Friday, September 26, 2014

இருளாக்கிய வெண்மை..!

இருளாக்கிய வெண்மை..!
___________________

சில நாட்கள் ஏன்தான் உதிக்கிறதோ என்று தோன்றும்.அந்த லிஸ்ட்டில் தான் கடந்த 23ம் தேதியும் சேர்ந்திருக்கிறது.
..
எல்லாரையும் பதை பதைக்க வைத்திருக்கிறது டில்லி உயிரியல் பூங்கா.அந்த 15 நிமிட வீடியோ காட்சி நம் கண் முன்னேயே நிழலாடுகிறது.
..
மெக்சூத் என்ற அந்த வாலிபர், 10 நிமிடமாக, விஜய் என்று பெயரிடப்பட்ட வெள்ளைப் புலியைக் கையெடுத்துக் கும்பிட்டுக்கொண்டிருந்த காட்சி பார்க்கிற எல்லோரையும் கண்ணீர் வர வைத்துவிடும்.
..
அந்த வாலிபன் 12ம் வகுப்பு படிக்கும் மாணவன் என்று முதலில் சொல்லப்பட்டது.
..
இன்று, அந்த வாலிபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும், இரண்டு முறை அந்த வாலிபர் புலி இருக்கும் இடத்தில் குதிக்க முயற்சித்ததாகவும், ஆனால் பூங்கா பாதுகாவலர்களால் தடுக்கப்பட்டார் என்றும், அதன் பின்னர் பாதுகாவலர்களின் கண்களை மறைத்து, அந்த வாலிபர் உள்ளே குதித்து விட்டார் என்றும் கூறப்படுகிறது.
..
இதில் பல்வேறு கேள்விகள் எழும்புகிறது.
..
1.மன நிலை பாதிக்கப்பட்டவர் என்றால் அவரோடு அவரது நண்பர்கள் எப்படி வந்தார்கள்?

2.மன நிலை பாதிக்கப்பட்டவர் பள்ளி சீருடை அணிந்திருந்தது ஏன்?

3.இரண்டு முறை கீழே குதிக்க இருந்த அந்த வாலிபனைத் தடுத்த பாதுகாவலர்கள், ஏன் அந்த வாலிபரை அங்கிருந்து அப்புறப்படுத்தவோ அல்லது காவல்துறையிடமோ ஒப்படைக்க முன் வர வில்லை?

4.உடன் வந்த நண்பர்களும் ஏன் அவரை அங்கிருந்து அகற்றுவதற்கு முயற்சிக்கவில்லை?
..
கேள்விகள்..கேள்விகள்..எங்கெங்கும் விடையில்லாக் கேள்விகள்.
..
சரி..இந்தக் கேள்விகளால் தான் என்ன பயன்? இந்தக் கேள்விகளுக்கு விடையளித்துவிட்டால் மட்டும் அந்த வாலிபன் மீண்டு வரப் போகிறாரா?
..
இல்லை..இல்லவேயில்லை.
..
ஆனால் இந்த நிகழ்ச்சியைப் பார்த்த பிறகு, இரவு தூக்கம் இல்லாமல் தவிக்கும் அந்த அர்த்த ராத்திரியில் ஒரே ஒரு கேள்விதான் என் மனதில் நின்றது.
..
அது –
..
கற்றலினால் ஆன பயன் என்ன?
..
எதை எதையெல்லாமோ படிக்கிறோம்..பட்டங்கள் வாங்குகிறோம்..கல்வியாளர் என்று அழைக்கப்படுகிறோம்..அறிவாளிகள் என்று போற்றப்படுகிறோம்..விஞ்ஞானிகள் என்று மதிக்கப்படுகிறோம்..டாக்டர்கள் என்று கெளரவிக்கப்படுகிறோம்.

எல்லாம் சரிதான்.   

