّ اللَّهَ قَتَلَهُمْ ۚ وَمَا رَمَيْتَ إِذْ رَمَيْتَ وَلَٰكِنَّ اللَّهَ رَمَىٰ ۚ وَلِيُبْلِيَ الْمُؤْمِنِينَ مِنْهُ بَلَاءً حَسَنًا ۚ إِنَّ اللَّهَ سَمِيعٌ عَلِيمٌ
(பத்ரு போரில்) எதிரிகளை வெட்டியவகள் நீங்கள் அல்ல - அல்லாஹ் தான் அவர்களை வெட்டினான்; (பகைவர்கள் மீது மண்ணை) நீர் எறிந்தபோது அதனை நீர் எறியவில்லை, அல்லாஹ்தான் எறிந்தான்; முஃமின்களை அழகான முறையில் சோதிப்பதற்காகவே அல்லாஹ் இவ்வாறு செய்தான்; நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவி ஏற்பவனாகவும், (எல்லாம்) அறிபவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர் ஆன் 8:17) என்ற வசனம் இறங்கியது.
இப்போது நபி(ஸல்) அவர்கள் தமது படையினருக்கு ஆர்வமூட்டினார்கள்.,
“முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளாதோ அவன் மீது ஆணையாக! இன்றைய தினத்தில் போர் புரிந்து, சகிப்புதன்மையுடனும், நன்மையை நாடியும்,, புறமுதுகு காட்டாமலும், எதிரிகளை எதிர்த்தவர்களாக யார் கொலை செய்யப்படுகிறார்களோ அவரை அல்லாஹ் சொர்கத்தில் நுழைவிப்பான். வானங்களயும், பூமிகளையும் அகலமாக கொண்ட சொர்கத்தின் பக்கம் விரைந்தோடுங்கள்” என்று ஆர்வமூட்டினார்கள்.
“ஆஹா! ஆஹா!, நானும் சொர்க்கவாசிகளில் ஒருவராக ஆகவேண்டும்” என்று கூறிக்கொண்டு உமைர் இப்னு அல்ஹுமாம்(ரலி) எதிரிகளின் மீது பாய்ந்தார்கள். ஷஹீதானார்கள். இதே போன்று அவ்ஃப் இப்னு ஹாரிஸ்(ரலி) அவர்கள் தான் அணிந்து இருந்த கவச ஆடையை தூக்கி எறிந்து விட்டு எதிரிகள் மீது பாய்ந்து ஷஹீதானார்கள்.
(நூல்: முஸ்லிம்)
நபித்தோழர்களின் மனதில், தங்களுக்கு சொர்க்கம் வேண்டும் என்ற ஆர்வமே மேலோங்கி இருந்தது என்பதையே இந்நிகழ்ச்சிகள் காட்டுகின்றன.
எதிரிகளை தாக்குங்கள் என்று, நபி(ஸல்) அவர்கள் கட்டளை பிறப்பித்த உடன் எதிரிகளின் மீது முஸ்லிம்கள் சினம் கொண்ட சிம்மங்களாகப் பாய்ந்தனர். அவர்களின் அணிகளை பிளந்து, தலைகளை கொய்தனர்.அல்லாஹ்வின் பாதையில் போர் புரியவேண்டும் என்ற தீராத தாகத்தில் இருந்த அவர்கள் எதிரிகளை நிலை தடுமாறச் செய்தனர். இதனால் எதிரிகளின் தாக்கும் வேகம் குறைந்தது. வீரமும் சோர்வுற்றது. எதிரிகளால் முஸ்லிம்களின் வேகத்திற்கு தாக்கு பிடிக்க முடியவில்லை. நபி(ஸல்),
“அதி சீக்கிரத்தில் இக்கூட்டம் சிதறடிக்கப்படும்.மேலும் (இவர்கள்) புறங்காட்டி ஓடுவார்கள்”
(அல்குர் ஆன் 54:45)
என்ற வசனத்தை தொடர்ந்து கூறிகொண்டே இருந்தார்கள். இது முஸ்லிம் படையினருக்கு மேலும் உற்சாகம் அளித்தது , இப்போது முன்னினும் பலமாக தாக்க தொடங்கினார்கள்.
