பாலஸ்தீனம்
அங்கு
பாசிச யூத வெறியன் எறிந்த குண்டில்
பாலஸ்தீன சகோதரியின் கண் நொல்லையானது.
இங்கு
நீ கால்பந்தை பார்த்துக் கொண்டு இரு
பிரேசில் ரசிகை கண்கலங்கியதை
கரிசனமுடன் ரசனையுடன் எழுது.
அங்கு
சிறுவனின் உடல் சிதறிப் போனது
இங்கு
தன் சார்ந்த அணி தோற்று விட்டதே
என பதறிக் கொண்டிரு
துக்கமும் துயரமும்
உன்னை தீண்டாத வரை
உணரமுடியாது எனில்
உன் மனித ஜென்மம் பயனற்றது.
No comments:
Post a Comment
சகோதரர்களே உங்கள் கருத்துகளை பகிரலாமே