               



ஆனால்..கற்றலினால் ஆன பயன் தான் என்ன?
ஒரு புலியை நேருக்கு நேராய் சந்திக்கும்பொழுது எப்படி தப்பிப்பது என்று ஒரு கல்வியும் நமக்குக் கற்றுக் கொடுக்கவில்லையே..
..
ஒரு உயிர் ஒரு புலியிடம் மாட்டிக் கொண்டு 10 நிமிடங்களாக கையெடுத்துக் கும்பிட்டுக்கொண்டேயிருக்கும் பொழுது அந்த உயிரை எப்படிக் காப்பாற்றுவது என்பதை பார்வயாளர்கள் யாருக்கும் நம் கல்வி கற்றுக்கொடுக்கவேயில்லையே..
..
அலெக்ஸாண்டரின் குதிரையின் பெயர் என்ன? தெரிந்து வைத்திருக்கிறோம்.
..
ஆப்பிரிக்காவில் தங்கம் எந்த இடத்தில் கிடைக்கிறது? தெரிந்து வைத்திருக்கிறோம்.
..
கெளதம புத்தரின் இயற்பெயர் என்ன? தெரிந்து வைத்திருக்கிறோம்.
..
“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே.”
..
என்ற பாடலை காரணமேயில்லாமல், வக்கனையாய் மனப்பாடமாய் அறிந்து வைத்திருக்கிறோம்.
..
ஆனால் ஆபத்து நேரத்தில் எப்படி செயல்படுவது என்பதை அறிந்து வைத்திருக்கிறோமா?
..
அந்த வாலிபன், அந்த இடத்தில் அமைதியாய் எழும்பி நின்றிருந்தால் அந்தப் புலி ஒருவேளை தன் உயரத்தை விட வளர்த்தியாய் இருக்கிறானே..இவனை எப்படி எதிர் கொள்வது என்று அமைதியாகத் திரும்பிப் போயிருந்திருக்கும்.
ஏனென்றால் அது பசியினால் அவனைத் தாக்கவில்லை. அப்படித் தாக்கியிருந்தால் அவன் சரீரத்தை அங்கு விட்டு விட்டுப் போயிருக்காது. அதுமாத்திரமல்ல..10 நிமிடங்கள் அவனை அப்படியே பார்த்துக்கொண்டேயிருக்கிறது. தாக்க முனையவேயில்லை.
..
ஆனால் பார்வையாளர்கள் மேலிருந்து கல்லெறிந்த உடன்..அது சினம் கொள்கிறது. மேலே பார்த்து உறுமுகிறது. பார்வையாளர்கள் விடவில்லை. தொடர்ந்து கல்லெறிகிறார்கள். கூச்சலிடுகிறார்கள்.
..
அதன்பிறகுதான் அந்தப் புலி, அந்த வாலிபனைத் தாக்க முயற்சிக்கிறது. அதுவும் இறையைத் தூக்கிக் கொண்டு தன்னிடத்திற்கு தூக்கிக் கொண்டு சென்று விட வேண்டும் என முடிவு செய்து அவனுடைய கழுத்தைக் கவ்விப் பிடிக்கிறது.
இவையெல்லாமே தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
..
காரணம்..அறிவின்மை.. என்ன செய்வது என்கிற அறிவின்மை.
மிருகங்கள் சப்தத்திற்கு மிரளும். ஆனால் நெருப்பிற்கு பயப்படும்.
..
கூடியிருந்த அத்தனை பார்வையாளர்களில் யாராவது ஒருவர், தன் சட்டையைக் கழற்றி, அதில் நெருப்பு வைத்து, அதை அந்த வாலிபனிடத்தில் எறிந்திருந்தால் புலி மிரண்டு ஓடியிருந்திருக்கும்.
..