(நூல்: புகாரி).
வானவர்களின் உதவி :
———————————————
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அன்றைய தினத்தில் முஸ்லிம்களில் ஒருவர் தமக்கு முன் சென்றுகொண்டிருந்த இணைவைப்பாளர்களில் ஒருவரை விரட்டிச் சென்றுகொண்டிருந்தார். அப்போது தமக்கு மேலே சாட்டையைச் சுழற்றி அடிக்கும் சப்தத்தையும், ஒரு குதிரை வீரர் ”ஹைஸூம்! முன்னேறிச் செல்” என்று கூறியதையும் செவியுற்றார். உடனே தமக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த அந்த இணைவைப்பாளர் மல்லாந்து வீழ்ந்து கிடப்பதைக் கண்டார். அந்த இணைவைப்பாளரின் (அருகில் சென்று) அவர் பார்த்த போது, அவனது மூக்கில் காயமேற்பட்டிருப்பதையும் சாட்டையால் அடிபட்டது போல் அவனது முகம் கிழிந்து முகமெல்லாம் பச்சையாகக் கன்றிப் போயிருப்பதையும் கண்டார். உடனே அந்த அன்சாரீ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, அதைப் பற்றித் தெரிவித்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ”நீர் சொன்னது உண்மையே. இது மூன்றாவது வானிலிருந்து இறங்கிய (வானவர்களின்) உதவியாகும்” என்று கூறினார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 32. எண் : 3621
பாடம் : அறப்போரும் வழிகாட்டு நெறிகளும்
அபூதாவூது அல் மாசினி(ரலி) கூறுகிறார்கள்: நான் ஒரு எதிரியை வெட்டுவதற்காக அவனை பின் தொடர்ந்த போது எனது வாள் அவன் மீது படுவதற்கு முன்னதாகவே அவனது தலை கீழே விழுந்தது, அவனை வேறு யாரோ வெட்டினார்கள் என்பதை உணர்ந்து கொண்டேன் (நூல் : புகாரி)
முஸ்லிம்கள் மிகத் துணிவுடன் சண்டையிட்டார்கள், வானவர்களும் அவர்களுக்கு உதவி செய்தார்கள்
அன்சாரிகளில் ஒருவர், அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிபை கைது செய்து நபி(ஸல்) அவர்களிடம் அழைத்து வந்தபோது, அவர் கூறினார், “இவர் என்னை கைது செய்யவில்லை. என்னை கைது செய்தது, சிறந்த குதிரையின் மீது இருந்த அழகிய முகம் உடைய ஒருவர்தான்” என்றார். அதற்கு அந்த அன்சாரி வீரரோ “இல்லை! நான் தான் கைது செய்தேன்” என்றார்.
“அல்லாஹ்தான் தனது சங்கைமிக்க ஒரு வானவரின் மூலம் உங்களுக்கு உதவி செய்தான்” என்றார்கள் நபி(ஸல்) அவர்கள்.
இப்போது எதிரிகளின் அணியில் சலசலப்பும், தோல்வியின் அடையாளங்களும் தெரியத் துவங்கின. முஸ்லிம்களின் கடும் தாக்குதலுக்கு முன் இணை வைப்போரின் அணி சின்னா பின்னாமாகியது. எதிரிகள் நாலா பக்கங்களிலும் விரைந்து தப்பிக்க முயன்றனர்.
எதிரிகள் நாலா பக்கமும் சிதறி ஓடினர். முஸ்லிம்கள் அவர்களை பின் தொடர்ந்து பணிந்தவர்களை கைது செய்தனர், மீறியவர்களை வெட்டி வீழ்த்தினர்.
ஆனால் அபுஜஹல் இதனை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல், திமிருடன் தனது படையினரை உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தான்....
இன்ஷா அல்லாஹ் ! அடுத்தப் பதிவில் தொடரும்
Ahmed Buhari

No comments:
Post a Comment
சகோதரர்களே உங்கள் கருத்துகளை பகிரலாமே