மல்லியூரான்
முகநூல் மற்றும் வலைதளங்களில் எண்ணற்ற நல்ல படைப்புக்களின் தொகுப்பு களஞ்சியம் இந்த மல்லியூரான் வலைத்தளம்
Monday, July 25, 2016
Friday, September 26, 2014
இருளாக்கிய வெண்மை..!
இருளாக்கிய வெண்மை..!
___________________
சில நாட்கள் ஏன்தான் உதிக்கிறதோ என்று தோன்றும்.அந்த லிஸ்ட்டில் தான் கடந்த 23ம் தேதியும் சேர்ந்திருக்கிறது.
..
எல்லாரையும் பதை பதைக்க வைத்திருக்கிறது டில்லி உயிரியல் பூங்கா.அந்த 15 நிமிட வீடியோ காட்சி நம் கண் முன்னேயே நிழலாடுகிறது.
..
மெக்சூத் என்ற அந்த வாலிபர், 10 நிமிடமாக, விஜய் என்று பெயரிடப்பட்ட
வெள்ளைப் புலியைக் கையெடுத்துக் கும்பிட்டுக்கொண்டிருந்த காட்சி பார்க்கிற
எல்லோரையும் கண்ணீர் வர வைத்துவிடும்.
..
அந்த வாலிபன் 12ம் வகுப்பு படிக்கும் மாணவன் என்று முதலில் சொல்லப்பட்டது.
..
இன்று, அந்த வாலிபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும், இரண்டு முறை அந்த
வாலிபர் புலி இருக்கும் இடத்தில் குதிக்க முயற்சித்ததாகவும், ஆனால் பூங்கா
பாதுகாவலர்களால் தடுக்கப்பட்டார் என்றும், அதன் பின்னர் பாதுகாவலர்களின்
கண்களை மறைத்து, அந்த வாலிபர் உள்ளே குதித்து விட்டார் என்றும்
கூறப்படுகிறது.
..
இதில் பல்வேறு கேள்விகள் எழும்புகிறது.
..
1.மன நிலை பாதிக்கப்பட்டவர் என்றால் அவரோடு அவரது நண்பர்கள் எப்படி வந்தார்கள்?
2.மன நிலை பாதிக்கப்பட்டவர் பள்ளி சீருடை அணிந்திருந்தது ஏன்?
3.இரண்டு முறை கீழே குதிக்க இருந்த அந்த வாலிபனைத் தடுத்த பாதுகாவலர்கள், ஏன் அந்த வாலிபரை அங்கிருந்து அப்புறப்படுத்தவோ அல்லது காவல்துறையிடமோ ஒப்படைக்க முன் வர வில்லை?
4.உடன் வந்த நண்பர்களும் ஏன் அவரை அங்கிருந்து அகற்றுவதற்கு முயற்சிக்கவில்லை?
..
கேள்விகள்..கேள்விகள்..எங்கெங்கும் விடையில்லாக் கேள்விகள்.
..
சரி..இந்தக் கேள்விகளால் தான் என்ன பயன்? இந்தக் கேள்விகளுக்கு விடையளித்துவிட்டால் மட்டும் அந்த வாலிபன் மீண்டு வரப் போகிறாரா?
..
இல்லை..இல்லவேயில்லை.
..
ஆனால் இந்த நிகழ்ச்சியைப் பார்த்த பிறகு, இரவு தூக்கம் இல்லாமல் தவிக்கும்
அந்த அர்த்த ராத்திரியில் ஒரே ஒரு கேள்விதான் என் மனதில் நின்றது.
..
அது –
..
கற்றலினால் ஆன பயன் என்ன?
..
எதை எதையெல்லாமோ படிக்கிறோம்..பட்டங்கள் வாங்குகிறோம்..கல்வியாளர்
என்று அழைக்கப்படுகிறோம்..அறிவாளிகள் என்று
போற்றப்படுகிறோம்..விஞ்ஞானிகள் என்று மதிக்கப்படுகிறோம்..டாக்டர்கள்
என்று கெளரவிக்கப்படுகிறோம்.
எல்லாம் சரிதான்.
ஆனால்..கற்றலினால் ஆன பயன் தான் என்ன?
ஒரு புலியை நேருக்கு நேராய் சந்திக்கும்பொழுது எப்படி தப்பிப்பது என்று ஒரு கல்வியும் நமக்குக் கற்றுக் கொடுக்கவில்லையே..
..
ஒரு உயிர் ஒரு புலியிடம் மாட்டிக் கொண்டு 10 நிமிடங்களாக கையெடுத்துக்
கும்பிட்டுக்கொண்டேயிருக்கும் பொழுது அந்த உயிரை எப்படிக் காப்பாற்றுவது
என்பதை பார்வயாளர்கள் யாருக்கும் நம் கல்வி கற்றுக்கொடுக்கவேயில்லையே..
..
அலெக்ஸாண்டரின் குதிரையின் பெயர் என்ன? தெரிந்து வைத்திருக்கிறோம்.
..
ஆப்பிரிக்காவில் தங்கம் எந்த இடத்தில் கிடைக்கிறது? தெரிந்து வைத்திருக்கிறோம்.
..
கெளதம புத்தரின் இயற்பெயர் என்ன? தெரிந்து வைத்திருக்கிறோம்.
..
“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே.”
..
என்ற பாடலை காரணமேயில்லாமல், வக்கனையாய் மனப்பாடமாய் அறிந்து வைத்திருக்கிறோம்.
..
ஆனால் ஆபத்து நேரத்தில் எப்படி செயல்படுவது என்பதை அறிந்து வைத்திருக்கிறோமா?
..
அந்த வாலிபன், அந்த இடத்தில் அமைதியாய் எழும்பி நின்றிருந்தால் அந்தப்
புலி ஒருவேளை தன் உயரத்தை விட வளர்த்தியாய் இருக்கிறானே..இவனை எப்படி எதிர்
கொள்வது என்று அமைதியாகத் திரும்பிப் போயிருந்திருக்கும்.
ஏனென்றால்
அது பசியினால் அவனைத் தாக்கவில்லை. அப்படித் தாக்கியிருந்தால் அவன்
சரீரத்தை அங்கு விட்டு விட்டுப் போயிருக்காது. அதுமாத்திரமல்ல..10
நிமிடங்கள் அவனை அப்படியே பார்த்துக்கொண்டேயிருக்கிறது. தாக்க
முனையவேயில்லை.
..
ஆனால் பார்வையாளர்கள் மேலிருந்து கல்லெறிந்த
உடன்..அது சினம் கொள்கிறது. மேலே பார்த்து உறுமுகிறது. பார்வையாளர்கள்
விடவில்லை. தொடர்ந்து கல்லெறிகிறார்கள். கூச்சலிடுகிறார்கள்.
..
அதன்பிறகுதான் அந்தப் புலி, அந்த வாலிபனைத் தாக்க முயற்சிக்கிறது. அதுவும்
இறையைத் தூக்கிக் கொண்டு தன்னிடத்திற்கு தூக்கிக் கொண்டு சென்று விட
வேண்டும் என முடிவு செய்து அவனுடைய கழுத்தைக் கவ்விப் பிடிக்கிறது.
இவையெல்லாமே தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
..
காரணம்..அறிவின்மை.. என்ன செய்வது என்கிற அறிவின்மை.
மிருகங்கள் சப்தத்திற்கு மிரளும். ஆனால் நெருப்பிற்கு பயப்படும்.
..
கூடியிருந்த அத்தனை பார்வையாளர்களில் யாராவது ஒருவர், தன் சட்டையைக்
கழற்றி, அதில் நெருப்பு வைத்து, அதை அந்த வாலிபனிடத்தில் எறிந்திருந்தால்
புலி மிரண்டு ஓடியிருந்திருக்கும்.
..
இந்த அறிவைக் கூட கற்றுக் கொடுக்காமல் (a+b)2 =a2 + 2ab + b2 என்று கற்றுக் கொண்ட வெற்றுத் தேற்றத்தினால் எனக்கு என்ன பயன்?
..
ஒரு விலங்கு தன்னைத் தாக்க வரும் பொழுது, வேறு எந்த உதவியுமே தனக்கு அந்த
இடத்தில் கிடைக்கவில்லை.. தப்பித்து ஓடவும் முடியவில்லை..மிருகமோ
தன்னிலும் பலத்த உருவம்.. அது முதலையாக இருக்கலாம்..சிங்கமாக இருக்கலாம்..
அல்லது.. யானையாக இருக்கலாம். அதை எப்படி எதிர்கொள்வது என்ற அறிவைக்
கற்றுக் கொடுக்காத கல்வியினால் எனக்கென்ன பயன்?
..
அந்த
விலங்குகளின் கண்களை நம் கை முஷ்டியினால் பலங்கொண்ட மட்டும் ஓங்கித்
தாக்கினால் அவை நிலை குலைந்து ஓடி விடும். நாமும் தப்பிப்பதற்கு ஒரு
வாய்ப்பு கிடைக்கும். அல்லது சிறு மண் துகள்களை அள்ளி அதன் கண்களில்
தூவினால் போதும் அவை அந்த இடத்திலிருந்து தப்பித்துச் செல்லத்தான்
முயற்சிக்கும்.
..
இந்த அறிவைக்கூடக் கற்றுக்கொடுக்காமல்.. பட்டங்கள் என்ன.. சட்டங்கள் என்ன.. பல்கலைக் கழகங்கள் என்ன?
..
தென்னாப்பிரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் என்ன தோண்டியெடுக்கிறார்கள்
என்பதை கற்றுக்கொடுப்பதை விட.. வாழ்க்கைக் கல்வியை முதலில் கற்றுக்
கொடுங்கள்.
..
மற்றவர்களை மதிப்பது எப்படி.. மற்றவா்களின்
உணர்வுகளைப் புரிந்து கொள்வது எப்படி? சாலை விதிகள் என்ன? ஏன் சாலை
விதிகளைப் பின்பற்ற வேண்டும்? அடிப்படைச் சட்டங்கள் என்ன? நமக்கான உரிமைகள்
என்ன? காவல் நிலையங்களை எப்படி அணுகுவது?
..
விபத்து ஏற்பட்டால்
அதை எப்படி எதிர் கொள்வது? விஷக்கடிகளில் எப்படித் தப்பிப்பது? மாரடைப்பு
வந்தால் என்ன செய்வது? நோய்களை எவ்வாறு கண்டறிவது? எந்த மருந்துக்கள்
எல்லாம் தடை செய்யப்பட்டவை..பின் விளைவுகள் உள்ளவை?
..
மனைவியிடம் எப்படி நடந்து கொள்வது? கணவனிடம் எப்படி நடந்து கொள்வது? மற்றவர்களை நேசிப்பது எப்படி? நேர்மையாய் இருப்பது எப்படி?
..
இவை எதையுமே கற்றுக் கொடுக்காத கல்வியினால் ஆன பயன் தான் என்ன?
..
இது எதையுமே தெரிந்து கொள்ளாமல்..இனித் தெரிந்து கொள்வதற்கும்
வாய்ப்பில்லாமல் துடி துடித்து மரித்துப் போன இந்திய இளைஞனே.. ஒரு
ஆசிரியனாய் நான் வெட்கப்படுகிறேன்
..
ஒரு வெண் புலி, உன் வாழ்க்கையை இருளாக்கிவிட்டது.
..
