ஜனநாயகத்தின் 4காம் தூ....ணாம்
ஒட்டுமொத்த ஊடகங்களும் ...
நேர்மையற்ற பரபரப்பு புரளிகலும் ...
மலேசிய விமானம் காணாமல் போய் இன்றோடு கிட்டத்தட்ட 4 மாதங்கள் ஆகிவிட்டன..
அந்த விமானம் என்னவாயிற்று என்றும் தெரியவில்லை.. பயணிகள் என்னாவானார்கள்
என்றும் தெரியவில்லை...
வழக்கம் போல பல புரளிகள் மட்டும் தான் ஊடகங்களில் வந்தது..
சென்னை சென்ட்ரல் குண்டு வெடிப்பு வழக்கு என்னவாயிற்று ?
வழக்கம் போல பரபரப்பாக ஊடகங்களில் புரளிகளுக்கு மட்டும் பஞ்சமில்லாமல இருந்தது.
புத்தகயா மற்றும் பாட்னா குண்டு வெடிப்பு வழக்குகள் என்னவாயிற்று ?
வழக்கம் போல பரபரப்பாக ஊடகங்களில் புரளிகளுக்கு மட்டும் பஞ்சமில்லாமல இருந்தது.
இலங்கை வழியாக இந்தியாவை தக்க வந்த தீவிரவாதி தமிழகத்தில் கைது என்ற செய்தி என்னவாயிற்று..?
வழக்கம் போல பரபரப்பாக ஊடகங்களில் புரளிகளுக்கு மட்டும் பஞ்சமில்லாமல இருந்தது.
ஆனால் ஓன்று மட்டும் உண்மை..
ஊடகங்கள் வெளியிடும் செய்திகள் அனைத்தும் பரபரப்பிற்காகவும் ,குறிப்பிட்ட
சமூகத்தை மக்கள் மன்றத்தில் இருந்து தனிமைப்படுத்தவும் , அரசியல்
லாபத்திற்காகவும் மட்டும் தானே வெளியிடுகிறார்களே ஒழிய
பாதிக்கப்பட்டவர்களின் குரலாக உண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும்
செய்தியாக செய்திகளை வெளியிடுவதாக இல்லை..
இவர்களுக்கு பெயர் தான் ஜனநாயகத்தின் 4காம் தூ....ணாம்..
No comments:
Post a Comment
சகோதரர்களே உங்கள் கருத்துகளை பகிரலாமே