Friday, July 11, 2014

நான் காசாவிலிருந்து எழுதுகிறேன்


அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

பலஸ்தீனத்தில் இன்னல்களுக்கு
ஆளான உன்னுடைய அடியார்களை கருணை
கொண்டு காப்பாற்று ரஹ்மானே !

உன்னை அன்றி எங்களுக்கு
பாதுகாவலன் யார் ?

எதிரிகளுக்கு உன்னுடைய
அச்சத்தை ஏற்படுத்துவாயாக
கருனையாளனே !

உன்னையை வணங்குகிறோம் !
உன்னிடமே பாதுகாவல்
தேடுகிறோம் எங்கள்
பாவங்களை மன்னித்தருள்வாயாக
யா அல்லாஹ் !



எங்களால் தாங்க முடியாத
சுமையை சுமத்தி விடாதே !
எங்கள் முன் சென்றோறின்
சோதனைகளைப் போல் எங்கள்
மீது சோதனையை சுமத்தி
விடாதே எங்கள் கரங்களை
பலப்படுத்து மறையோனே !

நான் காசாவிலிருந்து எழுதுகிறேன்
என்னுடைய இந்த செய்தியை உலகம்முழுவதும் பரப்புங்கள்.
உலக மக்களுக்கு காசாவிலிருந்து,
நாங்கள் வெறும் எண்ணிக்கை அல்ல,நாங்கள் மனிதர்கள். இறைவன்
மீது ஆணையிட்டு சொல்கிறேன்
எங்களுக்கு பெயர் உள்ளது,
எங்களுக்கு குழந்தைகள் உள்ளனர்,
எங்களுக்கும் உணர்ச்சிகள் உள்ளது.
ஒவ்வொரு உயிருக்கும்
ஒரு வரலாறு உள்ளது, நாங்களும்
உங்களைபோலவும் மற்ற மனிதர்கள்
போன்றவர்களும் தான். நாங்கள் வெறும்செய்திகளும், இறப்புகளும் மட்டுமல்ல.
இஸ்ரேல் எங்கள் மீது அதி நவீன
வான்வழி மற்றும் கடல் வழி தாக்குதல்நடத்துகிறது. கூட்டம் மிகுதியானகேம்புகள், பள்ளிக்கூடங்கள்,
அடுக்குமாடி குடியிருப்புகள்,
பள்ளிவாசல்கள், சேரி பகுதிகள்
என்று விமானப் படையோ, ராணுவமோ,
எதிர்த்து தாக்கும்
ஆயுதங்களோ என்று எந்த விதமான எதிர்ப்பும் இல்லாத
இடங்களை தாக்கிவிட்டு அவர்கள்
இதை போர் என்று உலகிற்கு பிரகடனம்செய்கின்றனர்.
இது 'போர்' அல்ல
'கொலை'. நாங்கள் மறுமைக்காக
சோதிக்க இவ்வுலகிக்கு அல்லாஹ்வினால்
அனுப்பப்பட்டோம் என்ற
நம்பிக்கை கொண்டவர்கள் என்பதுக்காக எங்களை உலக நாடுகள் கைவிட்டநிலையில் அல்லாஹ்கை விடமாட்டான்.
எங்களைப்போன்று நம்பிக்கை கொண்ட மக்கள் வாழும் நாடுகள்
ஏன் வாய்மூடி மௌனம்காப்பது.
அல்லாஹ் நாளை மறுமையில்
உங்களிடம் கேட்டுத்ததான் ஆகுவான்என்பதை மறந்து விட்டீர்களா ?
நீங்கள்மூன்றாம் நிலை போராட்டம் செய்யும்
இடத்தில் இல்லை முதலில்
நின்று உங்களது மறுமைக்காக
போராடும் மார்க்கத்தை பின்பற்ற
வில்லையா ?
சகோதரிகளின் அழுகுரல்கேட்டல் இப்படிதான் இழுத்து மூடி கொண்டு ஊமையாகவும் செவிடர்களாகவும் ஊனமுற்றவர்களாகவும் இருப்பீர்களா?

இவர்களின் கண்ணீருடன் நாளை
மறுமையில் அல்லாஹ்விடத்தில்
முறையிடும் போது நாம் என்ன
பதில் வைத்திருக்கிறோம் சகோதர்களே !

அவர்களுக்காக நாம் அடைந்துள்ள
இந்த நோன்பை பயன் படுத்தி அதிக
அதிகம் எல்லாம் வல்ல அல்லாஹ் விடம் கண்ணீருடன் கையேந்துவோம் அவனையன்றி
யார் நமக்கு உதவ முடியும்.


No comments:

Post a Comment

சகோதரர்களே உங்கள் கருத்துகளை பகிரலாமே