இந்த அறிவைக் கூட கற்றுக் கொடுக்காமல் (a+b)2 =a2 + 2ab + b2 என்று கற்றுக் கொண்ட வெற்றுத் தேற்றத்தினால் எனக்கு என்ன பயன்?
..
ஒரு விலங்கு தன்னைத் தாக்க வரும் பொழுது, வேறு எந்த உதவியுமே தனக்கு அந்த இடத்தில் கிடைக்கவில்லை.. தப்பித்து ஓடவும் முடியவில்லை..மிருகமோ தன்னிலும் பலத்த உருவம்.. அது முதலையாக இருக்கலாம்..சிங்கமாக இருக்கலாம்.. அல்லது.. யானையாக இருக்கலாம். அதை எப்படி எதிர்கொள்வது என்ற அறிவைக் கற்றுக் கொடுக்காத கல்வியினால் எனக்கென்ன பயன்?
..
அந்த விலங்குகளின் கண்களை நம் கை முஷ்டியினால் பலங்கொண்ட மட்டும் ஓங்கித் தாக்கினால் அவை நிலை குலைந்து ஓடி விடும். நாமும் தப்பிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். அல்லது சிறு மண் துகள்களை அள்ளி அதன் கண்களில் தூவினால் போதும் அவை அந்த இடத்திலிருந்து தப்பித்துச் செல்லத்தான் முயற்சிக்கும்.
..
இந்த அறிவைக்கூடக் கற்றுக்கொடுக்காமல்.. பட்டங்கள் என்ன.. சட்டங்கள் என்ன.. பல்கலைக் கழகங்கள் என்ன?
..
தென்னாப்பிரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் என்ன தோண்டியெடுக்கிறார்கள் என்பதை கற்றுக்கொடுப்பதை விட.. வாழ்க்கைக் கல்வியை முதலில் கற்றுக் கொடுங்கள்.
..
மற்றவர்களை மதிப்பது எப்படி.. மற்றவா்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வது எப்படி? சாலை விதிகள் என்ன? ஏன் சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டும்? அடிப்படைச் சட்டங்கள் என்ன? நமக்கான உரிமைகள் என்ன? காவல் நிலையங்களை எப்படி அணுகுவது?
..
விபத்து ஏற்பட்டால் அதை எப்படி எதிர் கொள்வது? விஷக்கடிகளில் எப்படித் தப்பிப்பது? மாரடைப்பு வந்தால் என்ன செய்வது? நோய்களை எவ்வாறு கண்டறிவது? எந்த மருந்துக்கள் எல்லாம் தடை செய்யப்பட்டவை..பின் விளைவுகள் உள்ளவை?
..
மனைவியிடம் எப்படி நடந்து கொள்வது? கணவனிடம் எப்படி நடந்து கொள்வது? மற்றவர்களை நேசிப்பது எப்படி? நேர்மையாய் இருப்பது எப்படி?
..
இவை எதையுமே கற்றுக் கொடுக்காத கல்வியினால் ஆன பயன் தான் என்ன?
..
இது எதையுமே தெரிந்து கொள்ளாமல்..இனித் தெரிந்து கொள்வதற்கும் வாய்ப்பில்லாமல் துடி துடித்து மரித்துப் போன இந்திய இளைஞனே.. ஒரு ஆசிரியனாய் நான் வெட்கப்படுகிறேன்
..
ஒரு வெண் புலி, உன் வாழ்க்கையை இருளாக்கிவிட்டது.
..
மெக்சூத்தே.. இளம் வாலிபனே-
..
என்னை.. எங்களை மன்னித்து விடு..!