மெக்சூத்தே.. இளம் வாலிபனே-
..
என்னை.. எங்களை மன்னித்து விடு..!
Arul Samuel Puliangud
அல்லாஹ் என்றால் யாருங்க?
#அல்லாஹ் என்றால் யாருங்க?
[கேள்வி:
அல்லான்னா யாருங்க!
(சகோ. ஜெகதீஸ்வரன்)]
#பதில்
ﺑﺴﻢ ﺍﻟﻠﻪ ﺍﻟﺮﺣﻤﻦ ﺍﻟﺮﺣﻴﻢ
(அளவற்ற அருளாளனும் நிகரற்ற
அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்
ஆரம்பிக்கிறேன்)
அல்லாஹ் என்பவன் உங்கள் இறைவன்
நீங்கள்
அல்லாஹ்வை வணங்கினாலும்,
அவனை வணங்கா விட்டாலும்
அவன் தான் உங்கள் இறைவன்!
நீங்கள் அல்லாஹ்வுக்கு
இணைவைத்தாலும், அவனுக்கு
இணைவைக்காவிட்டாலும்
அவன்தான் உங்கள் இறைவன்!
நீங்கள்
அல்லாஹ்வை விரும்பினாலும்,
அவனை வெறுத்தாலும் அவன்
தான் உங்கள் இறைவன்!
கடவுள் என்று ஏதாவது இருக்கிறதா?
சூரியன் வெளிச்சம்
தருகிறது அந்த
வெளிச்சத்தை நோக்கி பூமி
உட்பட அனைத்து கோள்களும்
நகர்கிறது இதன் மூலம்
பகல்களும், இரவுகளும்
ஏற்படுகிறது இதை நிர்வகிப்பது
யார் மனிதனா?
பூமி ஒரே சீராக சுழல்வதால்
தட்ப வெப்ப சீதோஷ்ணத்தில்
மாறுபாடுகள்
ஏற்பட்டு குளிர்காலம்,
மழைக்காலம், வெயில்காலம்
ஆகியன
ஏற்படுகிறது இதை நிர்வகிப்பது
யார் மனிதனா?
நீங்கள் சுவாசிக்கும்
காற்று உங்களின்
சுவாசக்குழாயில் முறையாக
வந்தடைகிறது அதை
கொடுப்பது யார் மனிதனா?
நிலப்பரப்பில் உள்ள
ஈர்ப்பு சக்தியால் நாம்
நடக்கிறோம், அமர்கிறோம்,
ஓடுகிறோம் இந்த
ஈர்ப்பு சக்தியை நிர்வகிப்பவன்
யார் மனிதனா?
நிலத்தில் மனிதன் உழுகிறான்
அவனுக்கு விதையை
அறிமுகப்படுத்தியவன் யார்
மனிதனா?
கடல் நீரை மழை நீராக்கி
பருகுவதற்கும்
நிலத்தை உழுவதற்கும்
வானிலிருந்து கொட்டச்
செய்பவன் யார் மனிதனா?
ஆகாயத்தில் பறக்கும்
விமானத்திற்கு பாதையாக
வானத்தை கொடுத்தவன் யார்
மனிதனா?
குடும்ப உறவு கொள்ள
மனிதர்களின் உடலில்
விந்துத்துளிகளை
செலுத்தியவன் யார் மனிதனா?
வயிற்றுப் பசியை தனிக்க மலம்
சாப்பிடுவதில்லை மாறாக
உணவு உட்கொள்கிறோம்,
தாகத்தை தனிக்க
சிறுநீரை குடிப்பதில்லை மாறாக
சுத்தமான நீரை பருகுகிறோம்
மனிதனுக்கு இந்த
பகுத்தறிவை கொடுத்தவன்
யாரோ அவனே இறைவன்!
இறைவன் இல்லை என்று சொல்பவன்
நாத்திகன் இவன் மாபெரும் பொய்யன்
இவனுடைய கழுத்தில்
கத்தியை வைத்தால்
கடவுளே என்பான்
காப்பாற்றப்பட்டவுடன் கடவுள் யார்
என்பான்!
அல்லாஹ்வுக்கு பிறப்பு உள்ளதா?
ஒவ்வொரு மனிதனும் படைத்த
இறைவனை தன்னுடைய பலவீனமான
ஸ்தானத்தில் வைத்துத்தான்
பார்க்கிறான் படைத்த
இறைவனை இறைவன் என்ற
ஸ்தானத்தில் வைத்து பார்ப் பதில்லை.
சிந்தித்துப்பாருங்கள்! உங்கள் தாயின்
வயிற்றில் நீங்கள் 3 மாத கருவாக
இருந்தீர்கள் அந்த குறிப்பிட்ட 3
மாதங்களுக்கு முன்பு நீங்கள்
என்னவாக இருந்தீர்கள் என்பதை கூற
முடியுமா?
ஒரு மனிதன் தன் தாயின் வயிற்றில் 3
மாத கருவாக இருப்பதற்கு முன்
அற்பத்திலும் அற்பமான ஒரு ஆட்டின்
புளுக்கையாக கூட
இருந்திருக்கவில்லை அப்படிப்பட்ட
மனிதனை இறைவன் கருவாக
உருவாக்கி, அதனுள் உயிர் கொடுத்து,
பெயர் கொடுத்து,
பெற்றோரை கொடுத்து கல்வி அறிவைக்
கொடுத்து உலகில்
வாழவைத்து மனிதனாக்கி சிந்திக்க
மூளையை கொடுத்தால் இவன்
படைத்த இறைவனின்
பிறப்பை பற்றி சிந்தித்து கேள்வி
எழுப்புகிறான். இந்த மனிதன்
இறைவனுக்கு நன்றியுள்ள
அடியானாக இருப்பதை காட்டிலும்
நன்றிகெட்டவனாகத்தான்
வாழ்ந்து மடிகிறான்!
இன்னும்; அவன்தான் உங்களை வாழச்
செய்கிறான்; பிறகு அவனே மரணம்
அடையச் செய்கிறான். அதன் பின்னர்
அவனே உங்களை உயிர்ப்பிப்பவன்
(எனினும்) நிச்சயமாக மனிதன்
நன்றிகெட்டவனாக இருக்கிறான்
(அல்குர்ஆன் 22:66)
அல்லாஹ்வுக்கு மனைவி, பிள்ளைகள்
உள்ளனரா?
ஒரு மனிதனுக்கு மனைவியும்,
பிள்ளைகளும் இருப்பது அவனுடைய
வம்சத்தை பல்கிப்
பெருகுவதற்காகவே தவிர
வேறு எதற்கும் இல்லை. ஒரு ஆணும்
பெண்ணும் குடும்ப வாழ்வில்
ஒன்று சேருவதன் மூலமாக தந்தை,
மகன், பேரன், கொள்ளுப்பேரன்
என்று வம்சம் அபிவிருத்தியாகும்
அதே நேரம் குடும்பத்தில் மரணங்கள்
சம்பவிக்கும் காரணம் மனிதன்
மரணிக்க பிறந்தவன்! இதோ மனித
இனமும் அவனது குடும்ப
அபிவிருத்தி பற்றிய
விழிப்புணர்வு படம்.
மனிதனுக்கு அவனுடைய குடும்பம்
சோதனைக் களமாக இருக்கிறது அவன்
தன் தாயை, தந்தையை, சகோதர
உறவை, மனைவியை,
மக்களை என்று அனைவரையும்
முறையாக கவனிக்கிறானா?
இவர்களுக்காக உழைக்கிறானா?
திருடுகிறானா? அல்லது இவன்
குடும்பத்தை மறந்து தவறான
பாதையில் செல்கிறானா? என்பதுதான்
அந்த சோதனை! இந்த
சோதனைகளை கொடுப்பவன்
இறைவன்
எனவே இறைவனை எவனும் சோதிக்க
இயலாது மேலும்
அவனுக்கு குடும்பமும் கிடையாது!
“அல்லாஹ் ஒருவன்” என
(முஹம்மத்) நீர் கூறுவீராக!.
அல்லாஹ் தேவையற்றவன்.
(யாரையும்) அவன்
பெறவில்லை (யாருக்கும்) பிறக்கவும்
இல்லை. மேலும் அவனுக்கு நிகராக
ஒருவரும் இல்லை. (அல்குர்ஆன்-
112)
அல்லாஹ் ஒருவன்,
அவனுக்கு இணை துணை கிடையாது!
இஸ்லாம் போதிக்கும் கடவுள்
கொள்கை உலகில் உள்ள மற்ற
மதங்களின் இறைக்
கொள்கைகளை விட
சற்று வேறுபட்டு நிற்கிறது. காரணம்
இஸ்லாம் ஓரிரைக்
கொள்கையை போதிக்கிறது மற்ற
மதங்கள் அனைத்தும் பல கடவுள்
கொள்கையை போதிக்கிறது!
Hameed Irshad
[கேள்வி:
அல்லான்னா யாருங்க!
(சகோ. ஜெகதீஸ்வரன்)]
#பதில்
ﺑﺴﻢ ﺍﻟﻠﻪ ﺍﻟﺮﺣﻤﻦ ﺍﻟﺮﺣﻴﻢ
(அளவற்ற அருளாளனும் நிகரற்ற
அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்
ஆரம்பிக்கிறேன்)
அல்லாஹ் என்பவன் உங்கள் இறைவன்
நீங்கள்
அல்லாஹ்வை வணங்கினாலும்,
அவனை வணங்கா விட்டாலும்
அவன் தான் உங்கள் இறைவன்!
நீங்கள் அல்லாஹ்வுக்கு
இணைவைத்தாலும், அவனுக்கு
இணைவைக்காவிட்டாலும்
அவன்தான் உங்கள் இறைவன்!
நீங்கள்
அல்லாஹ்வை விரும்பினாலும்,
அவனை வெறுத்தாலும் அவன்
தான் உங்கள் இறைவன்!
கடவுள் என்று ஏதாவது இருக்கிறதா?
சூரியன் வெளிச்சம்
தருகிறது அந்த
வெளிச்சத்தை நோக்கி பூமி
உட்பட அனைத்து கோள்களும்
நகர்கிறது இதன் மூலம்
பகல்களும், இரவுகளும்
ஏற்படுகிறது இதை நிர்வகிப்பது
யார் மனிதனா?
பூமி ஒரே சீராக சுழல்வதால்
தட்ப வெப்ப சீதோஷ்ணத்தில்
மாறுபாடுகள்
ஏற்பட்டு குளிர்காலம்,
மழைக்காலம், வெயில்காலம்
ஆகியன
ஏற்படுகிறது இதை நிர்வகிப்பது
யார் மனிதனா?
நீங்கள் சுவாசிக்கும்
காற்று உங்களின்
சுவாசக்குழாயில் முறையாக
வந்தடைகிறது அதை
கொடுப்பது யார் மனிதனா?
நிலப்பரப்பில் உள்ள
ஈர்ப்பு சக்தியால் நாம்
நடக்கிறோம், அமர்கிறோம்,
ஓடுகிறோம் இந்த
ஈர்ப்பு சக்தியை நிர்வகிப்பவன்
யார் மனிதனா?
நிலத்தில் மனிதன் உழுகிறான்
அவனுக்கு விதையை
அறிமுகப்படுத்தியவன் யார்
மனிதனா?
