Wednesday, July 9, 2014

எங்கிருந்து வந்தோம் ? எங்கு செல்வோம் ? எதாவது ஐடியா இருக்கா ? ஐடி மக்களிடம் தஃவா !






எங்கிருந்து வந்தோம் ? எங்கு செல்வோம் ?
எதாவது ஐடியா இருக்கா ? ஐடி மக்களிடம் தஃவா !

கடற்கரை தஃவாவில் பல்வேறு தரப்பினரையும் காணலாம் ! நல்ல படித்த ஐடியில் பணிபுரியும் இரு நண்பர்களைப் பார்த்தோம் ! இந்த உலக சுகத்தை மட்டும் முன்னிறுத்தி தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் இன்றைய இந்திய இளைஞர்களின் தோற்றத்தில் இருந்த அவர்களிடம் '' நாம் எங்கிருந்து வந்தோம் ? எங்கு செல்வோம் ? எதாவது ஐடியா இருக்கா ? என்ற போது கஷுவலாக ' நோ ஐடியா' என உதட்டைப் பிதுக்கினார்கள்!

அவர்களிடம் '' இறைவன் நம்மை எதற்காக படைத்து வாழ்வையும் மரணத்தையும் தந்தான் ! மரணத்திற்கு பின் என்ன நடக்கும் என்பதை எல்லாம் ஆங்கிலத்தில் நம்முடைய சகோதரர் எடுத்து உரைத்த பொது அவர்களின் முகத்தில் சற்று மாறுதல் தெரிந்தது ஆரம்பத்தில் இருந்த அசட்டை போய் பவ்யம் தென்பட்டது ! இந்தக் கேள்விகள் மட்டுமல்ல உங்களின் வாழ்க்கையில் எழும் எல்லாக் கேள்விகளுக்கும் இதில் விடை இருக்கிறது என குர் ஆனின் ஆங்கில மொழியாக்கத்தை வழங்கினோம் !

அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழி காட்டட்டும் !




Sengis Khan

No comments:

Post a Comment

சகோதரர்களே உங்கள் கருத்துகளை பகிரலாமே