 



Arul Samuel Puliangud

‎அல்லாஹ்‬ என்றால் யாருங்க?

#‎அல்லாஹ்‬ என்றால் யாருங்க?
[கேள்வி:
அல்லான்னா யாருங்க!
(சகோ. ஜெகதீஸ்வரன்)]

‪#‎பதில்‬
ﺑﺴﻢ ﺍﻟﻠﻪ ﺍﻟﺮﺣﻤﻦ ﺍﻟﺮﺣﻴﻢ
(அளவற்ற அருளாளனும் நிகரற்ற
அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்
ஆரம்பிக்கிறேன்)
அல்லாஹ் என்பவன் உங்கள் இறைவன்
நீங்கள்
அல்லாஹ்வை வணங்கினாலும்,
அவனை வணங்கா விட்டாலும்
அவன் தான் உங்கள் இறைவன்!
நீங்கள் அல்லாஹ்வுக்கு
இணைவைத்தாலும், அவனுக்கு
இணைவைக்காவிட்டாலும்
அவன்தான் உங்கள் இறைவன்!
நீங்கள்
அல்லாஹ்வை விரும்பினாலும்,
அவனை வெறுத்தாலும் அவன்
தான் உங்கள் இறைவன்!
கடவுள் என்று ஏதாவது இருக்கிறதா?
சூரியன் வெளிச்சம்
தருகிறது அந்த
வெளிச்சத்தை நோக்கி பூமி
உட்பட அனைத்து கோள்களும்
நகர்கிறது இதன் மூலம்
பகல்களும், இரவுகளும்
ஏற்படுகிறது இதை நிர்வகிப்பது
யார் மனிதனா?
பூமி ஒரே சீராக சுழல்வதால்
தட்ப வெப்ப சீதோஷ்ணத்தில்
மாறுபாடுகள்
ஏற்பட்டு குளிர்காலம்,
மழைக்காலம், வெயில்காலம்
ஆகியன
ஏற்படுகிறது இதை நிர்வகிப்பது
யார் மனிதனா?
நீங்கள் சுவாசிக்கும்
காற்று உங்களின்
சுவாசக்குழாயில் முறையாக
வந்தடைகிறது அதை
கொடுப்பது யார் மனிதனா?
நிலப்பரப்பில் உள்ள
ஈர்ப்பு சக்தியால் நாம்
நடக்கிறோம், அமர்கிறோம்,
ஓடுகிறோம் இந்த
ஈர்ப்பு சக்தியை நிர்வகிப்பவன்
யார் மனிதனா?
நிலத்தில் மனிதன் உழுகிறான்
அவனுக்கு விதையை
அறிமுகப்படுத்தியவன் யார்
மனிதனா?
கடல் நீரை மழை நீராக்கி
பருகுவதற்கும்
நிலத்தை உழுவதற்கும்
வானிலிருந்து கொட்டச்
செய்பவன் யார் மனிதனா?
ஆகாயத்தில் பறக்கும்
விமானத்திற்கு பாதையாக
வானத்தை கொடுத்தவன் யார்
மனிதனா?
குடும்ப உறவு கொள்ள
மனிதர்களின் உடலில்
விந்துத்துளிகளை
செலுத்தியவன் யார் மனிதனா?
வயிற்றுப் பசியை தனிக்க மலம்
சாப்பிடுவதில்லை மாறாக
உணவு உட்கொள்கிறோம்,
தாகத்தை தனிக்க
சிறுநீரை குடிப்பதில்லை மாறாக
சுத்தமான நீரை பருகுகிறோம்
மனிதனுக்கு இந்த
பகுத்தறிவை கொடுத்தவன்
யாரோ அவனே இறைவன்!
இறைவன் இல்லை என்று சொல்பவன்
நாத்திகன் இவன் மாபெரும் பொய்யன்
இவனுடைய கழுத்தில்
கத்தியை வைத்தால்
கடவுளே என்பான்
காப்பாற்றப்பட்டவுடன் கடவுள் யார்
என்பான்!
அல்லாஹ்வுக்கு பிறப்பு உள்ளதா?
ஒவ்வொரு மனிதனும் படைத்த
இறைவனை தன்னுடைய பலவீனமான
ஸ்தானத்தில் வைத்துத்தான்
பார்க்கிறான் படைத்த
இறைவனை இறைவன் என்ற
ஸ்தானத்தில் வைத்து பார்ப் பதில்லை.
சிந்தித்துப்பாருங்கள்! உங்கள் தாயின்
வயிற்றில் நீங்கள் 3 மாத கருவாக