கடல் நீரை மழை நீராக்கி
பருகுவதற்கும்
நிலத்தை உழுவதற்கும்
வானிலிருந்து கொட்டச்
செய்பவன் யார் மனிதனா?
ஆகாயத்தில் பறக்கும்
விமானத்திற்கு பாதையாக
வானத்தை கொடுத்தவன் யார்
மனிதனா?
குடும்ப உறவு கொள்ள
மனிதர்களின் உடலில்
விந்துத்துளிகளை
செலுத்தியவன் யார் மனிதனா?
வயிற்றுப் பசியை தனிக்க மலம்
சாப்பிடுவதில்லை மாறாக
உணவு உட்கொள்கிறோம்,
தாகத்தை தனிக்க
சிறுநீரை குடிப்பதில்லை மாறாக
சுத்தமான நீரை பருகுகிறோம்
மனிதனுக்கு இந்த
பகுத்தறிவை கொடுத்தவன்
யாரோ அவனே இறைவன்!
இறைவன் இல்லை என்று சொல்பவன்
நாத்திகன் இவன் மாபெரும் பொய்யன்
இவனுடைய கழுத்தில்
கத்தியை வைத்தால்
கடவுளே என்பான்
காப்பாற்றப்பட்டவுடன் கடவுள் யார்
என்பான்!
அல்லாஹ்வுக்கு பிறப்பு உள்ளதா?
ஒவ்வொரு மனிதனும் படைத்த
இறைவனை தன்னுடைய பலவீனமான
ஸ்தானத்தில் வைத்துத்தான்
பார்க்கிறான் படைத்த
இறைவனை இறைவன் என்ற
ஸ்தானத்தில் வைத்து பார்ப் பதில்லை.
சிந்தித்துப்பாருங்கள்! உங்கள் தாயின்
வயிற்றில் நீங்கள் 3 மாத கருவாக
இருந்தீர்கள் அந்த குறிப்பிட்ட 3
மாதங்களுக்கு முன்பு நீங்கள்
என்னவாக இருந்தீர்கள் என்பதை கூற
முடியுமா?
ஒரு மனிதன் தன் தாயின் வயிற்றில் 3
மாத கருவாக இருப்பதற்கு முன்
அற்பத்திலும் அற்பமான ஒரு ஆட்டின்
புளுக்கையாக கூட
இருந்திருக்கவில்லை அப்படிப்பட்ட
மனிதனை இறைவன் கருவாக
உருவாக்கி, அதனுள் உயிர் கொடுத்து,
பெயர் கொடுத்து,
பெற்றோரை கொடுத்து கல்வி அறிவைக்
கொடுத்து உலகில்
வாழவைத்து மனிதனாக்கி சிந்திக்க
மூளையை கொடுத்தால் இவன்
படைத்த இறைவனின்
பிறப்பை பற்றி சிந்தித்து கேள்வி
எழுப்புகிறான். இந்த மனிதன்
இறைவனுக்கு நன்றியுள்ள
அடியானாக இருப்பதை காட்டிலும்
நன்றிகெட்டவனாகத்தான்
வாழ்ந்து மடிகிறான்!
இன்னும்; அவன்தான் உங்களை வாழச்
செய்கிறான்; பிறகு அவனே மரணம்
அடையச் செய்கிறான். அதன் பின்னர்
அவனே உங்களை உயிர்ப்பிப்பவன்
(எனினும்) நிச்சயமாக மனிதன்
நன்றிகெட்டவனாக இருக்கிறான்
(அல்குர்ஆன் 22:66)
அல்லாஹ்வுக்கு மனைவி, பிள்ளைகள்
உள்ளனரா?
ஒரு மனிதனுக்கு மனைவியும்,
பிள்ளைகளும் இருப்பது அவனுடைய
வம்சத்தை பல்கிப்
பெருகுவதற்காகவே தவிர
வேறு எதற்கும் இல்லை. ஒரு ஆணும்
பெண்ணும் குடும்ப வாழ்வில்
ஒன்று சேருவதன் மூலமாக தந்தை,
மகன், பேரன், கொள்ளுப்பேரன்
என்று வம்சம் அபிவிருத்தியாகும்
அதே நேரம் குடும்பத்தில் மரணங்கள்
சம்பவிக்கும் காரணம் மனிதன்
மரணிக்க பிறந்தவன்! இதோ மனித
இனமும் அவனது குடும்ப
அபிவிருத்தி பற்றிய
விழிப்புணர்வு படம்.
மனிதனுக்கு அவனுடைய குடும்பம்
சோதனைக் களமாக இருக்கிறது அவன்
தன் தாயை, தந்தையை, சகோதர
உறவை, மனைவியை,
மக்களை என்று அனைவரையும்
முறையாக கவனிக்கிறானா?
இவர்களுக்காக உழைக்கிறானா?
திருடுகிறானா? அல்லது இவன்
குடும்பத்தை மறந்து தவறான
பாதையில் செல்கிறானா? என்பதுதான்
அந்த சோதனை! இந்த
சோதனைகளை கொடுப்பவன்
இறைவன்
எனவே இறைவனை எவனும் சோதிக்க
இயலாது மேலும்
அவனுக்கு குடும்பமும் கிடையாது!
“அல்லாஹ் ஒருவன்” என
(முஹம்மத்) நீர் கூறுவீராக!.
அல்லாஹ் தேவையற்றவன்.
(யாரையும்) அவன்
பெறவில்லை (யாருக்கும்) பிறக்கவும்
இல்லை. மேலும் அவனுக்கு நிகராக
ஒருவரும் இல்லை. (அல்குர்ஆன்-
112)
அல்லாஹ் ஒருவன்,
அவனுக்கு இணை துணை கிடையாது!
இஸ்லாம் போதிக்கும் கடவுள்
கொள்கை உலகில் உள்ள மற்ற
மதங்களின் இறைக்
கொள்கைகளை விட
சற்று வேறுபட்டு நிற்கிறது. காரணம்
இஸ்லாம் ஓரிரைக்
கொள்கையை போதிக்கிறது மற்ற
மதங்கள் அனைத்தும் பல கடவுள்
கொள்கையை போதிக்கிறது!
Hameed Irshad
Saturday, July 26, 2014
இரண்டாம் கலீஃபா உமர் பின்கத்தாப் (ரலி) வாழ்க்கை — வரலாறு — பாகம் : 10
ஆணவக்காரன் அபூ ஜஹ்ல் :
——————————————————
நாம் முன்னரே கூறியது போல் இஸ்லாமியர்களின் உக்கிரமான தாக்குதலை தாக்குப்பிடிக்கத் திணறிய குறைஷிக் குஃப்பார்களின் படை செய்வதறியாமல் பின்னங்கால் பிடறியில் பட தெறித்து ஓட துவங்கியது
ஆனால் ஆனவமே தன்னிருப்புக்கு அடைக்கலம் தேடும் அபுஜஹல் இதனை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல், திமிருடன் தனது படையினரை உற்சாகப்படுத்திக் கொண்டும் போர்புரியும் படி வெறியூட்டிக் கொண்டும் இருந்தான்....
இரு சகோதரர்கள் :
————————————
இப்போது முஸ்லிம் படையனியைச் சார்ந்த அன்சாரிச் சகோதரர்களும் அஃப்ராவின் மக்களுமான இரு இளைஞர்கள் இல்லை இல்லைச் சிறுவர்கள் எனக்கூறுவதே சாலச்சிறந்தது.....
அதில் ஒருவர் முஆது (ரலி) மற்றவர் முஅவ்விது (ரலி) இருவரும் போரின் போது முறையே வலம் இடமாக அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களுக்கருகில் நின்று தீரத்துடன் போர் புரிகின்றனர்.
போரின் உக்கிரம் தகிக்கும் பாலையை விட வெப்பமாய் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் நேரம்.... இரத்த வெள்ளம் பத்ரின் வென்மணலை செஞ்சிகப்பாய் அடித்துக் கொண்டிருக்கும் சமயம்..,
தங்கள் அருகில் நின்று போர் புரியும்
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களை பெரிய தந்தையே என விளித்து எமக்கு தாங்கள் அபூ ஜஹ்லை யார் எனக் காட்டுங்களேன் எனக் கேட்க்கின்றனர்
அதற்கு அவர் ஏன்? என்று கேட்கிறார். அப்போது அவர்கள்
“எங்கள் உயிரினும் உயர்ந்தவரும் யாருக்கு எத்தீங்கும் எவராலும் ஏற்ப்பட அனுமதியோமோ அத்தகைய உத்தம உயர் திரு நபியை அவன் துன்புறுத்தியதாகவும் வசைபாடியதாகவும் நாங்கள் கேள்வி பட்டோம், ஆகையால் அல்லாஹ்வின் மீது சபதம் எடுத்துள்ளோம், அந்த ஒப்பற்ற ஓரிறையின் மீதானையாக ஒன்றுஅவனை கொல்லுவோம், அல்லது நாங்கள் மடிவோம்” என்று வீராவேசமாகக் கூறினார்கள்.
அப்போது தனது குதிரையில் உலாவிக்கொண்டும், படையினரை உற்சாகப்படுத்திக் கொண்டும் இருந்த அபுஜஹலை அவர் காண்பித்தார்.
அவ்வளவுதான் இரை தேடும் இராஜாளியாக., வேட்டைக்குச் செல்லும் வேங்கைகளாக அவன் மீது இந்த இரண்டு சிறுவர்களும் சீறிப் பாய்ந்தனர்.
இதனைப்பற்றி பின்வரும் ஹதீது இவ்வாறு விவரிக்கின்றது :
3988. அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அறிவித்தார். நான் பத்ருப் போரின்போது (படை) அணியில் நின்று கொண்டிருந்தேன். திரும்பிப் பார்த்தபோது என் வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் இளவயதுடைய இரண்டு இளைஞர்கள் (நின்று கொண்டு) இருந்தனர். அந்த இருவர் (அருகில்) இருப்பது குறித்து (இந்தச் சிறுவர்களுக்கு பதில் வேறு வீரர்கள் இருந்தால் நன்றாக இருக்குமே இவர்களால் போரின் போது என்ன உதவி எனக்கு கிடைத்து விடும் என நினைத்து) நான் அஞ்சினேன். அப்போது அந்த இருவரில் ஒருவர் தம் தோழரிடமிருந்து மறைவாக என்னிடம், “என் பெரிய தந்தையே! அபூ ஜஹ்லை எனக்குக் காட்டுங்கள்” என்று கூறினார். அப்போது நான், “என் சகோதரர் மகனே! அவனை என்ன செய்யப் போகிறாய்?“ என்று கேட்டேன். அதற்கு அவர், “அவனை நான் கண்டால் (ஒன்று,) அவனை நான் கொலை செய்வேன்; அல்லது அதற்காக(ப் போராடி) மடிவேன் என்று அல்லாஹ்விடம் சபதம் எடுத்துக் கொண்டுள்ளேன்” என்றார். அப்போது மற்றொரு வரும் தம் சகாவிடமிருந்து மறைவாக, முதலமாவரைப் போன்றே கூறினார். அவர்களைப் போன்ற இருவருக்கிடையே நான் இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. எனவே, அவ்விருவருக்கும், அபூ ஜஹ்லை சமிக்கை செய்து காட்டினேன். அந்த இருவரும் இராஜாளிப் பறவைகள் போன்று பாய்ந்து அவனைப் பலமாகத் தாக்கினர். அந்த இருவரும் “அஃப்ரா“வின் இரண்டு புதல்வர்கள் (முஆத், முஅவ்வித்) ஆவர்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 64. பாடம் : (நபிகளார் காலத்துப்)போர்கள்
(நூல்:புகாரி 3988)
இப்போது அபூ ஜஹ்லுக்கருகில் காற்றினும் வேகமாய் கடுகிச்சென்ற இந்த இருவருக்கு மத்தியில் யார் அவனை முதலில் கொல்வது என்ற போட்டியே நடந்தது.
