Sunday, July 13, 2014

இரண்டாம் கலீஃபா உமர் பின் கத்தாப் (ரலி) வாழ்க்கை வரலாறு : பாகம் : 08

இரண்டாம் கலீஃபா உமர் பின்
———————————————————
கத்தாப் (ரலி) வாழ்க்கை
————————————————
வரலாறு :
———————

பாகம் : 08
———————

...

பத்ரு பள்ளத்தாக்கில்......
————————————————

பத்ரு போருக்கு முந்திய நாள் இரவு....

மக்கத்து குரைஷிகள் பத்ரை வந்தடைவதற்கு முன் இறைவன் அருளால் அங்கு சென்றடைந்த முஸ்லிம்களின் படைக்கு மதீனாவின் வழிக்கு நேராக இருக்கும் முதலாவது கிணற்றுக்கருகில் தமது கூடாரங்களை அமைத்துக் கொள்ளுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.

அப்போது, போர் தந்திரங்களை நன்கு அறிந்த அல்ஹுபாப் இப்னு முந்திர்(ரலி) என்ற நபித்தோழர், நபி(ஸல்) அவர்களிடம்,”யா ரசூலுல்லாஹ் !., ‘அல்லாஹ்வின் தூதரே! இந்த இடத்தில் நாம் கூடாரமிடவேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளையா? அப்படியாயின் நாம் இதை விட்டும் ஒரு அடி முன்னாலோ, பின்னாலோ நகர மாட்டோம்! அல்லது உங்களது சொந்த அபிப்பிராயப்படி நீங்கள் தீர்மானித்த இடம் என்றால், என்னிடம் மாற்று அபிப்பிராயம் உள்ளது!’ என்றார்.

அப்போது நபி(ஸல்) அவர்கள் தனது சொந்த முடிவு என்றதும், ‘அல்லாஹ்வின் தூதரே! இதற்கு பின்னரும் தொட்டிகள் உள்ளன. நாம் முன்னேறிச் சென்று அவற்றையும் எம் வசப்படுத்திக்கொள்ள வேண்டும். அதைத் தாண்டியிருக்கும் சிறிய நீர் தொட்டிகளிலிருந்து தண்ணீரை நாம் எடுத்துக் கொள்வோம். அப்போது நாம் தண்ணீர் குடிக்க அவர்கள் தாகத்தோடு போராடுவார்கள்’ என்று தனது அபிப்பிராயத்தைக் கூற அது போர்த்தந்திரத்திற்கும், எதிரிகளைப் பலவீணப்படுத்தவும் ஏற்ற யுக்தியாகத் திகழ்ந்ததால் நபி (ஸல்) அவர்கள் தனது முடிவை மாற்றி அவர் கருத்துப்படி செயற்பட்டார்கள்’

(ஆதாரம் : அஸ்ஸீரதுன் நபவிய்யா-இப்னு ஹிஸாம்., அத் தபகாத்-இப்னு ஸஃத்).

இப்போது ஸஅது இப்னு முஆது(ரழி) அவர்களின் யோசனையின் படி, நபி(ஸல்) அவர்கள், போர் நடவடிக்கைகள் அனைத்தையும் நேரடியாக கவனிக்க ஒரு உயரமான பரண் வீடு ஒன்றை கட்டினார்கள். அதனை சுற்றிலும் பாதுகாப்பு அரணாக விளங்க ஸஅது இப்னு முஆது(ரழி) அவர்கள் தலமையில் அன்சாரி வாலிபர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

பின்னர் சந்திரனின் பிரகாச ஒளியில் நாளை போர் நடைபெற உள்ள மைதானத்தில் நடந்து சென்று, நபி(ஸல்) அவர்கள் பார்வையிட்டார்கள். அப்போது, “இன்ஷா அல்லாஹ்! நாளை இன்னார் கொல்லபடும் இடம் இது” என்று சிலரின் பெயர்களையும், அந்த இடங்களையும் தனது விரலால் சுட்டிகாட்டி, முன் அறிவிப்பு செய்தார்கள்.