இருந்தீர்கள் அந்த குறிப்பிட்ட 3
மாதங்களுக்கு முன்பு நீங்கள்
என்னவாக இருந்தீர்கள் என்பதை கூற
முடியுமா?
ஒரு மனிதன் தன் தாயின் வயிற்றில் 3
மாத கருவாக இருப்பதற்கு முன்
அற்பத்திலும் அற்பமான ஒரு ஆட்டின்
புளுக்கையாக கூட
இருந்திருக்கவில்லை அப்படிப்பட்ட
மனிதனை இறைவன் கருவாக
உருவாக்கி, அதனுள் உயிர் கொடுத்து,
பெயர் கொடுத்து,
பெற்றோரை கொடுத்து கல்வி அறிவைக்
கொடுத்து உலகில்
வாழவைத்து மனிதனாக்கி சிந்திக்க
மூளையை கொடுத்தால் இவன்
படைத்த இறைவனின்
பிறப்பை பற்றி சிந்தித்து கேள்வி
எழுப்புகிறான். இந்த மனிதன்
இறைவனுக்கு நன்றியுள்ள
அடியானாக இருப்பதை காட்டிலும்
நன்றிகெட்டவனாகத்தான்
வாழ்ந்து மடிகிறான்!
இன்னும்; அவன்தான் உங்களை வாழச்
செய்கிறான்; பிறகு அவனே மரணம்
அடையச் செய்கிறான். அதன் பின்னர்
அவனே உங்களை உயிர்ப்பிப்பவன்
(எனினும்) நிச்சயமாக மனிதன்
நன்றிகெட்டவனாக இருக்கிறான்
(அல்குர்ஆன் 22:66)
அல்லாஹ்வுக்கு மனைவி, பிள்ளைகள்
உள்ளனரா?
ஒரு மனிதனுக்கு மனைவியும்,
பிள்ளைகளும் இருப்பது அவனுடைய
வம்சத்தை பல்கிப்
பெருகுவதற்காகவே தவிர
வேறு எதற்கும் இல்லை. ஒரு ஆணும்
பெண்ணும் குடும்ப வாழ்வில்
ஒன்று சேருவதன் மூலமாக தந்தை,
மகன், பேரன், கொள்ளுப்பேரன்
என்று வம்சம் அபிவிருத்தியாகும்
அதே நேரம் குடும்பத்தில் மரணங்கள்
சம்பவிக்கும் காரணம் மனிதன்
மரணிக்க பிறந்தவன்! இதோ மனித
இனமும் அவனது குடும்ப
அபிவிருத்தி பற்றிய
விழிப்புணர்வு படம்.
மனிதனுக்கு அவனுடைய குடும்பம்
சோதனைக் களமாக இருக்கிறது அவன்
தன் தாயை, தந்தையை, சகோதர
உறவை, மனைவியை,
மக்களை என்று அனைவரையும்
முறையாக கவனிக்கிறானா?
இவர்களுக்காக உழைக்கிறானா?
திருடுகிறானா? அல்லது இவன்
குடும்பத்தை மறந்து தவறான
பாதையில் செல்கிறானா? என்பதுதான்
அந்த சோதனை! இந்த
சோதனைகளை கொடுப்பவன்
இறைவன்
எனவே இறைவனை எவனும் சோதிக்க
இயலாது மேலும்
அவனுக்கு குடும்பமும் கிடையாது!
“அல்லாஹ் ஒருவன்” என
(முஹம்மத்) நீர் கூறுவீராக!.
அல்லாஹ் தேவையற்றவன்.
(யாரையும்) அவன்
பெறவில்லை (யாருக்கும்) பிறக்கவும்
இல்லை. மேலும் அவனுக்கு நிகராக
ஒருவரும் இல்லை. (அல்குர்ஆன்-
112)
அல்லாஹ் ஒருவன்,
அவனுக்கு இணை துணை கிடையாது!
இஸ்லாம் போதிக்கும் கடவுள்
கொள்கை உலகில் உள்ள மற்ற
மதங்களின் இறைக்
கொள்கைகளை விட
சற்று வேறுபட்டு நிற்கிறது. காரணம்
இஸ்லாம் ஓரிரைக்
கொள்கையை போதிக்கிறது மற்ற
மதங்கள் அனைத்தும் பல கடவுள்
கொள்கையை போதிக்கிறது!

Hameed Irshad