அபு ஜஹ்லோ முழுமையான போர் அணிகலன்கள் தரித்தவனாக குதிரையின் மேல்.... இவர்கள் இருவருமோ இருக்கும் பொருட்களே போர்ச் சாதனங்களாக இறைவனின் உதவியே கேடயமாகக் கொண்டு தரையில் நின்றவர்களாக சண்டை தொடங்குகின்றது.
இப்போது வீரத்திற்க்கும் ஆணவத்திற்க்கும் பெயர் பெற்ற அபூ ஜஹ்ல் ஏளனப் பார்வையை அவர்கள் மீது வீசியவனாக பலமாக தாக்குதல் தொடுக்கின்றான் இரு சகோதரர்களும் அதனை தடுத்தவர்களாக போரில் முனைப்புடன் ஈடுபடுகின்றனர் எனினும் அபூ ஜஹ்லை அவன் அமர்ந்திருக்கும் உயர்ந்தக் குதிரையின் காரணம் அவர்களால் எட்ட இயலவில்லை.
இப்போது போர் உச்சத்தை தொட்டது இச்சமயம் சகோதரர்கள் பாய்ந்து குதிரையின் கால்களை வெட்டினர் அதன் மீது மலையென வீற்றிருந்த அபூ ஜஹ்ல் பொத்தென கீழே விழுந்து சரிந்தான்.
சட்டென முஅவ்விது(ரலி) அவர்கள், முதலில் அபுஜஹல் மீது பாய்ந்தார்கள், அவனது கரண்டை கால் வரை வெட்டினார்கள், அவனது கால்கள் பறந்து வீழ்ந்தன. இதனை பார்த்த அபுஜஹலின் மகன் இக்ரிமா முஅவ்வித்(ரலி) அவர்களின் புஜத்தில் வெட்டினான், இதனால் அவரது வலது கை வெட்டப்பட்டு தோளோடு தொங்கியது அப்போதும் முஅவ்வித்(ரலி) அவர்கள் அதனை தோளில் தூக்கிப் போட்டவர்களாக சளைக்காமல் இக்ரிமாவுடன் அல்லாஹூ அக்பர்., அல்லாஹூ அக்பர்., என உரக்க மொழிந்தவராக சமர் செய்தார்கள்.
ஒரு சமயம் வெட்டுண்ட அவரின் "கை" போர் புரிய இடையூராக இருந்த காரணத்தால் அதனை தனது கால்களுக்கடியில் வைத்து பிய்த்து தூர எறிந்தவர்களாக முன்னை விட வேகமாக தீரத்துடன் போர் புரிந்தார்கள்.
ஏறத்தாழ இதே சமயம் கீழே சாய்ந்த அபுஜஹலின் மீது பாய்ந்து, முஆது அவர்கள் அவனை வெட்டித்தள்ளினார்கள்.
அல்லாஹூ அக்பர்., அல்லாஹூ அக்பர்.,
அல்லாஹூ அக்பர்.,
இறுமாப்புடன் திரிந்த இறைவனின் எதிரி அபூஜஹல் இரு சிறுவர்களின் தீரத்தால் வீழ்த்தப்பட்டான்.
எனினும் கொல்லப்படும்போது கூட, தன் தலையை மற்றவரின் தலைகளை விட உயரமாக நெஞ்சு வரை வெட்ட யாசித்தவனாக ”நான் தான் கொல்லப்படுபவர்களில் மிகவும் உயர்ந்தவனாக தெரிய வேண்டும்” என்றான், இப்போது இப்னு மஸ்வூது(ரலி) அவர்கள் அவனது தலையை தனியாக எடுத்தார்கள்.
இந்த வேளையில், நபி(ஸல்) அவர்கள், “அபூஜஹல் என்ன ஆனான்?” என்று கேட்டார்கள்.
அபுஜஹலின் தலையோடு நபி(ஸல்) அவர்களிடம் வந்து, “இதோ நீங்கள் கேட்டவனுடைய தலை” என்றார்கள் அந்த இரு அன்சாரி வாலிபர்களும். அப்போது நபி(ஸல்) அவர்கள், “வணக்கத்து உரியவன் அல்லாஹ்வை தவிர வேறும் யாரும் இல்லை” என்று மூன்று முறை கூறிவிட்டு, “அல்லாஹ் மிகப்பெரியவன்! எல்லா புகழும் அல்லாஹ்விற்கே! அவன் தனது வாக்கை உண்மைப்படுத்தினான். தனது அடியாருக்கு உதவி செய்தான். எதிரி படைகள் அனைத்தையும் தோற்கடித்தான்”என்றார்கள். பின்பு,
.”உங்களில் யார் அவனை கொன்றது” என்று, நபி(ஸல்) அவர்கள் கேட்க, இருவரும் “நானே கொன்றேன்” என நெஞ்சை உயர்த்திக் கூறினார்கள்.
புன்முறுவல் பூத்த பூமான் நபி(ஸல்) அவர்கள் அவ்விருவரின் வாள்களை வாங்கி பார்த்தவர்களாக, “நீங்கள் இருவருமே அவனை கொன்றீர்கள்” என்று கூறி, அபுஜஹலின் உடமைகளை, இருவரில் ஒருவரான முஆத் அவர்களிடம் கொடுத்தார்கள். இரண்டாவது நபரான, முஅவ்விது இப்னு அஃப்ரா(ரலி) அவர்கள் இபோரில் வீரமரணம் அடைந்தார்கள்.
(நூல் : புகாரி)
பிறகு, அபுஜஹலின் உடலை தன்னிடம் காட்டும்படி நபி(ஸல்) அவர்கள் கூற, அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது(ரலி) அவர்கள் அண்ணலாரை அழைத்து சென்று காட்டினார்கள். அதனை கண்ட நபி(ஸல்) அவர்கள்,
“இவன் தான் இந்த சமுதாயத்தின் ஃபிர்அவ்ன்” என்றார்கள்.
இன்ஷா அல்லாஹ் ! தொடரும்...
ahmed buhari
Wednesday, July 23, 2014
அடித்துக் கொண்டிருப்பவன் ராணுவம் திருப்பி அடிப்பவன் தீவிரவாதி
மனிதாபிமான மகான்களே
உங்கள் மனிதத்தை
ஏன் மறந்தீர்கள்?
எங்கே மறைத்தீர்கள்?
எதற்காக எங்களிடம் பாராமுகம்?
முஸல்மானின் உயிருக்கு
உங்கள் மனிதாபிமான சந்தையில்
மதிப்பு இது தானா.?
எம் குருதியில் குளித்து
எம் உயிருடன் வேடிக்கை காண
அப்படியென்ன சுகம் உங்களுக்கு?
வரலாறு நெடுகிலும்
சபிக்கப்பட்ட சண்டாளர்களுக்கு
இரக்கம் காட்டியது குற்றம் தான்...
ஐரோப்பா அடித்து விரட்டியவர்களுக்கு
அடைக்கலம் அளித்ததும்
குற்றம் தான்...
மழலைகளை பொருக்கியெடுத்து
மண்ணீல் புதைத்து
நாங்கள் குமுறிச் சாக
மெளனங்களை மனதில் புதைத்து
நீங்கள் இருங்கள்!
எங்கள் பூமியின் காலநிலை
எப்போதும் போர்மேகம்
எங்கும் குண்டு மழை
இடியோசை மிஞ்சும்
உயிரின் கதறல்கள்
பாலை நிலத்திலும் பாயும்
சிவப்பு நதி!
உலக இஸ்லாமியர்களுக்கு
தினம் ஐவேளைத் தொழுகை
எங்களுக்கு ஆறு வேளை
ஜனாஸா தொழுகையும் சேர்த்து!
மிருக வதையென்று
வசனங்கள் முழங்கும்
போலி மனிதாபிமானிகளே
மனித இனமே அழிகிறதே
உங்கள் வாயை அடைத்த
கொழுக்கட்டைக்கு என்ன பெயர்?
மனிதாபிமானமா?
எண்ணெய் வயல்களை கொள்ளையிட
அண்ணன் நடத்திய போருக்கெல்லாம்
தீவிரவாதத்துகெதிரான போரென்று
பொங்கி எழுந்தீர்களே
இஸ்ரேலிய தீவிரவாதத்துக்கு எதிராக
உங்கள் பொங்கல், பொங்காமல்
போனது ஏனோ?
அடித்துக் கொண்டிருப்பவனும்
அடிமை படுத்துபவனும் ராணுவம்
திருப்பி அடிப்பவன் தீவிரவாதி
ஊடகங்களே உங்கள் தர்மம்
நிலைக்குமென்றா நினைக்கிறீர்கள்!
நொடிகள் தோறும்
மரணத்தை நேசித்து
விடுதலையை சுவாசிப்போம்
ஈரக் குலைகளை
டாங்கிகள் சிதைத்தாலும்
ஈமானை சிதைக்க
ஒரு காலும் உங்களால் முடியாது
பாவிகளே.!
உயிரை தந்தவனுக்காய்
உயிரை தருவதற்கு
அஞ்ச மாட்டோம்
எந்த நாய்களிடமும்
கெஞ்ச மாட்டோம்!
போலியாய் மனிதம் பேசி
உங்கள் இனவெறியை
இனம் காட்டிக் கொள்ள
இன்னும் நிறைய சந்தர்ப்பங்கள்
உங்களுக்கு உண்டு!
குறித்து வைத்துக் கொள்ளுங்கள்
எங்கள் விடுதலையை காணாமல்
இஸ்ரேலின் அழிவை காணாமல்
உலகம் அழிந்து விடாது!
Mohamed Sha
உங்கள் மனிதத்தை
ஏன் மறந்தீர்கள்?
எங்கே மறைத்தீர்கள்?
எதற்காக எங்களிடம் பாராமுகம்?
முஸல்மானின் உயிருக்கு
உங்கள் மனிதாபிமான சந்தையில்
மதிப்பு இது தானா.?
எம் குருதியில் குளித்து
எம் உயிருடன் வேடிக்கை காண
அப்படியென்ன சுகம் உங்களுக்கு?
வரலாறு நெடுகிலும்
சபிக்கப்பட்ட சண்டாளர்களுக்கு
இரக்கம் காட்டியது குற்றம் தான்...
ஐரோப்பா அடித்து விரட்டியவர்களுக்கு
அடைக்கலம் அளித்ததும்
குற்றம் தான்...
மழலைகளை பொருக்கியெடுத்து
மண்ணீல் புதைத்து
நாங்கள் குமுறிச் சாக
மெளனங்களை மனதில் புதைத்து
நீங்கள் இருங்கள்!
எங்கள் பூமியின் காலநிலை
எப்போதும் போர்மேகம்
எங்கும் குண்டு மழை
இடியோசை மிஞ்சும்
உயிரின் கதறல்கள்
பாலை நிலத்திலும் பாயும்
சிவப்பு நதி!
