சௌதியைச் சேர்ந்த ஒருவர் மதீனாவிலிருந்து வந்து கொண்டிருக்கையில் தனது டோயோடா ப்ராடோவில் 140 கி.மி வேகத்தில் ஸ்பீட் செட்டிங்(குரூஸ்) செய்துவிட்டு ஓட்டி வந்திருக்கிறார். இந்த செட்டிங் சாதாரணமாக பிரேக் பிடித்தால் ரிலீஸ் ஆகி விடும். ஆனால், அவருக்கு ரீலீஸ் ஆகவில்லை. மனிதர் என்ன செய்வதென்று புரியாமல் சௌதியின் ட்ராஃபிக் போலீசிற்குத் தொடர்பு கொண்டு விபரத்தைக் கூறியுள்ளார். என்னால் வேகத்தைக் குறைக்க முடியவில்லை. ஊருக்குள் வந்தால் பயங்கரமான விபத்து நடந்து விடும். ஏதாவது செய்து என்னைக் காப்பாற்றுங்கள் எனக் கூறியுள்ளார். உடனே துரிதமாகச் செயல்பட்ட காவல் துறை, டோயோட்டோ விற்பனை நிறுவனமான அப்துல் லத்தீஃப் அல் ஜமீலை நாடி, எப்படி வண்டியை நிறுத்துவது அல்லது வேகத்தைக் கட்டுப்படுத்துவது எனக் கேட்டுள்ளனர். அவர்களுக்கும் அதைப் பற்றிய விபரம் தெரியாமல், ஜப்பானிற்குத் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, டோயோட்டோப் ப்ராடோவின் பின் பக்க கண்ணாடியை உடையுங்கள். வாகணம் தானகவே வேகம் குறைந்து நின்று விடும் என டோயோட்டோ நிறுவனத்தார் கூறியதின் அடிப்படையில், காவல் துறையினர், அல் கஸீமிற்கு 100 கி.மீ முன்னாலேயே பின் பக்க கண்ணாடியைத் துப்பாக்கியால் சுட்டு வாகனத்தை நிறுத்தியுள்ளனர்.
அல்ஹம்துலில்லாஹ்.
பதிவு ஆக்கம்
முனீப்
No comments:
Post a Comment
சகோதரர்களே உங்கள் கருத்துகளை பகிரலாமே