இரண்டாம் கலீஃபா உமர் பின்
———————————————————
கத்தாப் (ரலி) வாழ்க்கை
————————————————
வரலாறு :
———————
பாகம் : 03
———————
உமர் (ரலி) இஸ்லாத்தினை
——————————————————
ஏற்றுக் கொள்ளுதல்: —————————————
தனது சகோதரியின் வீட்டில் நடந்த சம்பவத்திற்குப் பின்னால் ஏற்பட்ட உள மாற்றத்திற்குப் பின்பு உமர் (ரலி) அவர்கள் நேராக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தங்கியிருந்த ஸஃபா குன்றில் அமைந்துள்ள தாருல் அர்க்கம் (அர்க்கம் மாளிகை) நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
இப்பொழுது தாருல் அர்க்கத்தின் வாசலை அடைந்த உமர் (ரலி) அவர்கள் .
கதவைத் தட்டுகின்றார்கள்.
வந்திருப்பது யார்? உள்ளிருந்து ஒரு குரல் கேட்டது.
நான் தான் உமர் இப்னு அல் கத்தாப்..! பதிலுறுத்தார்கள் உமர் (ரலி)....
கதவின் இடுக்கு வழியாக உமர் தனது வாளை இடுப்பில் உள்ள உறையில் செறுகி சிம்மமென நின்று கொண்டிருப்பதைக் கண்டு கதவைத் திறப்பதற்கு சற்று அச்சப்பட்டு நின்று கொண்டிருந்தார் அதன் பாதுகாவலர்.
இப்பொழுது பாதுகாவலரை நோக்கி வீரத்திலும் தீரத்திலும் உமருக்கு நிகரான ஹம்ஸா (ரலி) அவர்கள் திறந்து விடுங்கள் கதவை அவர் சமாதானத்தின் பால் வந்திருந்தால் அவரது வரவு நல்வரவாக இருக்கட்டும். அதுவல்லாமல் ஏதாவது சங்கடங்களை ஏற்படுத்த வந்தால் அவரைத் தடுத்து நிறுத்துவதற்குப் போதிய பலத்துடனேயே நாம் இருக்கின்றோம் என்று கர்ஜித்தார்கள்.
இப்பொழுது உமர் (ரலி) அவர்கள் தாருல் அர்க்கத்தினுள் அனுமதிக்கப்பட்டு விட்டார்... நுழைகிறார் உமர் (ரலி) உடனே சட்டென பாய்ந்து உமர் (ரலி)யின் கழுத்துச் சட்டையைப் பிடித்துக் கொண்டவராக ''உமரே..! எதற்காக இங்கு வந்தீர்? நீர் இங்கு வர வேண்டிய அவசியமென்ன?"" என ஹம்ஸா (ரலி) அவர்கள் வினவினார்கள். இந்த சம்பாஷனை நடந்து கொண்டிருக்கும் பொழுதே அங்கிருந்த முஸ்லிம்கள் அனைவரும் தங்களது வாட்களை தயாராக தங்களது கைப்பிடிக்குள் அழுத்திப் பிடித்துக் கொண்டு எந்த சூழ்நிலையையும் சமாளிப்பதற்குத் தயாராக இருந்தார்கள்.
இவ்வாறாக அங்கே நடந்து கொண்டிருந்த சம்பாஷனைகள் மற்றும் கலவரச் சூழ்நிலையை பக்கத்து அறையில் இருந்து அவதானித்துக் கொண்டிருந்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ''அவரை விட்டு விட்டு என் முன்பு அவரை வர விடுங்கள்"" என்று கூறினார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்களை முன்னோக்கி வந்த உமரைப் பார்த்து உமரே..! சத்தியத்தின் வெளிச்சப் புள்ளிகள் விடியலைக் காண்பித்துக் கொண்டிருக்கும் பொழுது அறியாமைக்கால இருட்டிலேயே எவ்வளவு காலம் தான் இருந்து கொண்டிருப்பீர்கள்? என்று பாசமாய் வினவினார்கள் பூமான் நபியவர்கள்....
இதயம் கசிந்துருகி ஆனந்த கண்ணீர் மல்க கூறினார் உமர் (ரலி)...
யா ரசூலல்லாஹ்...! நிச்சயமாக சத்தியத்தை காணும் நேரம் வந்து விட்டது. நான் சத்தியத்திற்குச் சான்று பகரவே இங்கு வந்திருக்கின்றேன் என்று.
உடனே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது கரங்களை உமரை நோக்கி நீட்டினார்கள். உமரும் தனது கரங்களை இறைத்தூதர் (ஸல்) அவர்களின் திருக்கரங்களில் வைத்து ''வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இல்லை முகம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் இறுதி தூதராவார்கள்"" என்று சத்தியத்திற்குச் சான்று பகர்ந்தவராக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள்.
உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தினை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டதை அடுத்து அங்கு கூடியிருந்த நபித்தோழர்கள் அனைவரும் உற்சாக மிகுதியால் அல்லாஹூ அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று குரல் எழுப்பினார்கள். ஒவ்வொருவராக வந்து உமர் (ரலி) அவர்களைக் கட்டித் தழுவி தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்கள். இப்பொழுது மக்காவில் இஸ்லாத்தைத் தழுவியர்களின் எண்ணிக்கையில் ஒன்று கூடி எண்ணிக்கை நாற்பதைத் தொட்டது.
அன்றைய தினம் வானவர் தூதர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் கூட உமர் (ரலி) அவர்களின் இஸ்லாமியப் பிரவேசத்திற்காக இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வாழ்த்துத் தெரிவித்தார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! உங்கள் துஆ(பிரார்த்தனை)வின் விளைவான உமரின் இஸ்லாமியப் பிரவேசம் காரணமாக வான மண்டலத்தில் உள்ளோர் அனைவரும் சந்தோஷமடைந்துள்ளார்கள் இந்த நற்செய்தியை உமருக்கும் தெரிவித்து விடுங்கள் என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் கூறினார்கள்.
இஸ்லாத்தினைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டபின் அதனை மறைத்து வைக்க விரும்பாத உமர் (ரலி) அவர்கள் தனது மாற்றத்தை மக்காவின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று தெரிவித்த வண்ணம் இருந்தார்கள். அவர் தனது தாய் வழி மாமாவும் இஸ்லாத்தின் பரம வைரியுமான அபூ ஜஹ்லிடம் கூறச் சென்று அவனது வீட்டுக் கதவைத் தட்டினார்கள்.
யாரது? உள்ளிருந்து கொண்டு அபூஜஹ்ல் கேட்டான்.
நான் தான் உமர் வந்திருக்கின்றேன் என்ற உமரின் சப்தத்தைக் கேட்டவுடன் அபூஜஹ்ல் தனது வீட்டுக் கதவைத் திறந்தான்.
வாருங்கள் மருமகனாரே..! என்ன விஷயம்?
உங்களுக்குத் தெரியுமா? நான் முஸ்லிமாகி விட்டேன்..! என்று உமர் (ரலி) அவர்கள் கூறவும் அபூஜஹ்ல் கூறினான் :
அப்படிக் கூறாதே..! உங்களைப் போன்ற தொலைநோக்குப் பார்வை உள்ளவர்கள் என்றைக்கும் முஸ்லிமாக மாட்டார்கள் என்று.
உமர் (ரலி) பதில் கூறினார்
இல்லை..! நான் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டு விட்டேன் என்பது சத்தியமானது.
இதனைக் கேட்ட அபூஜஹ்ல்
நீர் சொல்வது உண்மையாக இருக்குமென்றால் உமக்கு நாசம் உண்டாகட்டும் என்று கூறி விட்டு தனது வீட்டுக் கதவை இழுத்துச் சாத்தி விட்டு உமரின் முகத்தில் அறைந்தது போல் வீட்டினுள் சென்று விட்டான்.
அபூஜஹலை அடுத்து மக்காவின் ஏனைய முக்கியப் பிரமுகர்களைச் சந்திக்க உமர் (ரலி) அவர்கள் புறப்பட்டார்கள். அவர்கள் அனைவரிடமும் தான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்டதாகக் கூறினார்கள். அபூஜஹலைப் போலவே அவர்கள் அனைவரும் உமர் (ரலி) அவர்களின் மீது நாசம் உண்டாகட்டும் என்று சாபமிட்டதோடு தங்கள் வீட்டுக் கதவுகளை இழுத்து அடைத்துக் கொண்டார்கள்.
இப்பொழுது உமர் (ரலி) அவர்கள் கஃபாவை நோக்கிச் செல்லலானார்கள். அங்கே இஸ்லாத்தினைப் பற்றிய அவதூறுகளைப் பரப்பிக் கொண்டு அதில் சந்தோஷமடைந்து திரியும் ஜமீல் பின் மாமர் அல் ஜமாஹி என்பவனைக் கண்டார்கள். அவனிடமும் தான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்டதாக உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். இதனைக் கேட்ட ஜமீல் உரத்த குரலெடுத்து அழத் தொடங்கியதோடல்லாமல் அவன் கூறினான் :
குறைஷிகளே வாருங்கள்..! உமர் செய்ததைப் பார்த்தீர்களா அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்டாராம் நம்முடைய முன்னோர்களின் மார்க்கத்தை விட்டு விட்டு வேறொரு கொள்கையை ஏற்றுக் கொண்டு விட்டாராம் என்று குரலெடுத்துக் கத்த ஆரம்பித்தான்.
இதனைக் கேட்ட மக்காவின் இளைஞர்கள் கஃபாவை நோக்கி விரையலானார்கள் அங்கே சிறிய கூட்டமும் சேரலாயிற்று.
இதனைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
ஜமீல் சொல்வதில் உண்மை இல்லை. நான் நம்முடைய முன்னோர்களை மறுத்தொதுக்கவில்லை ஆனால் சத்தியத்தைக் கண்டு கொண்டேன் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டேன் என்று.
இதனைக் கேட்ட மக்காவின் இளைஞர்கள் பட்டாளம் உமர் (ரலி) அவர்களைத் தாக்கும் நோக்கத்துடன் அவரை நோக்கி விரைந்தார்கள்.