முஸ்லிம்கள், மிகுந்த நம்மிக்கையுடனும், மன அமைதியுடனும், காலையில் இறைவனின் நற்செய்தியைகளை கண்கூடாக காணலாம், என்ற ஆதரவுடனும் இருந்த அவர்களை தூக்கம் ஆட்கொண்டதால் சற்று உறங்க ஆரம்பித்தார்கள்.

இப்போது வல்ல அல்லாஹ் முஸ்லிம்களுக்கு உதவி
புரியும் பொருட்டு தனது அருள் மழையை இறக்கினான், அந்த மழை முஸ்லிம்களுக்கு மென்மையான தூறலாக இருந்தது, குரைஷிகளுக்கு அடைமழையாக இருந்தது. முஸ்லிம்கள் தங்கி இருந்த இடம் தண்ணீர் பட்டால் நன்றாக இருகும் தன்மையுள்ள மணற்பாங்கான குன்று, அந்த இடம் மழையால் இறுகி முஸ்லிம்களுக்கு வசதியான மணற்குன்றாக மாறியது, அதே சமயம் மக்கத்து காஃபிர்கள் தங்கி இருந்த இடமோ தண்ணீர் பட்டால் சேறும் சகதியுமாக மாறும் தன்மையுடையதால் மழையின் காரணம் மக்கா குரைஷிகளுக்கு அது தொல்லையாக மாறியது இவ்வாறு மழையின் மூலம் அல்லாஹ் முஸ்லிம்களை சுத்தப்படுத்தினான். ஷத்தானை விட்டும் அப்புறப்படுத்தினான்.

இதைப் பற்றி அல்லாஹ் திருமறையில்...... :

إِذْ يُغَشِّيكُمُ النُّعَاسَ أَمَنَةً مِنْهُ وَيُنَزِّلُ عَلَيْكُمْ مِنَ السَّمَاءِ مَاءً لِيُطَهِّرَكُمْ بِهِ وَيُذْهِبَ عَنْكُمْ رِجْزَ الشَّيْطَانِ وَلِيَرْبِطَ عَلَىٰ قُلُوبِكُمْ وَيُثَبِّتَ بِهِ الْأَقْدَامَ


(நினைவு கூறுங்கள்;) நீங்கள் அமைதியடைவதற்காக அவன் சிறியதொரு நித்திரை உங்களை பொதிந்து கொள்ளுமாறு செய்தான்; இன்னும் உங்களை அதன் மூலம் தூய்மைப்படுத்துவதற்காகவும், ஷைத்தானின் தீய எண்ணங்களை உங்களைவிட்டு நீக்குவதற்காகவும், உங்கள் இருதயங்களைப் பலப்படுத்தி, உங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவதற்காகவும், அவன் உங்கள் மீது வானிலிருந்து மழை பொழியச் செய்தான். (08 : 11).
என்று கூறுகின்றான்.

இப்போது மக்கா படையினர் பத்ருக்கு சமீபமாக வந்திறங்கினார்கள். பத்ரு பள்ளத்தாக்கின் மேற்கு பகுதியில் கூடாரமடித்து தங்கினர். முஸ்லிம் படைகளை வேவு பார்ப்பதற்காக, உமைர் இப்னு வஹ்பு ஜுமையை அனுப்பினார்கள், அவரும் நாலபக்கமும் தனது குதிரையில் சென்று, முஸ்லிம் படையின் அளவை குரைஷிகளிடம் கூறினார். “அவர்கள் சுமார் முன்னூறு பேர் இருக்கலாம், அவர்களிடம் வாளைத்தவிர வேறு எந்த தற்காப்பு ஆயுதங்களும் இல்லை. ஆனால், அவர்கள் நம்மைவிட மூன்று மடங்கு குறைவாக இருந்தாலும், அவர்கள் கொல்லப்படும்போது, நம்மவர்களை கொல்லாமல் சாகமாட்டார்கள். அத்தனை உறுதி அவர்களிடம் தெரிகிறது” என்று கூறி, போர் குறுத்து மறுபரிசீலனை செய்யுமாறு அபுஜஹலிடம் கூறினார். அதே போல், ஹக்கீம் இப்னு ஹிஸாம், உத்பா போன்றோர், போர் களத்தின் எதிரே உள்ளவர்காள் நம் உறவினர்கள், யார் யாரை கொன்றாலும் அழியப்போவது நம் இனம்” என்று எவ்வளவோ எடுத்துகூறியும், அபுஜஹல் சம்மதிக்கவில்லை. முஸ்லிம்களை கூண்டோடு அழிக்க வேண்டும் என்று கர்ஜித்தான். குரைஷிகளும் ஆவேசமாக கத்தினார்கள்.