உலக இஸ்லாமியர்களுக்கு
தினம் ஐவேளைத் தொழுகை
எங்களுக்கு ஆறு வேளை
ஜனாஸா தொழுகையும் சேர்த்து!
மிருக வதையென்று
வசனங்கள் முழங்கும்
போலி மனிதாபிமானிகளே
மனித இனமே அழிகிறதே
உங்கள் வாயை அடைத்த
கொழுக்கட்டைக்கு என்ன பெயர்?
மனிதாபிமானமா?
எண்ணெய் வயல்களை கொள்ளையிட
அண்ணன் நடத்திய போருக்கெல்லாம்
தீவிரவாதத்துகெதிரான போரென்று
பொங்கி எழுந்தீர்களே
இஸ்ரேலிய தீவிரவாதத்துக்கு எதிராக
உங்கள் பொங்கல், பொங்காமல்
போனது ஏனோ?
அடித்துக் கொண்டிருப்பவனும்
அடிமை படுத்துபவனும் ராணுவம்
திருப்பி அடிப்பவன் தீவிரவாதி
ஊடகங்களே உங்கள் தர்மம்
நிலைக்குமென்றா நினைக்கிறீர்கள்!
நொடிகள் தோறும்
மரணத்தை நேசித்து
விடுதலையை சுவாசிப்போம்
ஈரக் குலைகளை
டாங்கிகள் சிதைத்தாலும்
ஈமானை சிதைக்க
ஒரு காலும் உங்களால் முடியாது
பாவிகளே.!
உயிரை தந்தவனுக்காய்
உயிரை தருவதற்கு
அஞ்ச மாட்டோம்
எந்த நாய்களிடமும்
கெஞ்ச மாட்டோம்!
போலியாய் மனிதம் பேசி
உங்கள் இனவெறியை
இனம் காட்டிக் கொள்ள
இன்னும் நிறைய சந்தர்ப்பங்கள்
உங்களுக்கு உண்டு!
குறித்து வைத்துக் கொள்ளுங்கள்
எங்கள் விடுதலையை காணாமல்
இஸ்ரேலின் அழிவை காணாமல்
உலகம் அழிந்து விடாது!
Mohamed Sha
மனித இனத்திற்கு மதிப்பில்லை
தமிழ்
நாட்டுப் பத்திரிகைகளின் தலையங்கம் உண்மைக்கு புறம்பாகவும்
பாதிக்கப்பட்டவர்களின் வேதனைக்கு சிறிதளவு கூட ஆறுதல் இல்லாமால்
எழுதப்பட்டு வருகின்றது , இது மிகவும் வேதனை தரும் செய்தியாகும்.
உண்மை என்ன என்பது உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருந்தும் அதற்கு மாற்றமாக எழுதுவதற்கு யாருடைய தூண்டுதல் காரணம் அல்லது வேறு ஏதாவது உள்நோக்கம் உஙகளிடம் உள்ளனவா ?
இதை மீண்டும் மீண்டும் நாங்கள் உங்களுக்கு சுட்டிக்காட்டியே வருகின்றோம் இருந்தாலும் நீங்கள் இந்த போக்கை விட்டபாடில்லை .
பலஸ்தீனில் நடந்தது என்ன ? இப்பொழுது நடப்பது என்ன ? என்று உலக மக்களுக்கு நன்றாகவே தெரியும் , நீங்கள் முழு பூசணிக்காயை சோத்தில் மறைப்பது போன்று முயற்சி செய்ய வேண்டாம் அது உங்கள் பத்திரிகைக்கும் பத்திரிகை தர்மத்திற்கும் இழிவுதான் .
மாறாக உங்கள் தலையங்கத்தை இவ்வாறாக மாறி பதிவிடுங்கள் அதுவே நீங்கள் இதுநாள்வரை செய்த தவறுக்கு பரிகாரமாக அமையும்.
இன்றைய தலையங்கம் ----- தினமலர் , தந்தி , தினகரன் 23-7-14
மனித இனத்திற்கு மதிப்பில்லை ஆம் மதிப்பில்லை ...
பலஸ்தீனம் ஒரு அழகான பூமி , அங்கு வாழும் மக்கள் அப்பாவிகள் , இறக்க குணம் உடையவர்கள் , அடுத்தவர்களுக்கு உதவி செய்து பழக்கப்பட்டவர்கள் , இதை சாதகமாக பயன்படுத்தி 1948ம் ஆண்டு யூத சதிகார வர்க்கத்தை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உதவிகொண்டு அங்கே குடியமர்த்ப்பட்டது
சிறிதளவாக இருந்த யூத வம்சம் அவர்களின் தந்திரத்தினால் பாலஸ்தீனர்களின் நிலங்களை விலைக்கு வாங்கி அங்கே நிரந்தரமாக இருப்பதற்கும் , பாலஸ்தீனர்களை இந்த பூமியை விட்டு விரட்ட முயற்சி செய்தார்கள் .
கொலை செய்வதிலும் பழி வாங்குவதிலும் மிகவும் கை தேர்ந்த யூத பயங்கர வாதிகள் அப்பொழுதிருந்தே தனக்கு கட்டுப்படாத தலைவர்களை கொலை செய்து வந்தனர்.( இவ்வுலகிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இறை தூதர்களை இவர்களே கொலை செய்தார்கள் என்பதை திருக்குரானில் குறிப்பிட்டுள்ளது மிகவும் குறிப்படத்தக்கது .) இதில் அமெரிக்காவின் அதிபராகட்டும் அல்லது இந்தியாவின் மகாத்மா காந்தியாகட்டும் எல்லோருமே இவர்களின் வலையில் சிக்கியவர்கள்தான் .
இந்தியாவின் அமைதியை குலைப்பதற்கே இவர்கள் மொசாத் என்ற உளவுத்துறையின் தொடர்பாக RSS இயக்கத்தை உருவாக்கி அதன் மூலமாக இந்நாட்டில் நடக்கும் அனைத்து பயங்கர வாத செயல்களுக்கும் பின்னணியாக திகழ்தனர்.
இவர்கள் தான் செய்த கொடூர செயல்களுக்கு அப்பாவி முஸ்லிம் களின் மேல் பழிபோட்டு மக்களை நம்பவைத்தனர் . மொசாத்தின் ஒரு பிரிவினர் உலகத்தில் வதந்திகளை பரப்புவதில் வல்லுனர்களாக திகழ்தனர் . அவர்கள் மூலமாக முஸ்லிம்களை தீவிரவாதி என்ற பொய் வதந்தி பரப்பி பல பினாமி பெயர்களில் இயங்கி வந்தனர் . சங்பரிவார் இயக்கங்களில் முக்கிய தலைவர்களும் RSS போன்ற தீவிரவாத அமைப்புகளும் இவர்களின் கட்டுக்கோப்பில் இயங்கியது . அது மட்டுமல்லாமல் உலக அரசியலில் இவர்களின் ஆதிக்கம் அதிகமாகவே இருந்தது இவர்கள் நியமிக்கும் தலைவர்களே நீடிக்கவேண்டும் அதற்காக எது வேண்டுமானாலும் செய்து முடிக்க இவர்களின் குழு இவ்வுலகம் முழுவதுமாக பரவி பல கொடூர சம்பவங்களையும் இவ்வுலகில் பல மாற்றங்களையும் இயற்க்கைக்கு மாற்றமான முறையில் மிகவும் கட்சிதமாக ரகசியமாக செய்து முடிக்கின்றனர் .
இதெற்கெல்லாம் பொருளாதாரம் நிறையவே இவர்களுக்கு தேவைப்பட்டது எனவே அதையும் சிரமம் இல்லாமல் பெற்றிட பல வகைகளில் திட்டம் தீட்டினர் . யூத வம்சத்தின் குலத்தொழிலாகிய வட்டித்தொழிலை இவ்வுலகம் முழுவதும் பரவச்செய்து அதன் மூலமாக கெட்ட பயன் அடைந்தனர் . இன்று அதுவே பலமடங்காக பெருகி உலக வர்த்தகமாக மாறி விட்டது. உலகமயமாக்கல் என்ற போர்வையில் இன்று இவர்கள் உலக வர்த்தகத்தை இவர்களின் கைக்குள் வைத்துள்ளனர் . பணக்காரன் கொள்ளை அடித்து மென்மேலும் பணக்காரன் ஆகிக்கொண்டே செல்கின்றான் ஏழை எப்பொழுதும் ஏழையாகவே இருந்து விடுகின்றான்.
யூத சித்தாந்தம் அனைத்துமே இஸ்லாத்திற்கு நேர் எதிர்மறையாகத்தான் அமைந்திருக்கும் . விபச்சாரம் , வட்டி , கொலை , தீவிரவாதம் , விரோதம் , ஏமாற்றுதல், பழிவாங்குதல் , உண்மையை மாற்றுதல் , பொய்யை உண்மையாக்குதல் , அடுத்தவர்களின் உடமைகளை அபகரித்தல் , வழி கெடுத்தல் ,தவறான கல்வியை புகுத்துதல் போன்றவைகள் இவர்களுக்கு ஒரு கலையாகாவே மாறிவிட்டது.
ஆடை கலாச்சாரத்தை தலை கீழாக மாற்றி விட்டார்கள் விபச்சாரம் பெருகிவிட்டது . ஆண்களானாலும் பெண்களானாலும் வெட்கம் இல்லாமல் இன்று துணிச்சலாக விபச்சாரம் செய்யும் அளவிற்கு நம்முடைய பண்பாடுகளும் பாரம்பரியங்களும் மாற்றப்பட்டுவிட்டன.எப்படியெல்லாம் வாழ்த்து விடலாம் என்றும் இவ்வுலகே நிரந்தரம் என்றும் இவர்கள் கங்கணம் கட்டி மற்றவர்களையும் இவர்களின் வலைக்கு விழ வைக்கின்றனர்.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது நம் முன்னோர்களின் குரல் , அதை அப்படியே மாற்றிவிட்டார்கள் . உயர்ந்தவன் தாழ்தவன் என்றும் மக்களை பிரித்து அதன் மூலமாக இவ்வுலகில் சண்டையும் சச்சரவுகளையும் அதிகமாக்கி சந்தோசம் அடைகின்றனர். நாங்கள் தான் மேல் ஆதிக்க மக்கள் என்றும் பழம்குடி பெரு மக்களை தங்களுக்கு சாதகமாக ஆதிக்கம் செலுத்துகிறார்கள் அதற்கு தகுந்தாற்போல் ஒன்றும் அறியாத மக்கள் இவர்களுக்கு பின்னால் செல்கின்றனர். அனைவரையும் ஆட்டுமந்தைகளாக்கி இவர்கள் குளிர் காய்கின்றனர். இந்த சித்தாந்தம் தான் இப்பொழுது இந்தியாவில் நடந்தேறி வருகின்றது.
இவர்களின் பேராசை காரணமாகத்தான் பெட்ரோல் வளம் பொருந்திய நாடுகளில் இவர்களின் ஆதிக்கத்தை செலுத்தி அதை கையகப் படுத்த நினைக்கின்றனர். உலகத்தின் அனைத்து வளங்களையும் இவர்கள் சுரண்டி விட்டனர். மீதம் இருப்பது இது ஒன்றுதான் அது நம் கைக்கு கிடைத்து விட்டால் நம்மளை மீறுவது யாரும் இல்லை என்ற ஆவணம் தான்.