அப்போது அந்த வழியாக சென்று கொண்டிருந்த அல் ஆஸ் பின் வலீ என்பவர் இங்கு என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்று கேட்டார். அதற்கு அந்த இளைஞர்கள் உமர் நம்முடைய முன்னோர்களின் மார்க்கத்தைப் பழித்து விட்டு புதிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டு விட்டார். அதற்கு தண்டனை வழங்கத் தான் நாங்கள் விரைந்து சென்று கொண்டிருக்கின்றோம் என்று கூறினார்கள். இப்பொழுது அந்த நபர் அவர்களைப் பார்த்து
''ஒரு மனிதர் தான் தேர்ந்தெடுத்துக் கொண்ட மார்க்கத்தை ஏற்றுப் பின்பற்றுவதற்குச் சுதந்திரம் பெற்றவராவார். அதற்காகவா அவரைத் தண்டிக்கச் செல்கின்றீர்கள்?... இப்பொழுது அந்த வழியாக அபூஜஹ்லும் வந்து கொண்டிருந்தான். குரைஷிகளின் இளைஞர் பட்டாளத்தைப் பார்த்த அவன்
என்னுடைய மருமகனான உமரைப் பாதுகாக்க நான் பொறுப்பேற்றுக் கொள்கின்றேன் என்று கூறினான்.
இதைக் கேட்ட உமர் (ரலி) மாமாவே..! உங்களது பாதுகாப்பு எனக்குத் தேவையில்லை. என்னைப் பாதுகாக்க அல்லாஹ்வும் அவனால் அனுப்பி வைக்கப்பட்ட தூதர் (ஸல்) அவர்களுமே போதுமானவர்கள் என்று கூறினார்கள்.
இப்பொழுது உமர் (ரலி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று தான் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டு விட்டதாக பொதுமக்கள் முன்னிலையில் அறிவித்து விட்டு வந்து விட்டதாகக் கூறினார்கள். இதுநாள் வரை குறைஷிகளின் வன்கொடுமைகளுக்குப் பயந்து இஸ்லாத்தினைத் தழுவுபவர்கள் தங்களது நம்பிக்கையை மறைத்தே வைத்திருந்தார்கள். இன்னும் மிகவும் மறைவாகவே தங்களது தொழுகைகளை நிறைவேற்றி வந்தார்கள். இப்பொழுது மக்களின் இந்த நிலையைக் கண்ணுற்ற உமர் (ரலி) அவர்கள் தூதர் (ஸல்) அவர்களே :
நாம் சத்தியத்தைத் தானே பின்பற்றிக் கொண்டிருக்கின்றோம்? இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள் :
அதிலென்ன சந்தேகம் நாம் சத்தியத்தைத் தான் பின்பற்றிக் கொண்டிருக்கின்றோம்.
பின் நாம் ஏன் வெளிப்படையாகத் தொழக் கூடாது? சத்தியத்திற்குச் சான்று பகர்ந்திருப்பதை வெளிப்படையாகக் கூறும் நேரம் இன்னும் நமக்கு வரவில்லையா? என்று உமர் (ரலி) அவர்கள் கேட்கலானார்கள்.
இஸ்லாத்தை வெளிப்படையாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்ற உமர் (ரலி) அவர்களின் கோரிக்கையை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அடுத்த நாள் முஸ்லிம்கள் அனைவரும் தாருல் அர்க்கத்தை விட்டும் வெளியே வந்து மக்காவை நோக்கி இரண்டு வரிசைகளில் அணிவகுத்துச் செல்லலனார்கள். ஒரு அணிக்கு உமர் (ரலி) அவர்களும் இன்னொரு அணிக்கு ஹம்ஸா (ரலி) அவர்களும் வழிநடத்திச் செல்லலனார்கள். இப்பொழுது முஸ்லிம்கள் கஃபாவில் மிகவும் வெளிப்படையாக நின்று தொழலானார்கள். முஸ்லிம்கள் தொழுவதை சுற்றி நின்று கொண்டு குறைஷிகள் பார்க்கலானார்கள் இன்னும் நிச்சயமாக உமர் அவர்கள் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டதன் மூலமாக இந்த முஸ்லிம்கள் நமக்கு எதிராக பழிதீர்த்துக் கொள்கின்றார்கள் என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.
முஸ்லிம்கள் முதன்முதலாக கஃபாவில் தொழுது முடித்தவுடன் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களுக்கு அல் ஃபாரூக் (சத்தியத்திலிருந்து அசத்தியத்தை பிரிப்பவர்) என்ற புனைப் பெயரை வழங்கினார்கள். இவ்வாறாக உமர் (ரலி) அவர்களின் தூய எண்ணத்தின் காரணமாகவும் அவரது முயற்சியின் காரணமாகவும் இஸ்லாத்தினை வெளிப்படையாக அறிவிக்கும் நாள் வந்தது.
அல்ஹம்து லில்லாஹ்....

No comments:
Post a Comment
சகோதரர்களே உங்கள் கருத்துகளை பகிரலாமே