Wednesday, July 9, 2014

திருக்குர்ஆனின் அறைகூவல்

திருக்குர்ஆனின் அறைகூவல்
எழுதப் படிக்கத் தெரியாத
முஹம்மது நபிக்குத் திருக்குர்ஆன்
அருளப்பட்டது.
முஹம்மது நபி அவர்களின் காலத்தில்
குறைந்த எண்ணிக்கையில் இருந்த
எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள்
மொழியில் மிகவும்
விற்பன்னர்களாகவும், உயர்ந்த
இலக்கியத் தரத்தில்
கவிதைகளை இயற்றுவோராகவும்
இருந்தனர்.
எழுதப் படிக்கத் தெரியாத
முஹம்மது நபி அவர்கள்
எதை இறைவேதம் எனக்
கொண்டு வந்தார்களோ அது அன்றைய
விற்பன்னர்களது
இலக்கியத்தை மிஞ்சும் வகையில்
அமைந்திருந்தது. பொய் கலப்பில்லாத
ஒரே இலக்கியமாகவும்
அமைந்திருந்தது.
எனவே "இவ்வளவு உயர்ந்த
இலக்கியத்தை எழுத்தறிவு இல்லாத
முஹம்மது கற்பனை செய்து விட்டார்
என்று நீங்கள் கருதினால்
பண்டிதர்களான நீங்கள் இதுபோல்
தயாரித்துக் காட்டுங்கள்!''
என்று அறைகூவல் விடப்பட்டது.
முழு மனித குலத்துக்குமான இந்த
அறைகூவல் இன்றளவும் எவராலும்
எதிர்கொள்ளப்படவில்லை.
2:23. இன்னும், (முஹம்மது (ஸல்) என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை (யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள்.
10:38. இதை (நம் தூதராகிய) அவர் கற்பனை செய்து கொண்டார் என அவர்கள் கூறுகின்றார்களா? (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால், இதிலுள்ளதைப் போல் ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்; அல்லாஹ்வையன்றி உங்களால் சாத்தியமானவர்களை (உங்களுக்கு உதவி செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்!” என்று.
11:13. அல்லது ”இ(வ் வேதத்)தை அவர் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டார்” என்று அவர்கள் கூறுகிறார்கள்? “(அப்படியானால்) நீங்களும் இதைப் போன்ற கற்பனை செய்யப்பட்ட பத்து அத்தியாயங்களை கொண்டு வாருங்கள் - நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால்! அல்லாஹ்வைத் தவிர்த்து உங்களுக்கு சாத்தியமான எல்லோரையுமே (இதற்குத் துணை செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக..
 

No comments:

Post a Comment

சகோதரர்களே உங்கள் கருத்துகளை பகிரலாமே