உலகம் முழுவதுமாக விலை வாசி தலைக்கு மேல் சென்று விட்டதன் காரன் இப்பொழுது என்ன என்று உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும். ஒரு பாமரன் நிம்மதியாக இவ்வுலகில் வாழ வழியில்லை, தொட்டதெல்லாம் கேட்டு விட்டது எதன் மேலும் நம்பிக்கை இல்லை, நாணயம் இல்லை, சீக்கிரமாக பணக்காரனாக வேண்டும் என்ற எண்ணம் எல்லோரிடமும் ஏற்பட வழி வகுத்துவிட்டனர் , இவ்வுலக பொருளின் மேல் அதிக ஆசை கொண்டவர்களாக இச்சமுதாயம் மாற்றப்பட்டுவிட்டது .
தீவிர வாதாத்தையும் அடக்கு முறையையும் இவர்கள் கையில் எடுத்து இச்சமுதாய இளைய தலைமுறையினரை வழி கெடுக்க முயல்கின்றனர். பொருளாதார தடை புடலங்காய் தடை என்று மற்ற நாடுகளை மிரட்டி தன் வசத்திற்கு இசைத்து எல்லோரையும் ஏமாற்றுகின்றனர். ஏன் என்றால் இவர்கள் ஒரு நாட்டில் புகுந்து அங்கு வசிக்கும் பழங்குடி வாசிகளை அடியோடு அளித்து விடுகின்றனர் , அமெரிக்காவில் செவ்விந்தியர் களையும் , ஆப்பிரிக்காவில் வாழ்த்த மக்களையும் கோடிக்கணக்கில் அளித்தது வரலாறு உண்மை.
மற்ற நாடுகளை சுரண்டுனதைப்போல் இந்தியா பக்கமும் இவர்கள் தலை சாய்த்துள்ளர்கள் என்பது தெளிவாகவே விளங்குகின்றது. சங்பரிவார் இயக்கங்கள் இவர்களுக்கு தகுந்தாற்போல் தலை ஆட்டுகின்றனர் . எதோ அழிவின் பாதையை நோக்கி சென்று கொண்ருகின்றது இதற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் .
அதற்கு ஒரே வழி இஸ்லாம் தான் .
இஸ்லாம் இவர்களின் சித்தாந்திற்கு நேர் எதிரானது என்பதை முன்பே அறிந்தோம் அவ்வழியில் இஸ்லாத்தை பரப்பவேண்டும் . மனிதன் சுபுட்சமாக வாழ்வதற்கு இஸ்லாம் காட்டிய வழியில் பயணிக்க வேண்டும் அதுவே இதற்கு சிறந்த மருந்து. இப்பூமி பூ போன்று மலர்ந்திட வேண்டும் அதற்கு இக்கட்டுரை முதல் புள்ளி வைத்து முடிக்கின்றது.
உண்மை என்ன என்பது உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருந்தும் அதற்கு மாற்றமாக எழுதுவதற்கு யாருடைய தூண்டுதல் காரணம் அல்லது வேறு ஏதாவது உள்நோக்கம் உஙகளிடம் உள்ளனவா ?
இதை மீண்டும் மீண்டும் நாங்கள் உங்களுக்கு சுட்டிக்காட்டியே வருகின்றோம் இருந்தாலும் நீங்கள் இந்த போக்கை விட்டபாடில்லை .
பலஸ்தீனில் நடந்தது என்ன ? இப்பொழுது நடப்பது என்ன ? என்று உலக மக்களுக்கு நன்றாகவே தெரியும் , நீங்கள் முழு பூசணிக்காயை சோத்தில் மறைப்பது போன்று முயற்சி செய்ய வேண்டாம் அது உங்கள் பத்திரிகைக்கும் பத்திரிகை தர்மத்திற்கும் இழிவுதான் .
மாறாக உங்கள் தலையங்கத்தை இவ்வாறாக மாறி பதிவிடுங்கள் அதுவே நீங்கள் இதுநாள்வரை செய்த தவறுக்கு பரிகாரமாக அமையும்.
இன்றைய தலையங்கம் ----- தினமலர் , தந்தி , தினகரன் 23-7-14
மனித இனத்திற்கு மதிப்பில்லை ஆம் மதிப்பில்லை ...
பலஸ்தீனம் ஒரு அழகான பூமி , அங்கு வாழும் மக்கள் அப்பாவிகள் , இறக்க குணம் உடையவர்கள் , அடுத்தவர்களுக்கு உதவி செய்து பழக்கப்பட்டவர்கள் , இதை சாதகமாக பயன்படுத்தி 1948ம் ஆண்டு யூத சதிகார வர்க்கத்தை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உதவிகொண்டு அங்கே குடியமர்த்ப்பட்டது
சிறிதளவாக இருந்த யூத வம்சம் அவர்களின் தந்திரத்தினால் பாலஸ்தீனர்களின் நிலங்களை விலைக்கு வாங்கி அங்கே நிரந்தரமாக இருப்பதற்கும் , பாலஸ்தீனர்களை இந்த பூமியை விட்டு விரட்ட முயற்சி செய்தார்கள் .
கொலை செய்வதிலும் பழி வாங்குவதிலும் மிகவும் கை தேர்ந்த யூத பயங்கர வாதிகள் அப்பொழுதிருந்தே தனக்கு கட்டுப்படாத தலைவர்களை கொலை செய்து வந்தனர்.( இவ்வுலகிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இறை தூதர்களை இவர்களே கொலை செய்தார்கள் என்பதை திருக்குரானில் குறிப்பிட்டுள்ளது மிகவும் குறிப்படத்தக்கது .) இதில் அமெரிக்காவின் அதிபராகட்டும் அல்லது இந்தியாவின் மகாத்மா காந்தியாகட்டும் எல்லோருமே இவர்களின் வலையில் சிக்கியவர்கள்தான் .
இந்தியாவின் அமைதியை குலைப்பதற்கே இவர்கள் மொசாத் என்ற உளவுத்துறையின் தொடர்பாக RSS இயக்கத்தை உருவாக்கி அதன் மூலமாக இந்நாட்டில் நடக்கும் அனைத்து பயங்கர வாத செயல்களுக்கும் பின்னணியாக திகழ்தனர்.
இவர்கள் தான் செய்த கொடூர செயல்களுக்கு அப்பாவி முஸ்லிம் களின் மேல் பழிபோட்டு மக்களை நம்பவைத்தனர் . மொசாத்தின் ஒரு பிரிவினர் உலகத்தில் வதந்திகளை பரப்புவதில் வல்லுனர்களாக திகழ்தனர் . அவர்கள் மூலமாக முஸ்லிம்களை தீவிரவாதி என்ற பொய் வதந்தி பரப்பி பல பினாமி பெயர்களில் இயங்கி வந்தனர் . சங்பரிவார் இயக்கங்களில் முக்கிய தலைவர்களும் RSS போன்ற தீவிரவாத அமைப்புகளும் இவர்களின் கட்டுக்கோப்பில் இயங்கியது . அது மட்டுமல்லாமல் உலக அரசியலில் இவர்களின் ஆதிக்கம் அதிகமாகவே இருந்தது இவர்கள் நியமிக்கும் தலைவர்களே நீடிக்கவேண்டும் அதற்காக எது வேண்டுமானாலும் செய்து முடிக்க இவர்களின் குழு இவ்வுலகம் முழுவதுமாக பரவி பல கொடூர சம்பவங்களையும் இவ்வுலகில் பல மாற்றங்களையும் இயற்க்கைக்கு மாற்றமான முறையில் மிகவும் கட்சிதமாக ரகசியமாக செய்து முடிக்கின்றனர் .
இதெற்கெல்லாம் பொருளாதாரம் நிறையவே இவர்களுக்கு தேவைப்பட்டது எனவே அதையும் சிரமம் இல்லாமல் பெற்றிட பல வகைகளில் திட்டம் தீட்டினர் . யூத வம்சத்தின் குலத்தொழிலாகிய வட்டித்தொழிலை இவ்வுலகம் முழுவதும் பரவச்செய்து அதன் மூலமாக கெட்ட பயன் அடைந்தனர் . இன்று அதுவே பலமடங்காக பெருகி உலக வர்த்தகமாக மாறி விட்டது. உலகமயமாக்கல் என்ற போர்வையில் இன்று இவர்கள் உலக வர்த்தகத்தை இவர்களின் கைக்குள் வைத்துள்ளனர் . பணக்காரன் கொள்ளை அடித்து மென்மேலும் பணக்காரன் ஆகிக்கொண்டே செல்கின்றான் ஏழை எப்பொழுதும் ஏழையாகவே இருந்து விடுகின்றான்.
யூத சித்தாந்தம் அனைத்துமே இஸ்லாத்திற்கு நேர் எதிர்மறையாகத்தான் அமைந்திருக்கும் . விபச்சாரம் , வட்டி , கொலை , தீவிரவாதம் , விரோதம் , ஏமாற்றுதல், பழிவாங்குதல் , உண்மையை மாற்றுதல் , பொய்யை உண்மையாக்குதல் , அடுத்தவர்களின் உடமைகளை அபகரித்தல் , வழி கெடுத்தல் ,தவறான கல்வியை புகுத்துதல் போன்றவைகள் இவர்களுக்கு ஒரு கலையாகாவே மாறிவிட்டது.
ஆடை கலாச்சாரத்தை தலை கீழாக மாற்றி விட்டார்கள் விபச்சாரம் பெருகிவிட்டது . ஆண்களானாலும் பெண்களானாலும் வெட்கம் இல்லாமல் இன்று துணிச்சலாக விபச்சாரம் செய்யும் அளவிற்கு நம்முடைய பண்பாடுகளும் பாரம்பரியங்களும் மாற்றப்பட்டுவிட்டன.எப்படியெல்லாம் வாழ்த்து விடலாம் என்றும் இவ்வுலகே நிரந்தரம் என்றும் இவர்கள் கங்கணம் கட்டி மற்றவர்களையும் இவர்களின் வலைக்கு விழ வைக்கின்றனர்.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது நம் முன்னோர்களின் குரல் , அதை அப்படியே மாற்றிவிட்டார்கள் . உயர்ந்தவன் தாழ்தவன் என்றும் மக்களை பிரித்து அதன் மூலமாக இவ்வுலகில் சண்டையும் சச்சரவுகளையும் அதிகமாக்கி சந்தோசம் அடைகின்றனர். நாங்கள் தான் மேல் ஆதிக்க மக்கள் என்றும் பழம்குடி பெரு மக்களை தங்களுக்கு சாதகமாக ஆதிக்கம் செலுத்துகிறார்கள் அதற்கு தகுந்தாற்போல் ஒன்றும் அறியாத மக்கள் இவர்களுக்கு பின்னால் செல்கின்றனர். அனைவரையும் ஆட்டுமந்தைகளாக்கி இவர்கள் குளிர் காய்கின்றனர். இந்த சித்தாந்தம் தான் இப்பொழுது இந்தியாவில் நடந்தேறி வருகின்றது.
