இதுதான் இஸ்லாம்
நபியின் சபைக்கு வந்தவர் ஒரு கிராமவாசி,
வரும்போதே அவர் சத்தம் போட்டுக்கிட்டே வந்தாரு,
"நான் நாசமாப் போயிட்டேன் நான் நாசமா போயிட்டேன்" அப்படின்னு...
என்னன்னு அவரைக்கூப்பிட்டு நபி கேட்டாங்க,
அவர் சொன்னாரு, நபியே நான் நோன்பு வச்சுக்கிட்டே என் மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபட்டுவிட்டேன். நான் என்ன செய்ய?
வேய் அப்படின்னா நீ ஒரு அடிமையை விலைக்கு வாங்கி உரிமை விடு என்று நபிசொல்ல,
எனக்கு அவ்வளவு வசதியில்லை. அப்படின்னார்
சரி அப்படின்னா அறுபது ஏழைக்கு சாப்பாடு கொடு,
அதுக்கும் ஹூம் நான் மிக வறியவன்...
அப்படின்னா ரண்டு மாசம் தொடர்ந்து நோன்பு வையிங்க...
அதுக்கும் எனக்கு என் உடல்நிலை இயலாதுன்னு சொல்ல,
அங்கே சபைக்கு வந்த பேரீத்தம் குலைகளை அவருக்கு தந்து நீரே உமது பகுதியில்
வாழும் மிகவும் ஏழைகளுக்கு சதக்காவாக உமது கரத்தால் செய் என்று
சொன்னார்கள் நபி..
இப்ப அவர் சொன்னார்.
என்னை விட ஒரு வறிய ஏழையை என் ஊரில் நீங்க பார்க்க முடியாது ஹபீபே...
நபி தனது கடைவாய் பற்கள் தெரியுமளவுக்கு சிரிச்சிட்டு சொன்னார்களாம்... நீரே உமது குடும்பத்தாருடன் அதனை அனுபவித்துக் கொள்ளும்.
சன்மார்க்கம் இந்த மண்ணில் வாழும் சக மனிதத்தை காக்க வந்த ஒன்று..
சகோ. கலு. அப்துல்லாஹ் ரஹ்மத்துல்லாஹ்
No comments:
Post a Comment
சகோதரர்களே உங்கள் கருத்துகளை பகிரலாமே