அன்றைய இரவு, அனைவரும் தூங்கும் சமயம் நபி(ஸல்) விழித்திருந்து அவர்கள் ஒரு கூடாரத்தில் நின்று தொழுதும் அழுதும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் அவனது உதவிக்காக பிரார்த்தித்தார்கள் இதனை பின்வரும் ஹதீத் விவரிக்கின்றது...

நபி(ஸல்) அவர்கள் (பத்ருப் போரின் போது) ஒரு கூடாரத்தில் இருந்தபடி, “இறைவா! நான் உன் உறுதிமொழியையும் வாக்குறுதியையும் உன்னிடமிருந்து கோருகிறேன். இறைவா! உன்னுடைய நாட்டம் (முஸ்லிம்களாகிய) நாங்கள் தோற்றுப் போக வேண்டும் என்று) இருக்குமானால் இன்றைக்குப் பிறகு உன்னை வணங்குவது நின்று போய் விடும். (மக்கள் கற்பனையான பொய்க் கடவுள்களையே வணங்கிக் கொண்டிருப்பார்கள்)” என்று (முஸ்லிம்களுக்கு வெற்றியைத் தரும்படி) மன்றாடிப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள். அபூ பக்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டு, “போதும், இறைத்தூதர் அவர்களே! தங்கள் இறைவனிடம் தாங்கள் நிறையவே மன்றாடி விட்டீர்கள்“ என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் கவச உடை அணிந்திருந்தார்கள். பிறகு “இந்த (இறைமறுப்பாளர்) படை விரைவில் தோற்கடிக்கப்படும்; மேலும், இவர்கள் புறமுதுகிட்டு ஓடுவார்கள். ஆயினும், இவர்களின் (கணக்கைத் தீர்த்திட) வாக்களிக்கப்பட்ட நேரம் மறுமை நாளாகும். மறுமை நாளோ மிகக் கடுமையானதும், மிகக் கசப்பானதும் ஆகும்” என்னும் திருக்குர்ஆன் வசனத்தை (திருக்குர்ஆன் 54:45, 46) ஓதியபடி அங்கிருந்து நபியவர்கள் வெளியேறினார்கள். என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கின்றார்கள்.

ஸஹீஹ் புகாரி,
அத்தியாயம் : 56, எண் :2915
பாடம் : அறப்போரும் அதன் வழிமுறைகளும்.

பத்ருடைய நாள் :
———————————
ஹிஜ்ரி 02, புனித ரமலான் மாதம், பிறை 17, வெள்ளிக்கிழமை அதிகாலை (கி.பி. 624, மார்ச் 17) பத்ருப் போர்களம்.

அல்லாஹூ அக்பர்.... அல்லாஹூ அக்பர்.... அல்லாஹூ அக்பர்....

உலகவரலாற்றின் ஓர் உண்ணதமான நாள்!....

இஸ்லாமிய தற்காப்பிற்கு, தார்மீக உரிமை கொண்டாடும் நாள்!.....

வல்ல நாயனே நேரிடையாக உதவி புரிய, வானவர்களை வாள்களுடன் இறக்கிய நாள்.....

இஸ்லாமிய வரலாற்றின் அடித்தளம் வல்லோன் அல்லாஹ்வால் செம்மை படுத்தப்பட்ட நாள்.....

இஸ்லாமிய வரலாற்றின்
முதல் போர்….

பத்ருப் போர்….! பத்ருப் போர்….!! பத்ருப் போர்….!!!

பத்ரு பள்ளத்தாக்கில் இரண்டு அணிகளும் தயார் நிலையில்….....





 

No comments:

Post a Comment

சகோதரர்களே உங்கள் கருத்துகளை பகிரலாமே