இவர்களின் பேராசை காரணமாகத்தான் பெட்ரோல் வளம் பொருந்திய நாடுகளில் இவர்களின் ஆதிக்கத்தை செலுத்தி அதை கையகப் படுத்த நினைக்கின்றனர். உலகத்தின் அனைத்து வளங்களையும் இவர்கள் சுரண்டி விட்டனர். மீதம் இருப்பது இது ஒன்றுதான் அது நம் கைக்கு கிடைத்து விட்டால் நம்மளை மீறுவது யாரும் இல்லை என்ற ஆவணம் தான்.
உலகம் முழுவதுமாக விலை வாசி தலைக்கு மேல் சென்று விட்டதன் காரன் இப்பொழுது என்ன என்று உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும். ஒரு பாமரன் நிம்மதியாக இவ்வுலகில் வாழ வழியில்லை, தொட்டதெல்லாம் கேட்டு விட்டது எதன் மேலும் நம்பிக்கை இல்லை, நாணயம் இல்லை, சீக்கிரமாக பணக்காரனாக வேண்டும் என்ற எண்ணம் எல்லோரிடமும் ஏற்பட வழி வகுத்துவிட்டனர் , இவ்வுலக பொருளின் மேல் அதிக ஆசை கொண்டவர்களாக இச்சமுதாயம் மாற்றப்பட்டுவிட்டது .
தீவிர வாதாத்தையும் அடக்கு முறையையும் இவர்கள் கையில் எடுத்து இச்சமுதாய இளைய தலைமுறையினரை வழி கெடுக்க முயல்கின்றனர். பொருளாதார தடை புடலங்காய் தடை என்று மற்ற நாடுகளை மிரட்டி தன் வசத்திற்கு இசைத்து எல்லோரையும் ஏமாற்றுகின்றனர். ஏன் என்றால் இவர்கள் ஒரு நாட்டில் புகுந்து அங்கு வசிக்கும் பழங்குடி வாசிகளை அடியோடு அளித்து விடுகின்றனர் , அமெரிக்காவில் செவ்விந்தியர் களையும் , ஆப்பிரிக்காவில் வாழ்த்த மக்களையும் கோடிக்கணக்கில் அளித்தது வரலாறு உண்மை.
மற்ற நாடுகளை சுரண்டுனதைப்போல் இந்தியா பக்கமும் இவர்கள் தலை சாய்த்துள்ளர்கள் என்பது தெளிவாகவே விளங்குகின்றது. சங்பரிவார் இயக்கங்கள் இவர்களுக்கு தகுந்தாற்போல் தலை ஆட்டுகின்றனர் . எதோ அழிவின் பாதையை நோக்கி சென்று கொண்ருகின்றது இதற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் .
அதற்கு ஒரே வழி இஸ்லாம் தான் .
இஸ்லாம் இவர்களின் சித்தாந்திற்கு நேர் எதிரானது என்பதை முன்பே அறிந்தோம் அவ்வழியில் இஸ்லாத்தை பரப்பவேண்டும் . மனிதன் சுபுட்சமாக வாழ்வதற்கு இஸ்லாம் காட்டிய வழியில் பயணிக்க வேண்டும் அதுவே இதற்கு சிறந்த மருந்து. இப்பூமி பூ போன்று மலர்ந்திட வேண்டும் அதற்கு இக்கட்டுரை முதல் புள்ளி வைத்து முடிக்கின்றது.
Sadiq Cikkander
திப்பு சுல்தான்
திப்பு சுல்தான் புலி என உண்மையாகவே குறிக்க
வேண்டிய வீரர் மற்றும் தலை சிறந்த
நிர்வாகி இவர் .எளிய
வீரரராக ,வாழ்க்கையை தொடங்கி மைசூரின்
மன்னர் ஆனார் ஹைதர் அலி .
ஆங்கிலேயருக்கு அடிபணிய
மறுத்து போராடிய அவரின் மகன் தான்
திப்பு சுல்தான் .
திப்பு கி.பி 1767ல் தமது 17 ம் வயதில் ஜோசப்
ஸ்மித் தலைமையில் போரிட்ட
ஆங்கிலப்படையை எதிர்த்து வாணியம்பாடியில்
தமது முதல் வெற்றிக்கனியைப் பறித்தார்.
கி.பி.1767முதல் கி.பி.1769
வரை தமிழ்நாட்டில் பரவலாக பல இடங்களில்
ஆங்கிலப் படைக்கும்மைசூர் படைக்கும் நடந்த
போர்களில் எல்லாவற்றிலும்
வெற்றியே பெற்றார் திப்பு
. இரண்டாம் மைசூர் போரில்
ஆங்கிலேயரை தோற்கடித்து போடப்பட்ட
ஒரு இந்திய மன்னர் சொல்கிறபடி ஒப்பந்தம்
போடுகிற அற்புதம் திப்புவின் வீரத்தால்
வாய்த்தது. ஹைதர் போர்
நடந்து கொண்டிருக்கும் பொழுதே மரணம்
அடைந்து விட மன்னர் ஆனார் திப்பு .
அவர்
ஆட்சியில் இருந்த இருபது வருடத்தில் 18
வருடங்கள் போர்களத்திலேயே கழித்தார்
‘யுத்தத்தைப் போர்க்களத்தோடு முடித்துக்
கொள்ளுங்கள். அப்பாவி மக்கள்
மீது ஒருபோதும் வன்முறை நடத்தாதீர்கள்.
பெண்களைக் கௌரவமாக நடத்துங்கள். பிடிபட்ட
கைதிகளின் மத நம்பிக்கைக்கு மதிப்புக்
கொடுங்கள். குழந்தைகளுக்கும்
முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்’
என்று, தன்
ராணுவத்துக்கு எழுத்துப்பூர்வமாக
உத்தரவு பிறப்பித்தவர் திப்பு சுல்தான். .
உலகத்தரத்திலான
ராணுவத்தை உருவாக்கி
இருந்தார் ; சொந்த
தேதிமுறையை பின்பற்றினார், தனித்த
எடை,அளவுகள்
ஆகியவற்றை புழக்கத்துக்கு கொண்டு வந்தார்.
இன்னமும் குறிப்பாக அதுவரை இந்தியாவில்
பெரிய ராஜ்யங்களை அவர் காலத்தில் ஆண்ட
மன்னர்கள் முகாலயர்களின் சார்பாக ஆள்கிறோம்
என்று சொல்லியபடியே ஆண்ட
பொழுது தனித்து நின்று தன் பெயரில்
நாணயங்களை வெளியிட்டார்.
நாசாவின்
கென்னெடி விண்வெளி மையத்தின்
நுழைவாயில் ஒரு ஓவியம்
கொண்டிருக்கிறது -அதில்
திப்பு ஏவுகணையை பயன்படுத்தி போரிடுவது சித்தரிக்கப்பட்டுள்ளது
போர்களத்தில் ஏவுகணையை முதன்முதலில்
உலகிலேயே பயன்படுத்தியவர் இவர்தான்.
அது இரண்டு கிலோமீட்டர் தூரம்
வரை துல்லியமாக சென்று தாக்கும் ஆற்றல்
பெற்றதாக இருந்தது .அந்த ஆவணங்கள் இன்றும்
லண்டனில் பத்திரமாக உள்ளன ;
அந்த
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கான்கிரீவ்
ராக்கெட்களை ஆங்கிலேயர்கள்
உருவாக்கினார்கள்.
மத நல்லிணக்கத்துக்கு அற்புதமான
எடுத்துகாட்டு இவர்-
நூற்றி ஐம்பத்தாறு கோயில்களுக்கு மானியம்
வழங்கப்பட்டு வந்தது .
எந்த அளவுக்கு அவரின்
ஆட்சியில் மத நல்லிணக்கம்
நிலவியது என்பதற்கு இந்த
தகவலே போதும் .கோயில்களுக்கு செலவிடப்பட்ட
2,33,959 ரூபாயில் இந்துக் கோயில்களுக்கும்
மடங்களுக்கும் மட்டும் 2,13,959
அளிக்கப்பட்டது இவர்
ஆட்சியில்,சிருங்கேரி மடத்தலைவருடன்
நெருங்கிய உறவு பாராட்டினார் .
மூன்றாம்
மைசூர் போரில் பரசுராம் பாவ் எனும்
மராத்தியர் தலைமையிலான படைகள்
நாசப்படுத்திய
சிருங்கேரி ஆலயத்தை சீரமைத்துக்கொடுத்தார்.
அவர் காலத்தில் சந்தன
விற்பனை தேசியமயமானது.
பட்டுப்புழு உற்பத்தியை தன்
ஆட்சிப்பகுதியில் அறிமுகப்படுத்தினார்.
கிழக்கிந்திய கம்பெனிக்கு போட்டியாக
இன்னொரு நிறுவனத்தை உருவாக்கவும்
முனைந்தார் கப்பல் கட்டும்
தொழில்நுட்பம்,முகலாயர்களின் ஆட்சியில்
இருந்து மாறுபட்ட நிர்வாகம்,இடைத்தரகர்கள்
இல்லாத நிலவரி விதிப்பு என இவரின்
ஆட்சியின் நிர்வாகப்பாடங்கள் ஏராளம். அந்த
நிலவரி விதிப்பால் ஒடுக்கப்பட்ட மக்கள் பலபேர்
நிலங்களை பெற்றார்கள் ; தமிழ்நாட்டில்
இருந்து ஆங்கிலேயர் ஆளுகையில் இருந்த
மக்கள் இந்த முறைகளால்
அங்கே இடம்பெயர்வதும் நடந்தது
.
நான்கு மைல்களுக்கு ஒரு பள்ளிக்கூடம் என்ற
திட்டத்தை செயல்படுத்தினார் அவர் .
ஆடம்பரத்தை மக்கள் தவிர்க்க வேண்டும்
என்றெண்ணி திருமணத்துக்கு ஒரு சதவிகிதம்
மட்டுமே வருமானத்தில் செலவு செய்ய
வேண்டும் என்று உத்தரவிட்டார்.
குடகு பகுதியில் ஒரே பெண்ணைப் பல
ஆண்கள் மணந்துகொள்ளும் பழக்கத்தைத்
தடுத்து சட்டம் இயற்றியுள்ளார்.
கோயில்களில் இருந்த
தேவதாசி முறையையும் ஒழிக்கச் சட்டம்
போட்டதுடன், மதுவிலக்கை அமல்படுத்தி,
அதைத் தீவிரமாகக் கண்காணித்தார்.
ஆங்கிலேயரோ அதே காலத்தில்
வங்கத்திலும்,பீகாரிலும்
கஞ்சாவை உற்பத்தி செய்து சீனாவை நாசமாக்கும்
வகையில்
அதை ஏற்றுமதி செய்து கொண்டிருந்தனர்.
திப்பு அதே சமயம்
ஆங்கிலேயருக்கு யாரேனும்
உதவுகிறார்கள் என்று தெரிந்தால்
தயவு தாட்சண்யம் இல்லாமல் தண்டிக்கவும்
யோசிக்கவில்லை.
இவர் உருவாக்கிய
பல்வேறு சத்தமெழுப்பும்
இயந்திரப்புலி ஒன்று இன்னமும்
இங்கிலாந்து ம்யூசியத்தில்
பழுதடைந்து எவ்வளவோ முயற்சிக்குபின்
சரி செய்ய முடியாமல் இருக்கிறது
ஆங்கிலேயரிடம் மூன்றாம் மைசூர் போரில்
தோற்று அவரின் மகன்களை போருக்கான
பிணையாக கொண்டு சென்றார்கள்
ஆங்கிலேயர்கள்; ஆங்கில கலாசாரத்தில் அவரின்
பிள்ளைகளை வளர்த்து இவரைக்
காயப்படுத்தினார்கள் .
நான்காம் மைசூர் போரில் அவரின்
அமைச்சர்கள் மீர் சதக் மற்றும்
பூர்ணய்யா விலை போய் கோட்டையின்
கதவுகள் திறக்கப்பட்டன. ஹைதராபாத்
நிஜாமின் கடல் போன்ற
படையோடு ஆங்கிலேயர் சேர்ந்த ஐம்பதாயிரம்
பேர் படையை முப்பதாயிரம் பேர் கொண்ட
படையோடு எதிர்கொண்டு மரணம் அடைந்தார்.
இவர்.
“ஆடுகளைப் போல 200 ஆண்டுகள்
பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள்
வீரம் காட்டி மடியலாம்” என்று தான்
சொன்னபடியே தப்பித்து ஓடாமல் போரில் தீரம்
காட்டி இறந்தார் அவர். போரில் எண்ணற்ற
இழப்புகள்,சூறையாடல்கள் எல்லாம் நிகழ்ந்த
அந்த கணத்தில் ஒரு ஒப்பற்ற தலைவன்
இறந்து போனதற்காக மைசூர் மக்கள்
கண்ணீர்விட்டு அழுதார்கள்
என்று வரலாற்று ஆசிரியர்கள்
பதிவு செய்கிறார்கள். வீர
வரலாறு ஒன்று முடிவுக்கு வந்தது,
தொடரும்,,, .
mohamed sha
வேண்டிய வீரர் மற்றும் தலை சிறந்த
நிர்வாகி இவர் .எளிய
வீரரராக ,வாழ்க்கையை தொடங்கி மைசூரின்
மன்னர் ஆனார் ஹைதர் அலி .
ஆங்கிலேயருக்கு அடிபணிய
மறுத்து போராடிய அவரின் மகன் தான்
திப்பு சுல்தான் .
திப்பு கி.பி 1767ல் தமது 17 ம் வயதில் ஜோசப்
ஸ்மித் தலைமையில் போரிட்ட
ஆங்கிலப்படையை எதிர்த்து வாணியம்பாடியில்
தமது முதல் வெற்றிக்கனியைப் பறித்தார்.
கி.பி.1767முதல் கி.பி.1769
வரை தமிழ்நாட்டில் பரவலாக பல இடங்களில்
ஆங்கிலப் படைக்கும்மைசூர் படைக்கும் நடந்த
போர்களில் எல்லாவற்றிலும்
வெற்றியே பெற்றார் திப்பு
. இரண்டாம் மைசூர் போரில்
ஆங்கிலேயரை தோற்கடித்து போடப்பட்ட
ஒரு இந்திய மன்னர் சொல்கிறபடி ஒப்பந்தம்
போடுகிற அற்புதம் திப்புவின் வீரத்தால்
வாய்த்தது. ஹைதர் போர்
நடந்து கொண்டிருக்கும் பொழுதே மரணம்
அடைந்து விட மன்னர் ஆனார் திப்பு .
அவர்
ஆட்சியில் இருந்த இருபது வருடத்தில் 18
வருடங்கள் போர்களத்திலேயே கழித்தார்
‘யுத்தத்தைப் போர்க்களத்தோடு முடித்துக்
கொள்ளுங்கள். அப்பாவி மக்கள்
மீது ஒருபோதும் வன்முறை நடத்தாதீர்கள்.
பெண்களைக் கௌரவமாக நடத்துங்கள். பிடிபட்ட
கைதிகளின் மத நம்பிக்கைக்கு மதிப்புக்
கொடுங்கள். குழந்தைகளுக்கும்
முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்’
என்று, தன்
ராணுவத்துக்கு எழுத்துப்பூர்வமாக
உத்தரவு பிறப்பித்தவர் திப்பு சுல்தான். .
உலகத்தரத்திலான
ராணுவத்தை உருவாக்கி
இருந்தார் ; சொந்த
தேதிமுறையை பின்பற்றினார், தனித்த
எடை,அளவுகள்
ஆகியவற்றை புழக்கத்துக்கு கொண்டு வந்தார்.
இன்னமும் குறிப்பாக அதுவரை இந்தியாவில்
பெரிய ராஜ்யங்களை அவர் காலத்தில் ஆண்ட
மன்னர்கள் முகாலயர்களின் சார்பாக ஆள்கிறோம்
என்று சொல்லியபடியே ஆண்ட
பொழுது தனித்து நின்று தன் பெயரில்
நாணயங்களை வெளியிட்டார்.
நாசாவின்
கென்னெடி விண்வெளி மையத்தின்
நுழைவாயில் ஒரு ஓவியம்
கொண்டிருக்கிறது -அதில்
திப்பு ஏவுகணையை பயன்படுத்தி போரிடுவது சித்தரிக்கப்பட்டுள்ளது
போர்களத்தில் ஏவுகணையை முதன்முதலில்
உலகிலேயே பயன்படுத்தியவர் இவர்தான்.
அது இரண்டு கிலோமீட்டர் தூரம்
வரை துல்லியமாக சென்று தாக்கும் ஆற்றல்
பெற்றதாக இருந்தது .அந்த ஆவணங்கள் இன்றும்
லண்டனில் பத்திரமாக உள்ளன ;
அந்த
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கான்கிரீவ்
ராக்கெட்களை ஆங்கிலேயர்கள்
உருவாக்கினார்கள்.
மத நல்லிணக்கத்துக்கு அற்புதமான
எடுத்துகாட்டு இவர்-
நூற்றி ஐம்பத்தாறு கோயில்களுக்கு மானியம்
வழங்கப்பட்டு வந்தது .
எந்த அளவுக்கு அவரின்
ஆட்சியில் மத நல்லிணக்கம்
நிலவியது என்பதற்கு இந்த
தகவலே போதும் .கோயில்களுக்கு செலவிடப்பட்ட
2,33,959 ரூபாயில் இந்துக் கோயில்களுக்கும்
மடங்களுக்கும் மட்டும் 2,13,959
அளிக்கப்பட்டது இவர்
ஆட்சியில்,சிருங்கேரி மடத்தலைவருடன்
நெருங்கிய உறவு பாராட்டினார் .
மூன்றாம்
மைசூர் போரில் பரசுராம் பாவ் எனும்
மராத்தியர் தலைமையிலான படைகள்
நாசப்படுத்திய
சிருங்கேரி ஆலயத்தை சீரமைத்துக்கொடுத்தார்.
அவர் காலத்தில் சந்தன
விற்பனை தேசியமயமானது.
பட்டுப்புழு உற்பத்தியை தன்
ஆட்சிப்பகுதியில் அறிமுகப்படுத்தினார்.
கிழக்கிந்திய கம்பெனிக்கு போட்டியாக
இன்னொரு நிறுவனத்தை உருவாக்கவும்
முனைந்தார் கப்பல் கட்டும்
தொழில்நுட்பம்,முகலாயர்களின் ஆட்சியில்
இருந்து மாறுபட்ட நிர்வாகம்,இடைத்தரகர்கள்
இல்லாத நிலவரி விதிப்பு என இவரின்
ஆட்சியின் நிர்வாகப்பாடங்கள் ஏராளம். அந்த
நிலவரி விதிப்பால் ஒடுக்கப்பட்ட மக்கள் பலபேர்
நிலங்களை பெற்றார்கள் ; தமிழ்நாட்டில்
இருந்து ஆங்கிலேயர் ஆளுகையில் இருந்த
மக்கள் இந்த முறைகளால்
அங்கே இடம்பெயர்வதும் நடந்தது
.
நான்கு மைல்களுக்கு ஒரு பள்ளிக்கூடம் என்ற
திட்டத்தை செயல்படுத்தினார் அவர் .
ஆடம்பரத்தை மக்கள் தவிர்க்க வேண்டும்
என்றெண்ணி திருமணத்துக்கு ஒரு சதவிகிதம்
மட்டுமே வருமானத்தில் செலவு செய்ய
வேண்டும் என்று உத்தரவிட்டார்.
குடகு பகுதியில் ஒரே பெண்ணைப் பல
ஆண்கள் மணந்துகொள்ளும் பழக்கத்தைத்
தடுத்து சட்டம் இயற்றியுள்ளார்.
கோயில்களில் இருந்த
தேவதாசி முறையையும் ஒழிக்கச் சட்டம்
போட்டதுடன், மதுவிலக்கை அமல்படுத்தி,
அதைத் தீவிரமாகக் கண்காணித்தார்.
ஆங்கிலேயரோ அதே காலத்தில்
வங்கத்திலும்,பீகாரிலும்
கஞ்சாவை உற்பத்தி செய்து சீனாவை நாசமாக்கும்
வகையில்
அதை ஏற்றுமதி செய்து கொண்டிருந்தனர்.
திப்பு அதே சமயம்
ஆங்கிலேயருக்கு யாரேனும்
உதவுகிறார்கள் என்று தெரிந்தால்
தயவு தாட்சண்யம் இல்லாமல் தண்டிக்கவும்
யோசிக்கவில்லை.
இவர் உருவாக்கிய
பல்வேறு சத்தமெழுப்பும்
இயந்திரப்புலி ஒன்று இன்னமும்
இங்கிலாந்து ம்யூசியத்தில்
பழுதடைந்து எவ்வளவோ முயற்சிக்குபின்
சரி செய்ய முடியாமல் இருக்கிறது
ஆங்கிலேயரிடம் மூன்றாம் மைசூர் போரில்
தோற்று அவரின் மகன்களை போருக்கான
பிணையாக கொண்டு சென்றார்கள்
ஆங்கிலேயர்கள்; ஆங்கில கலாசாரத்தில் அவரின்
பிள்ளைகளை வளர்த்து இவரைக்
காயப்படுத்தினார்கள் .
நான்காம் மைசூர் போரில் அவரின்
அமைச்சர்கள் மீர் சதக் மற்றும்
பூர்ணய்யா விலை போய் கோட்டையின்
கதவுகள் திறக்கப்பட்டன. ஹைதராபாத்
நிஜாமின் கடல் போன்ற
படையோடு ஆங்கிலேயர் சேர்ந்த ஐம்பதாயிரம்
பேர் படையை முப்பதாயிரம் பேர் கொண்ட
படையோடு எதிர்கொண்டு மரணம் அடைந்தார்.
இவர்.
“ஆடுகளைப் போல 200 ஆண்டுகள்
பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள்
வீரம் காட்டி மடியலாம்” என்று தான்
சொன்னபடியே தப்பித்து ஓடாமல் போரில் தீரம்
காட்டி இறந்தார் அவர். போரில் எண்ணற்ற
இழப்புகள்,சூறையாடல்கள் எல்லாம் நிகழ்ந்த
அந்த கணத்தில் ஒரு ஒப்பற்ற தலைவன்
இறந்து போனதற்காக மைசூர் மக்கள்
கண்ணீர்விட்டு அழுதார்கள்
என்று வரலாற்று ஆசிரியர்கள்
பதிவு செய்கிறார்கள். வீர
வரலாறு ஒன்று முடிவுக்கு வந்தது,
தொடரும்,,, .
mohamed sha
Subscribe to:
Posts (Atom)


